முதல் அலை : சிறுகதை : அராத்து

கீழே உள்ள அராத்துவின் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுதான் இன்றைய வாழ்க்கை. இதுதான் இன்றைய ஆண் பெண் உறவு. இதுதான் இன்றைய ஆண்களின் பெண்களின் நிலை. எல்லோருக்குமான பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை இப்படித்தான். நான் சொல்வதன் நியாயம் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் புரியாது. இளைஞர்களுக்குப் புரியும். ஆண்களுக்கும் பெண்களுக்கும். படித்துப் பாருங்கள்.

சாரு

***

முதல் அலை: சிறுகதை: அராத்து

“மட்டமான மருத்துவமனை. பணம் புடுங்குவது ஒன்றே குறிக்கோள். உயிர்களையும் உடைமைகளையும்  பறிக்கும் மருத்துவமனை.“

அதிகாலை 6 மணிக்குப் புரண்டு படுத்த அஸ்வத்தாமன் அனிச்சையாக மொபைலை எடுத்துப் பார்த்தான். மேற்கண்ட கமெண்டைப் பார்த்துப்  பதற்றமானான். தூக்கம் சரேலென்று ஓடிப்போனது.

“பொத்தாம் பொதுவாகப் பேசக்கூடாது. உங்களுக்கு ஏதேனும் கசப்பான அனுபவங்கள் இருப்பின் ஆதாரத்துடன் சொன்னால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்தொற்றான இந்தக் கொரோனா காலத்தில் நல்ல முறையில் மருத்துவ சேவையாற்றி வரும் எங்கள் மருத்துவமனையைப் பற்றி ஆதாரமில்லாமல் அவதூறாக எழுதி பொதுமக்களிடம் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம்.“

இப்படி ஒரு பதிலுரையை டைப் செய்துவிட்டு கைபேசியைத் தூக்கி விசிறினான். மற்ற ஃபேஸ்புக் பேஜ் அட்மின்களாக  இருந்தால் இந்த கமெண்டை நீக்கிவிட்டுப் போயிருப்பார்கள் . அஸ்வத் அப்படியல்ல. மிக மிக புத்திசாலித்தனமான அட்மின். டெக்னிக்கலாகவும் சிறந்தவன், மனிதர்களை ஆன்லைனில் கையாளுவதிலும் நிபுணன். அதனால்தான் இவன் வேலை செய்த பழைய கம்பனி

சீ.இ.ஓ. இந்த மருத்துவமனைக்கு இவனைத் தேடிப்பிடித்து வேலைக்கு அழைத்திருந்தார்.

வேலைக்கு வந்து சேர்ந்த அன்றே விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது அஸ்வத்துக்கு. கொரோனாவுக்கு என்று தனியான மருத்துவமனை ஒன்றை அமைத்திருந்தார் சீ.இ.ஓ. அதைப் படம் எடுப்பதற்கும், விவரங்கள் தெரிந்து கொள்வதற்கும் தன் குழுவோடு அங்கே சென்றிருந்தான். உள்ளே அனுமதி இல்லையென்பதால் வெளியே இருந்து புகைப்படம் மற்றும் விடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது மாருதி ஆம்னி ஆம்புலன்ஸ் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஆவேசமாக இறங்கிய ஒரு கோபக்கார இளைஞன் நன்கு அழகாக, தொழில் நேர்த்தியுடன் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு உடலை ஒற்றை ஆளாக இறக்கி மருத்துவமனை வரவேற்பரையில் தொப்பென்று போட்டான்.

நீல நிறத்தில் கட்டப்பட்டிருந்த அந்தப் பொதி அமைதியாகத் திரும்பிப் படுத்துக்கொண்டது. மருத்துவமனையை விடியோ எடுத்துக்கொண்டிருந்த அஸ்வத் குழுவின் கேமராமேன் விவேகம் அதைப் படம் பிடிக்க ஆரம்பித்தான். இதைப்பார்த்த அந்தக் கோபக்கார இளைஞன் கேமரா அருகே வந்தான். தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பது போல அவனே ஒரு கோணம் பார்த்து நின்று கொண்டு பேச ஆரம்பித்தான்.

“இதை எங்க அம்மான்னு சொல்லி குடுத்துருக்காங்க. டென்சன்ல நான் கவனிக்கல, ஊர்ல போய்தான் டவுட் வந்துச்சி. எங்க அம்மா குள்ளம். இத்தப் பாருங்க, 6 அடி நீட்டுக்கு இருக்கும் போலருக்கு . மூஞ்சை பிரிச்சி காட்டச் சொல்லுங்க, இல்லன்னா குள்ளமான எங்க பாடியை குடுக்கச் சொல்லுங்க. காசு வாங்குறீங்கல்ல… அவங்கவங்க பாடியை அவங்களுக்குக் குடுக்கத் தெரியாதா?“

அதற்குள் நிர்வாகத்தில் இருந்து சிலர் வந்து விட்டனர். கூட்டம் கூடிவிட்டது. நிர்வாக ஆட்களில் வந்தவர்களிலேயே சீனியர் அக்கவுண்ட்ஸ் மேனேஜர் என்பதால் அவர் பேச ஆரம்பித்தார்.

“முதல்ல கேமராவை ஆஃப் பண்ணு”  என்று விவேகத்தைப் பார்த்துக் கத்தினார்.

“எங்க பாஸ் சொன்னாதான் ஆஃப் பண்ணுவேன்“ என்று பதில் சொன்னான் விவேகம்.

“அதெல்லாம் இருக்கட்டும், ஆஃப் பண்ணாத, எல்லாரும் பாக்கட்டும்“ என்றான் கோபக்கார இளைஞன்.

“யார்யா உன் பாஸு?” அக்கவுண்ட் மேனேஜர் எகிற,

அஸ்வத் நகர்ந்து விவேகத்திடம் சென்று பின்னால் போகப் பணித்தான். சைகையாலேயே மேனேஜருக்கு ஸாரி தெரிவித்தான்.

“தம்பி… இது உங்க அம்மாதான். தேவையில்லாம பிரச்சனை பண்ணக்கூடாது. இன்னும் கொஞ்சம் பாடி காத்துகிட்டு இருக்கு. எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணனும் . எல்லா பாடிக்கும் அவசரம் இருக்கு. புரிஞ்சிக்கோங்க” என்றார்.

“இதான் எங்க அம்மாவா? சரி அப்ப மூஞ்சை தொறந்து காட்டுங்க!“

“கவர்மெண்ட் ப்ரோட்டோகால் படி ஒரு தடவை கட்டியாச்சின்னா அப்புறம் தொறக்கக் கூடாது. இதை  நீங்க திரும்ப எடுத்துட்டு வந்ததே தப்பு“

“மூஞ்சை பாக்காம நான் நம்பமாட்டேன், இது எங்க அம்மா இல்ல. என்னை பெத்து வளத்து ஆளாக்கின எங்கம்மா பாடி எனக்குத் தெரியாதா? யாரை ஏமாத்தறீங்க… அதான் காசு வாங்க மட்டும் தெரியிதுல்ல?”

அக்கவுண்ட் மேனேஜருக்கு நிர்வாகம் சார்பாக பேரிடர் கால மேலாண்மை சம்பந்தமாக எப்போதோ நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை நினைவுக்கு வந்தது. அவர் தெம்பானது அவர் உடல்மொழியிலேயே தெரிந்தது.

‘எந்த ஒரு சிக்கலையும் நீடிக்க விடக்கூடாது, விரைவாக முடிவெடுத்து சடுதியில் யோசித்து, இருக்கும் ஆட்களை வைத்துப் பிரச்சனையை முடிக்க வேண்டும் அல்லது பிரச்சனையை வேறு திசையில் திருப்ப வேண்டும்’ ஒரு மாதிரி குத்துமதிப்பாக நினைவுக்கு கொண்டு வந்த அவர்,

“இந்த பாடியை யாருப்பா பேக் பண்ணது?“ என்று சவுண்ட் விட்டார்.

இந்த சத்தம் பலர் மூலம் விறுவிறு எனப் பரவி, மதிவாணன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். வந்த வேகத்துக்கு,

“சார் பேக்கிங்க் எல்லாம் சுத்தமா இருக்கும். எங்க இருந்து,  எவ்ளோ ஒசரத்துல இருந்து போட்டாலும் பிரியாது… பாடி வெளிய தலைகாட்டாது“ என்றான்.

“இந்த பார்ஸல் இவரோட அம்மாதானப்பா? தம்பி பிரச்சனை பண்றாப்ள… நீயே சொல்லு.“

“ஆமா சார்., நாந்தான பேக் பண்ணேன், எனக்குத் தெரியாதா? எல்லா பார்ஸலும் எனக்கு அத்துப்படி சார்.“

“ஹலோ எங்க அம்மா குள்ளம், இது எவ்ளோ நீளமா கெடக்கு பாருங்க.“

“தம்பி, செத்துப் போய்ட்டாங்கன்னா பாடி உப்பிடும்பா… நாங்க என்னாதான் டைட்டா கட்னாலும் பாடி உப்புறதை தடுக்க முடியாது. அது கட்டை மீறி உப்பும்.“

“பாடி உப்புறது எங்களுக்கும் தெரியும். நாங்க என்ன பொணம் பாக்காத ஆளுங்களா? உப்புனா சைட்லதான உப்பும்? நீட்டா உப்பிகிட்டே போவுமா?“

“அது எக்ஸ்ட்ரா வா பஞ்சி எல்லாம் வச்சி கட்னதுப்பா, பாடிக்கி சேப்டி முக்கியம் இல்ல?“

“யோவ் என்னா வெளாடறீங்களா? பஞ்சி வச்சாங்களாம் பஞ்சி, பஞ்சி மாதிரி மெத்துன்னா இருக்கு? கல்லாட்டம் கனமா கெடக்கு… இந்த ஏமாத்தற வேலைல்லாம் வேணாம். பணம் வாங்கினீங்கல்ல., ஒரிஜினல் பாடியை குடுத்துடுங்க, வாங்கிட்டுப் போய்ட்டே இருப்பேன்.“

“தம்பி பிரச்சனை வேணாம். இது உங்கம்மா பாடிதான். உங்கம்மா பாடியை வச்சிகிட்டு நாங்க என்ன செய்யப்போறோம்?”

“மாத்திக் குடுத்து இருப்பீங்க… அவங்க அட்ரஸையாவது குடுங்க., நான் போய் மாத்திக்கிறேன்“

“இது என்ன எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மாதிரி பேசறான்“ என்று முணுமுணுத்தான் அஸ்வத்.

எந்தத் தீர்வும் எட்டப்படாததால், “ஆளுங்களைக் கூட்டிட்டு வரேன், அப்பதான் சரிப்படுவீங்க” என்று கத்திவிட்டு பாடியை அங்கேயே போட்டுவிட்டுப் போய்விட்டான் அந்தக் கோபக்கார இளைஞன்.

விஷயம் சீ.இ.ஓ.வுக்குப் போனது. அவர் அதை மருத்துவமனையின் முதலாளியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். முதலாளி ஒரு முன்னாள் அரசியல்வாதி. மாஜி அமைச்சர்.

“அப்ப பாடியை மாத்திட்டீங்க?“ என்று ஒரு வார்த்தை மட்டும் கேட்டார் முதலாளி.

“மாத்திட்டாங்கதான்  போலருக்கு சார்“ என்றார் சீ.இ.ஓ.

முதலாளி இரண்டு நிமிடத்தில் ஒரு தீர்வளித்தார். ஒரு போன் நம்பர் கொடுத்தார்.

அந்த பாடி ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதற்குள் அங்கே “அன் க்ளெய்ம்ட் பாடி“ சர்டிஃபிகேட் வந்து சேர்ந்திருந்தது. எரிப்பதற்குத் தேவையான எல்லா டாகுமெண்டும் வந்து சேர்ந்துவிட்டன. பிரச்சனை சுலபமாக முடிந்தது.

அந்தக் கோபக்கார இளைஞன் மீண்டும் நான்கு பேரோடு வந்தபோது, அவனிடம் சாம்பல் குடுவை மட்டும் கொடுக்கப்பட்டது.

“கொரோனா பாடியை ரொம்ப நேரம் வச்சிருக்க முடியாது. அதனால கவர்ன்மெண்டே எரிச்சிடிச்சி… இந்தாங்க அஸ்தி!“ என்று கொடுக்கப்பட்டது.

“அடுத்த வாரம் போய் டெத் சர்டிஃபிகேட் வாங்கிக்கோங்க” என்றும் சொல்லப்பட்டது.

குண்டு, ஒல்லி, நீளம், குள்ளம் என ஏதும் அஸ்தியில் கண்டுபிடிக்க முடியாததால் அந்த இளைஞன் வெறுப்புடன் திரும்பிச் சென்றான்.

ஹேப்பி கஸ்டமராக அந்த இளைஞன் போட்டோவை அஸ்வத் ஃபேஸ்புக்கில் ஏற்றியது அவனுக்குத் தெரியாது.

இந்தச் சம்பவத்தையடுத்து “இங்க வேலை செய்யறது  மத்த கம்பனி மாதிரி இல்ல, ரொம்ப சென்ஸிடிவ். அதனாலதான் உன்னை வேலைக்குக் கூப்ட்டேன்”  என்று சொல்லிய சீ.இ.ஓ. மகர பூஷ்ணம், “ஹோப் யூ வில் மேனேஜ் வெல், ஹாஸ்பிடலை ஃபேமஸாக்கணும், நல்ல நம்பிக்கை உருவாக்கணும், சென்னைல இருந்து கூட இங்க தேடிகிட்டு வரணும்“ என்றார்.

“ஷ்யூர் சார்”  என்றான் அஸ்வத் .

****

கொரோனாவால் இரண்டு மாதம் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்த அஸ்வத்துக்கு மூன்றாவது மாதம் வேலை போயே விட்டது. 

எல்லாமே ஆன்லைன் என்கிறார்கள். ஆனாலும் டிஜிட்டல் மார்கெட்டிங்கில் வேலை பார்த்து வந்த அஸ்வத்துக்கு லாக் டவுனில் வேலை போனது விசித்திரம்தான். இது எல்லாம் மோடியின் கவனத்துக்குப் போவதில்லை. போனால் சரி செய்துவிடுவார்.

“ஏன் சார்” என்று கம்பனி சீ இ ஓ விடம் அஸ்வத் கேட்டதற்கு.,

“நமக்கு நிறைய ஆஃப்லைன் கஸ்டமர்ஸ்  அஸ்வத்“ என்று பதிலளித்த சீ.இ.ஓ., “இனிமே ஆன்லைன்தான் எல்லாமே” என்றார்

அஸ்வத்திடம் சேமிப்பு ஏதுமில்லை. யாரிடம்தான் சேமிப்பு உள்ளது? அரசிடம் உள்ளதா? எல்லோரும் சேமித்து வைத்தால் தெரியும் சேதி.

ஃப்ரீலான்ஸர், ஆன்லைன் கன்ஸல்டிங்க், டிஜிட்டல் மார்கெட்டிங்க் என என்னென்னவோ செய்து பார்த்தான் அஸ்வத்.

“மாசம் 500 தரேன், 800 தரேன்“ என சிலர் டிஜிட்டல் மார்கெட்டிங் செய்யச் சொன்னார்கள். அதிலும், மேக்கப் போடும் பிஸினஸ் செய்யும் ஒரு பெண்,

“ஒரு பொண்ணு ஒரு இன்ஸ்டா போஸ்டு போடுறதுக்கு ரூ 30 கேக்குது… நீ எவ்ளோ கேப்ப?” என்றாள்.

இதுவரை தன்னுடைய டிஜிட்டல் மார்கெட்டிங் சர்வீஸுக்காக விளம்பரம் கொடுத்த வகையில் மார்க்கிடம் ரூ 12,000/- இழந்திருந்தான் அஸ்வத்.

ஒரு பெரிய ரியல் எஸ்டேட் அதிபர் மாட்டினார். பிரஸண்டேஷன் அனுப்பினான். விடியோ அனுப்பினான். தான் என்னவெல்லாம் செய்வேன், எப்படியெல்லாம் செய்வேன் என விளக்கமாக மெயில் அனுப்பினான்.

அவர் கடைசியாக ஒரே ஒரு ரிப்ளை கொடுத்தார்.

“give me leads, u will be paid“

அவருக்கு பதில் அனுப்பினான்.

“i feel sorry for your wife #payperfuck”

அவர் பிளாக் செய்ததும் ஒரு போஸ்ட் போட்டான்.

போஸ்ட்:-

ஒரு டிஜிட்டல் மார்கெட்டிங் ப்ரொஃபஷனல் என்பவன் மகப்பேறு மருத்துவர் போல. அவன் ஆலோசனைகள் வழங்குவான். நீங்கள்தான் உங்கள் மனைவியை மேட்டர் செய்ய வேண்டும்.

வழக்கமாக அவன் போஸ்டுக்கு வரும் 12 லைக்குகளைத் தாண்டி இதற்கு 43 லைக்குகள் வந்தன. அந்த சந்தோஷத்தில் பியர் அடித்து நிம்மதியாக உறங்கினான். கனவில், “ஏண்டா, பரோட்டா மாஸ்டருக்கு மாதம் 40,000 கொடுக்கிறீர்கள்… டிஜிட்டல் மார்கெட்டிங் என்றால் 300 ரூவா 30 ரூவாவா? என்று சென்னை டிரேட் செண்டரில் ஒரு மேடையில் முழங்கிக்கொண்டு இருக்கிறான். விடியோ கான்ஃபரன்ஸிங்கில் மார்க் கைதட்டுகிறார்.

விடிந்து எழுந்து பார்த்தால் 2 மிஸ்ட் கால்கள்.

அஸ்வத்துக்கு  கேர்ள்ஃபிரண்டுகள் யாருமில்லை. இதுவரை யாரையும் முத்தம் கூடக் கொடுத்ததில்லை. ஒரு முறை நண்பன் அறையில் குடித்துக்கொண்டு இருந்தபோது நண்பனின் கேர்ள்ஃபிரண்ட் வந்தாள். இவன் எதிரிலேயே அவர்கள் இருவரும் புணர்ச்சியைத் தவிர எல்லாம் செய்தார்கள். நீலப்படம் பார்ப்பதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை அன்றுதான்  புரிந்து கொண்டான் அஸ்வத். அஸ்வத்திற்கு  வாந்தி வருவதுபோல இருந்தது.

போதை தலைக்கேறியதும் நண்பன் சொன்னான் “இவன் இதுவரைக்கும் யாரையும் கிஸ் கூட பண்ணதில்ல, நீ வேணா அவனுக்கு ஒரு கிஸ் குடுக்குறியா?”

அவள் தயாரானதும், அவர்கள் சிரிக்க சிரிக்க குளியலறைக்கு எழுந்து ஓடினான் அஸ்வத் . முகம் கழுவிக்கொண்டு வெளியே வந்ததும் அவள் தயாராக நின்று கொண்டு அஸ்வத்தை இழுத்து உதட்டில் முத்தமிட்டாள். அதை நண்பன் மொபைலில் படம் எடுத்தான்.

மரவட்டையை தின்றது போல உணர்ந்ததாக பிறரிடம் சொல்வான் அஸ்வத்.

இந்தப் பின்னணி உள்ள அஸ்வத்துக்கு  எப்போதும் மிஸ்ட் கால்களே வராது. இது ஏதடா வம்பு என்று அந்த நம்பரை அழைத்தான்.

இதற்கு முன் வேலை பார்த்த பழைய கம்பனியின் சீ.இ.ஓ. நம்பர் மாற்றி இருந்தார்.

“அஸ்வத், இது புது நம்பர், பழைய நம்பரும் இருக்கு“ என்றார்.

“சார் குட் மார்னிங் சார்.“

இந்த சீ.இ.ஓ., சிமெண்ட் கம்பெனி, உர கம்பெனி என பணியைத் தொடர்ந்து, அஸ்வத்  இவரிடம் வேலை பார்க்கும்போது பதப்படுத்தப்பட்ட பரோட்டா கம்பனியின் சீ.ஈ.ஓ.வாக இருந்தார்.

“சார், பரோட்டா சாப்டணும்னு நினைச்சா சாப்டணும்“ என்று கம்பனி முதலாளியிடம் அந்த சீ.இ.ஓ. சீரியஸாகப் பேசிக்கொண்டு இருந்தபோது கடந்திருக்கிறான் அஸ்வத்.

அஸ்வத் அந்தக் கம்பெனிக்கு டிஜிட்டல் மார்கெட்டிங் செய்து கொண்டிருந்தபோது,

“அஸ்வத், பரோட்டா இட்லி மாதிரி கிடையாது.  பரோட்டா வேற, தோசை வேற“ என்று ஆரம்பித்து பல மணி நேர லெக்சர் கொடுத்த சி.இ.ஓ. தான் மிஸ்டர். மகர பூஷ்ணம்.

“குட் மார்னிங் அஸ்வத். ஹௌ ஆர் யூ?“ என்று ஆரம்பித்த அந்த சீ.இ.ஓ. “எனக்கு பீபி, சுகர் இருக்கு, ஆனாலும்…“ என்று தொடர்ந்து ஒரு மணி நேரம் அறுத்து, பின் கடைசியாக மேட்டருக்கு வந்தார்.

“நான் இப்ப பூந்தமல்லிக்கும் ஶ்ரீ பெரும்புதூருக்கும் நடுவுல இருக்குற சோலை ஹாஸ்பிடலுக்கு சீ.இ.ஓ.வா இருக்கேன். எனக்கு உன் உதவி தேவைப்படுது. இங்க டிஜிட்டல் மார்கெட்டிங் தேவை… வந்து சேந்துக்க முடியுமா?“ என்றார்.

சம்பளம், என்ன ஏது என எதுவும் கேட்டுக்கொள்ளாமல்,

“ஷ்யூர் சார்“ என்றான் அஸ்வத் அவசர அவசரமாக.

நர்ஸ்களை சைட் அடிக்கலாம் மற்றும் சம்பளம் கிடைக்கும் என்ற அடிப்படையில் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த போதுதான் வெள்ளுடை தேவதைகளாக செவிலியர்களை எதிர்பார்த்திருந்த அஸ்வத்துக்கு  ஏமாற்றமாக இருந்தது. வயலட் கலர், பிங்க் கலர் என பேண்ட் போட்டுக்கொண்டு, 80களின் சினிமாவில்  கிளப்களில் ஆடும் பெண்கள் போல பஃப் வைத்த கையுள்ள சட்டை போட்டுக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கும் செவிலியர்களை அவன் எதிர்பார்க்கவில்லை.  இந்த ஏமாற்றத்தைத் தொடர்ந்துதான் அந்த ‘பாடி’ மாறிய பஞ்சாயத்து அதிர்ச்சி.

இது ஒரு மெடிக்கல் காலேஜ் மற்றும் ஹாஸ்பிடல். இது  பெரிய அளவுக்கு பிரபலமாகவில்லை. தான் தான் இதை பிரபலமாக்கப் போவதாகவும், அதற்கு அஸ்வத்தின் உதவி தேவைப்படுவதாகவும் சீ.இ.ஓ. சொன்னார்.

ரிட்டையர்ட் ஆன அரசியல்வாதி அந்த மருத்துவமனை மற்றும் கல்லூரியை கடுமையான நஷ்டத்தில் ஓட்டிக் கொண்டிருந்தார்.

பாடாவதியான அந்த மருத்துவமனையின் வலைத்தளத்தை நவீனப்படுத்தி, சரசரவென சமூக வலைத்தளப் பக்கங்களை உருவாக்கினான் அஸ்வத். அந்தப் பக்கங்களுக்கு அட்மின் ஆனான். ஜகத்குரு மெடிக்கல் காலேஜ் & ஹாஸ்பிடல் Jagathguru Medical College and Hospital (JMCH) என்று பொதுவாக காலேஜ் மற்றும் மருத்துவமனையைக் குறிப்பிட்டு வந்தார்கள்.

அஸ்வத் தான் மருத்துவமனைக்கு தனி அடையாளம் வேண்டும் என்று சொல்லி , ஜகத்குரு இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (ஜிம்ஸ்)  என்ற பெயரில் தனிப் பக்கங்களை ஆன்லைனில் நிறுவினான்.

கரோனா மற்றும் கோவிட்19 விழிப்புணர்வு போஸ்டுகளைப் போட்டான். டாக்டர்களிடம் கருத்து கேட்கப் போனபோது அவர்கள் வீட்டுக்குப் போகத் தங்களுடைய மருத்துவமனை பேருந்தைப் பிடிப்பதில் குறியாக இருந்தார்கள். விசாரித்துப் பார்த்ததில் அவர்களுக்கு சம்பளம் ஒரு லட்சம் முதல் மூன்று லட்சங்கள் வரை என்பது தெரிந்து பொருமினான் அஸ்வத்.

ஒரு இளம் பெண் மருத்துவர் அந்த வளாகத்திலேயே தங்குவது தெரிந்து அவரிடம் நெருக்கமாக முயன்ற போதுதான், அவருக்கு 18 ஆசாமிகள் பணிவிடை செய்துகொண்டிருப்பது தெரிந்து விரக்தியின் உச்சத்துக்குப் போனான். அதில் 12 பேர் அவரை அக்கா அக்கா என்று அழைத்துக்கொண்டு இருந்தனர்.

மருத்துவமனை கடுமையான நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது அஸ்வத்துக்குத் தெரிந்தது. அஸ்வத்துக்கு மட்டுமல்ல, சீ.இ.ஓ. முதல் வார்டுபாய் வரை அது தெரிந்திருந்தது. அல்ப 300 ரூபாய்க்குத் தங்கள் கிளீனிக்கில் உலகத் தர சிகிச்சை தரும் அதே மருத்துவர்கள், இங்கே 3 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு 300 ரூபாய்க்கு உழைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த மருத்துவமனையை எப்படியும் தூக்கி நிறுத்திவிட வேண்டும் என்று வைராக்கியம் பூண்டான் அஸ்வத். தன்னுடைய மருத்துவமனையாக நினைத்து வேலைகள் செய்தான். வெவ்வேறு திட்டங்களை சீ.இ.ஓ. விடம் பேசி அதை ஆன்லைனில் விளம்பரப்படுத்தினான். மருத்துவமனைக்கு ஒரு சேனல் உருவாக்கி பிரபலப்படுத்தினான். சென்னையில் இருந்தும் சிலர் இந்த மருத்துவமனையைத் தேடி வரும்படி செய்ததில் அஸ்வத் பங்கும் அதிகம். அஸ்வத் போன நேரம் கொரோனாவும் பெருகியது. பொது மருத்துவமனைக்குத் தனியாகவும் கொரோனா மருத்துவமனைக்குத் தனியாகவும் விளம்பரப்படுத்தினான், கவனம் செலுத்தினான்.

கொரோனா புண்ணியத்தில் மருத்துவமனை நன்கு வளர ஆரம்பித்தது. படுக்கைகள் மெல்ல மெல்ல நிரம்ப ஆரம்பித்தன. தமிழ்நாடு முழுக்க இந்த மருத்துவமனை பெயரை அஸ்வத் ஆன்லைனில் கொண்டு சேர்த்ததாலும் ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் அளிப்பதாலும் பெரம்பலூர், ஊத்தாங்கரை, திருப்பத்தூர், மரக்காணத்தில் இருந்தெல்லாம் கொரோனா பேஷண்டுகள் வந்து குவிந்தார்கள்.

அவனுடைய குழுவில் ஏழெட்டுப் பேர் இருந்தாலும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பொதுமக்கள் செய்யும் கமெண்டுக்கு பதிலளிக்கும் பொறுப்பை மட்டும் தன்னிடமே வைத்துக்கொண்டான். அவ்வப்போது கதையின் ஆரம்பத்தில் வந்தது போன்ற கமெண்டும் வரும். ஆனாலும் பதட்டமடையாமல் பதில் அளிப்பான் அஸ்வத். அப்படித்தான் இன்று காலையிலும் பதில் அளித்துவிட்டு, மொபைலை தூக்கிப் போட்டான். தூக்கம் கலைந்ததால் தேநீர் குடிக்கலாம் என்று கொரோனா கேண்டின் நோக்கி பைக்கை விட்டான்.

வழக்கமான மருத்துவமனை கேண்டீனை விட கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்க உருவாகி இருந்த கேண்டீனில் அனைத்தும் தரமாகவும், சுவையாகவும் இருந்தது. அஸ்வத் போனபோது ஆம்புல்ன்ஸ் டிரைவர், முதலாளியின் ஓட்டுநர் என பலதரப்பட்ட வேலையாட்கள் டீ, காபி குடித்துக்கொண்டும், போண்டா பஜ்ஜி, சுண்டல் என அந்த காலை வேளையில் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தார்கள்.

இவனைப் பார்த்ததும் வணக்கம் வைத்த ஆம்புலன்ஸ் டிரைவர் உற்சாகமாகச் சொன்னார்.

“சார் பெட் எல்லாம் ஃபுல்லு தெரியுமா?”

அந்த கேண்டினில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. உற்சாகத்திற்கு முக்கிய காரணம் அங்கே இலவசமாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.

அஸ்வத் டீ குடிக்க ஆரம்பிக்கையில் மொபைல் டிங் என்றது. எடுத்துப் பார்த்தான்.

“அவதூறு அல்ல, என் தந்தை உங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுதான் இறந்து போனார். அதில் உங்கள் மருத்துவமனை நிர்வாகம் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை. இன்னும் மரண சான்றிதழ் கூட தரவில்லை. யாரைக் கேட்டாலும் ஒழுங்காக பதில் சொல்வதில்லை“ என்று இவன் சற்று முன்பு எழுதியிருந்த கமெண்டுக்கு பதில் வந்திருந்தது.

இனி இதைப் பொதுவில் விவாதிக்க வேண்டாம் என்று தன் வாட்சப் நம்பரை பதில் கமெண்டில் போட்டு, “உங்கள் பிரச்சனைகளை இதில் சொல்லவும், முடித்து வைக்க முயல்கிறேன். சிரமத்திற்கு வருந்துகிறேன்“ என்று போட்டுவிட்டு ஆறிய தேநீரை மடக்கென்று கவிழ்த்துக்கொண்டான் அஸ்வத்.

அன்று முழுக்க இந்த ஐடியிடம்தான் மாரடிக்க வேண்டியிருக்கும் என்பது தெரியாமலேயே அலுவலகம் வந்தான். அலுவலகத்தில் வேலைகளைப் பார்வையிட்டு விட்டு, கட்டளைகளைக் கொடுத்துவிட்டு, சாய்ந்து அமர்ந்து கொண்டு தன் மொபைலை எடுத்தான்.

அலுவலகப் பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தும் வாட்ஸப் ஃபார் பிஸினஸ் நோட்டிஃபிகேஷன் காட்டியது.

“குட் மார்னிங், ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டது நான்தான் . என் தந்தை அங்கே அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டார்.“

“மிகவும் வருந்துகிறேன். நான் தங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?”

இந்த மெசேஜை அடித்துவிட்டு அந்த நம்பரின் ப்ரொஃபைலைப் பார்த்தான். பெண். இளம்பெண்ணா என்று யூகிக்க முடியவில்லை. ஆனால் இடை ஒடித்து சூரிதாரில் பால்கனியில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள்.

“என் தந்தை இறந்து விட்டார்.“

“சாரி, சாரி.“

“அவரிடம் இருந்த மொபைல் போனை எங்களுக்குத் திருப்பிக் கொடுக்கவில்லை.“

“சாரி, நான் முயற்சிக்கிறேன்.“

“அவர் வைத்திருந்த பர்ஸ், டெபிட் கார்ட் ஏதும் திரும்பத் தரவில்லை.“

“சாரி. விசாரித்து பதில் அளிக்கிறேன்.“

“டெத் சர்டிஃபிகேட் கேட்டால் இழுத்தடிக்கிறார்கள். ஒழுங்கான பதில் இல்லை.“

“அதையும் முடித்துக் கொடுக்கிறேன்.“

“ரொம்ப நன்றி, நீங்கள்தான் ஆறுதலாக பொறுப்பாக பேசுகிறீர்கள்.“

“நன்றி, ஒவ்வொன்றாக விசாரித்து உங்களுக்கு பதில் அனுப்புகிறேன்.“

“நன்றி.“

“ஃபேஸ்புக்கில் உங்கள் கமெண்டை நீக்க முடியுமா?”

“நீங்கள் முடித்துக் கொடுங்கள், யோசிக்கிறேன்.“

“நிச்சயமாக.“

மருத்துவமனையின் பேருக்குக் கெட்ட பெயர் வந்துவிடும் சிக்கலாக இருக்கிறதே என்று யோசித்த அஸ்வத் மகர பூஷ்ணத்தை அணுகினான். மகர பூஷ்ணம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அஸ்வத் செல்லப்பிளை என்பதால் இதைக் காது கொடுத்துக் கேட்டார். ஒரு மணி நேரத்தில் விசாரித்துவிட்டுச் சொல்கிறேன் என்று அனுப்பி வைத்தார்.

மதிய உணவுக்கு அஸ்வத்தை அழைத்தார் மகரபூஷ்ணம்.

கொரோனா கேண்டினில் இருந்து சிக்கன் பிரியாணியும், மட்டன் சுக்காவும் வந்திருந்தது.

“சார், சிக்கன் பிரியாணின்னாலும் கொஞ்சம் வெஜிடபுளும் போடச் சொல்லுங்க“ என்றான் அஸ்வத்.

உடனே போன் செய்த மகர பூஷ்ணம், “ஏம்பா பாரதிராஜா… சிக்கன் பிரியாணில இனிமே கொட மொளகா, ப்ரொக்கோலி இதெல்லாம் சேத்துப் போடு என்னா, WHO அப்டிதான் பரிந்துரை பண்ணிருக்கு“ என்றார்.

அஸ்வத்தைப் பார்த்து, “யார் யார் கிட்ட எப்டி சொன்னா வேலை நடக்குமோ அப்டி சொல்லணும்“ என்று சொல்லிவிட்டுக் கண்ணடித்தார்.

செம சார் என்பது போல தலையசைத்தான் அஸ்வத்.

“சும்மா இல்ல அஸ்வத், 30 வருஷ எக்ஸ்பீரியன்ஸ்!“ என்ற மகரபூஷ்ணம்,

“விசாரிச்சிட்டேன், பெரிய பிரச்சனை ஒண்ணும் இல்ல. டெத் சர்டிஃபிகேட் மட்டும்தான் பிரச்சனை. அதும் கொரோனா பேஷண்ட்ஸை கவனிச்சிட்டு இருக்குறதால இந்த க்ளெரிக்கல் வேலை செய்ய ஆள் இல்லை. அதுக்கும் ஆள் போட்டுட்டேன். ரெண்டு நாள்ள அவங்க டெத் சர்டிஃபிகேட் வாங்கிக்கலாம்“

“சூப்பர் சார், தேங்க்ஸ். அந்த மொபைல், டெபிட் கார்ட்?“

“அதுவா… அது, பேஷண்ட்ஸை அட்மிட் பண்ணும் போதே உடமைகள் ஏதும் இருக்கக் கூடாதுன்னு சொல்லி சைன் வாங்கிக்கறோம்.“

“இவர் விஷயத்துல வாங்கி இருக்கோமா சார்.“

“இல்ல… ஏன்னா இவர் தனியா அவராவே வந்து அட்மிட் ஆயிருக்கார்.”

“ஓஹ்.“

“ஓப்பனா சொல்றேனே… கொரோனா வார்டுக்குள்ள யாரும் போறதுக்கு ரெடியா இல்ல அஸ்வத். ஸ்பெஷலிஸ்ட் யாரும் கொரோனா வார்டுக்குள்ள போறதில்ல. போற எம் பி பி எஸ் டாக்டருக்கும் டபுள் சேலரி போட்டிருக்கேன். நர்ஸ், வார்ட் பாய் எல்லாருக்கும் டபுள் சேலரி. மேனேஜ்மெண்டும் உள்ள யாரும் இல்ல. அதுலயும் யாராவது இறந்துட்டா பாடியை பேக் பண்ண ஆள் கெடைக்கறது கஷ்டமா இருக்கு. நாலைஞ்சி மடங்கு சம்பளம் குடுத்துதான் பேக் பண்ண சொல்றோம். அதையும் கண்காணிக்க எல்லாம் ஆள் இல்லை. அதை பேக் பண்றவனே மொபைல், டெபிட் கார்ட் எல்லாம் எடுத்திருப்பான். ஆனா அவன்ட்ட கேட்டா செத்த உடனே அப்படியே சுத்தி பேக் பண்ணிட்டேன் சார், எல்லாம் பேக்கிங்க்குள்ளயே இருக்கும் சார்னு சொல்றான். இவனை சஸ்பெண்ட் பண்ணா பாடியை பேக் பண்ண ஆள் இல்ல.“

“இப்ப என்ன சார் பண்றது?”

“இனிமே வேல்யூபிள்ஸ் இருந்தா அட்மிஷன் கிடையாதுன்னு ரூல் போட்டுட்டேன். ஆனா மொபைல் போன் அலோ பண்ணாம இருக்க முடியாது. நாம உயிரைக் காப்பாத்தறதுக்கு சிஸ்டம் போட முடியுமா, மொபைலைக் காப்பாத்த சிஸ்டம் போட முடியுமா?”

“அந்தப் பொண்ணுக்கு என்ன சொல்லட்டும் சார்?”

“டெத் சர்டிஃபிகேட் ஏற்பாடு பண்ணிடலாம். மொபைல்… அப்புறம் டெபிட் கார்ட்… போலிஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணிக்கச் சொல்லுங்க.“

“சேட்டிஸ்ஃபை ஆவ மாட்டாங்க சார்.“

“சரி… அடுத்து அவங்க ஃபேமிலில யாருக்காச்சும் கொரோனா வந்தா 50 % டிஸ்கவுண்ட்னு சொலிடுங்க. பிராமிஸ்… நான் பண்ணித்தரேன், என் எக்ஸ்பீரியன்ஸ்ல சொல்றேன், சுடுகாட்ல கூட டிஸ்கவுண்ட் குடுத்தாத்தான் நம்ம மக்கள் சேட்டிஸ்ஃபை ஆவாங்க. டிஸ்கவுண்டை தாண்டி சேட்டிஸ்ஃபை பண்ற விஷயம் வேற ஏதுமில்லை.“

****

அஸ்வத் அப்படிச் சொல்லவில்லை.

டெத் சர்டிஃபிகேட் உத்திரவாதம் கொடுத்தான்.

அவளுடைய அப்பாவின் மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டான். அதை அடித்துப் பார்த்தால் ரிங்க் போனது. மீண்டும் முயற்சித்தால் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

“டார்லிங், உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கிறேனடா கண்ணே. எப்போது வந்து என் தாகத்தை தீர்த்து வைக்கப் போகிறாய்”  என அவள் அப்பாவின் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் புதிய எண்ணில் இருந்து மெசேஜ் அனுப்பினான்.

அவளிடம் பேங்குக்கு சென்று அப்பாவின் டெபிட் கார்டை பிளாக் செய்யச் சொன்னான்.

அதற்கும் மேனேஜர் டெத் சர்டிஃபிகேட் கேட்பதாகச் சொன்னவள் தன் பெயர் சிந்து என்று சொன்னாள். மேடம் என்று அழைக்க வேண்டாம், சிந்து என்றே அழைக்கலாம் என்றாள்.

“ஓக்கே மேடம்“ என்று மெசேஜ் அனுப்பிவிட்டு அடுத்தடுத்த கமெண்டுகளுக்கு பதில் அளிப்பதில் மும்முரமானான்.

அன்று மதியம் சிக்கன் பிரியாணியில் கொடை மிளகாயும், முட்டை கோஸும் இருந்தது. கேண்டினில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஆம்புலன்ஸ் டிரைவர் வருத்தத்துடன் சொன்னார்,

“சார், கேஸ் கொறைஞ்சிக்கிட்டே வருது… இருக்குற கேஸ்தான், புதுசா எதுக்கும் சவாரி போகலை சார்.“

“ம்ம்…“ என்றான் அஸ்வத்.

“குவாரண்டைன் வார்ட் காலி, ஐஸோலேஷன் வார்ட்ல கொஞ்சம் பேர் இருக்காங்க. மெயின் கொரோனா வார்ட்ல மட்டும் தான் பேஷண்ட்ஸ்” என்றார்.

“ம்ம்.“

***

இரண்டொரு நாட்களில் மகரபூஷ்ணம் தொடர்பு கொண்டு “டெத் சர்டிஃபிகேட் நம்ம சைட்ல இருந்து க்ளியர் பண்ணியாச்சி, அவங்களை போய் வீ.ஏ. ஓ. கிட்ட பேசி வாங்கிக்கச் சொல்லுங்க” என்றார்.

“ஹாய் மேடம், டெத் சர்டிஃபிகேட் நீங்க வீ .ஏ.ஓ. கிட்ட பேசி வாங்கிக்கலாம்“

“தேங்க்யூ, அந்த மொபைல்?”

“டிரை பண்ணேன். ஸ்விட்ச்ட் ஆஃப்ல இருக்கு.“

“டெபிட் கார்ட்?”

“பிளாக் பண்ணுங்க.“

“உங்க பேரை தெரிஞ்சிக்கலாமா?”

“சிரஞ்சீவி.“

“தேங்க்யூ சிரஞ்சீவி… நீங்க என்ன பண்றீங்க?”

“டிஜிட்டல் மார்கெட்டிங்க் அட்மின் மேடம்.“

“ஹலோ, நீங்க சிந்துன்னு சொல்லலாம்.“

“ஓக்கே மேடம்.“

“சிந்து.“

“ஓக்கே சிந்து.“

“யாருமே எனக்கு ஹெல்ப் பண்ணலை, நீங்கதான் ஹெல்ப்ப்ப்ஸ்  பண்ணீங்க, தேங்க்ஸ் சிரஞ்வீ .“

“மோஸ்ட் வெல்கம் சிந்து.“

🙂

*****

“ஹாய் சிரஞ்சிவீ.“

“ஹாய் சிந்து.“

“டெத் சர்டிஃபிகேட் வாங்க உங்க ஹாஸ்பிடலில் என்னமோ டாகுமெண்ட் வேணுமாமே?“

“யெஸ், நீங்க வந்து கலக்ட் பண்ணிக்கலாம்.“

“நீங்க வாங்கி அனுப்ப முட்யிமா?“

“நான் டிஜிட்டல் மார்கெட்டிங்க்தான். நீங்கதான் வாங்கிக்கணும்.“

“ப்ளீஸ் பா“

“ப்ளீஸ், நான் அப்டி செய்ய முட்யாது”

“ஓக்கே தேங்க்ஸ்… நீங்கதான் என் ஹோப்“

“தேங்க்ஸ்“

*****

“ஹாய்“

“ஹாய்“

“டாக்குமெட் குட்க்கலை. நான் ஆளனுப்பினேன்“

“வெயிட்“

அஸ்வத் மகர பூஷ்ணத்தின் அலுவலகத்துக்கே சென்றுவிட்டான். மகர பூஷ்ணம் விசாரித்துவிட்டுச் சொன்னார்.

“அஸ்வத், இது ஏதோ ஃபேமிலி பிராப்ளம் போலருக்கு. அவ அண்ணன் வந்து டாகுமெண்ட் வாங்கிட்டுப் போயிட்டான். அவ அண்ணன்கிட்டயே பாடியை குடுக்கும்போது அவரோட வேல்யுபிள்சை கொடுத்ததாச் சொல்றாங்க . அதை இப்பதான் சொல்றாங்க. நம்ம கிட்ட சிஸ்டம் ஒழுங்கா இல்லாததால அப்ப தெரிய வரலை. எதோ சொத்துப் பிரச்சனை போலருக்கு. யூ லீவ் திஸ் இஷ்யூ. மத்ததைப் பாரு. இதுல எஃபர்ட் போட வேணாம். என் எக்ஸ்பீரியன்ஸ்ல சொல்றேன்“ என்றார்.

அஸ்வத்துக்குத் தலை சுற்றியது.

“ஹாய்“

“ஹாய் சிரஞ்சிவீ”

“டாக்குமெண்டை உங்க அண்ணன் வாங்கிட்டுப் போயிட்டார்“

“ஹலோ யார் வந்து கேட்டாலும் குடுத்தடுவிங்களா?”

“மேடம், சரி பாத்துதான் குடுத்து இருப்பாங்க“

“நான்தான் அவருக்கு எல்லாம். இப்ப எங்க அப்பா இல்ல“

“சாரி மேடம் “

“இட்ஸ் ஓக்கே , அப்பா அக்கவுண்ட்லருந்து பணம் பொய்ட்டே இருக்கு“

“பேங்ல சொல்லி ஸ்டாப் பண்ணுங்க“

“டெத் சர்டிஃபிகேட் கேக்கறாங்க, ஐ வொர்ரி“

“உங்க அண்ணன் வாங்கிட்டு பொயிட்டார்“

“இல்ல, அவன் என் அண்ணனே இல்ல”

“போலீசுக்கு போங்க“

“அப்பாவே போயிட்டார்”

“சாரி மேடம்“

“சிந்து“

“சாரி சிந்து“

“இட்ஸ் ஓகே டேக் கேர் சிரஞ்சிப்”

*****

“ஹாய் சிரன்ச்ஜீவி“

“ஹாய்“

“எங்கப்பாவோட மெடிக்கல் பில்ஸ் கிடைக்குமா?“

“ஷுர் மேடம்.“

அஸ்வத் கொரோனா மருத்துவமனை அக்கவுண்ட் மேனேஜர் மற்றும் தேவையானவர்களிடம் பேசி அந்த பில்லை எடுத்து சிந்துவுக்கு அனுப்பினான். அந்த பில் 8 பக்கங்களுக்கு வந்தது.

அவள் ஒவ்வொரு ஐட்டமாகக் குறிப்பிட்டு இதற்கான விளக்கமான பில் கிடைக்குமா என்றாள்.

“மேடம், என்னால் முடிந்த வரை செய்திருக்கிறேன். ஒரு மருத்துவமனையின் சமூக வலைத்தளப் பக்கத்தை நிர்வகிப்பவன் எந்த அளவுக்கு செய்ய முடியுமோ அதை விட அதிகம் செய்திருக்கிறேன். இதற்கு மேல் வேண்டுமென்றால் நீங்கள் தகுந்த டிபார்ட்மெண்டை அணுகவும்“ என்று மெசேஜ் போட்டான்.

“உங்களை நம்பினேன். நீங்களும் நம்பிக்கை துரோகி என்று காட்டி விட்டீர்கள்.“

“மன்னிக்கவும், நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்.“

“இல்லை, நீயும் உன் புத்தியைக் காட்டிவிட்டாய். உனக்காகத்தான் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏதும் போடாமல் இருந்தேன். நாளை உன் மருத்துவமனையைக் கிழித்துத் தொங்க விடுகிறேன் பார்“

“சாரி, நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டேன்“

“யூ ஆர் எ சீட்“

**********

எரிச்சலுடன் மாலை கொரோனா கேண்டினில் டீ குடிக்கச் சென்றான்.

“எப்டி கலகலன்னு இருந்த இடம்… பேஷண்ட்ஸ் கொறைஞ்சிட்டாங்க சார். அடுத்த வாரத்துல இருந்து கொரோனா கேண்டீன் கெடையாதாம் சார்“ என்று வருத்தத்துடன் சொன்னார் முதலாளியின் ஓட்டுநர்.

டீ குடித்த கையோடு அஸ்வத்துக்கு பியர் அடிக்க வேண்டும் என்று தோன்றியது. டாஸ்மாக் திறந்து டோக்கன் போட்டுக் கொண்டிருந்தார்கள். பைக்கை எடுத்துக்கொண்டு நான்கு கிலோ மீட்டர் ஓட்டி டாஸ்மாக்கை அடைந்தான். டோக்கன் எல்லாம் தேவையில்லை. கூட்டமும் இல்லை. இயல்பு வாழ்க்கை திரும்பி இருந்தது போலப் பட்டது.

ஒரு ஃபுல் பகார்டியும் ஒரு நான்கு பியர்களும் வாங்கி பின் பையில் போட்டுக்கொண்டான்.

“இன்று பார்த்துக்கொள்ளுங்கள் டீம்“ என்று குழு மெசேஜ் அனுப்பிவிட்டு மருத்துவமனை தனக்கு ஒதுக்கியிருந்த குடியிருப்புக்கு வந்தான்.

பகார்டியா, பியரா என்றே அரை மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தான். குளித்து முடித்துவிட்டு பகார்டி என முடிவெடுத்து இரண்டு ரவுண்ட் ஊற்றிக்கொண்ட பின் நிதானத்துக்கு வந்தான்.

“ஹாய்“

மொபைல் ஒளிர்ந்தது

“ஹாய்“

“சாரி“

“ஓக்கே சிந்து“

🙂

“எதுக்கு சிர்ப்பு”

“இல்ல மேடம் இல்ல சிந்து“

“கூல்“

மூன்றாவது ரவுண்ட் போனது.

“சாரி, ஐ லாஸ்ட் மை டேட். எனக்கு அவர்தான் எல்லாம்“

“அண்டர்ஸ்டுட்“

“ஐ மிஸ் ஹிம்“

“ம்ம்”

“பட்,  நீ ஒரு ஹோப் , எனக்கு யாருமில்ல“

“நான் என் வேலையை செஞ்ட்டேன்“

“யெஸ் …இப்ப யோசிக்கிறேன் , நீ இல்லன்னா …ஹாரிபி:ள்”

“மை டூட்டி“

“அப்பாதான் எனக்கு எல்லாம்… பட் இப்ப… ரொம்ப கஷ்டம் … அதான் உன்னை…“

“ஓக்கே“

“சாரி“

“ஹேய் …கூல்“

“எனக்கு அப்பா வேணும்…”

“சாரிமா… அப்பா …ஆம் சாரி“

“எனக்கு அப்பா அவ்ளோ புடிக்கும்…அவர்ம் உன்னை மாதிரிதான்”

“ஓஹ்“

“ஐ லவ் ஹிம்“

“ஐ ட்டூ“

“லவ் யூ“

“லவ் யூ டூ“

“ஐ க்ரை“

“ஹக் மீ”

“ஹக் மீ டைட்“

“ம்ம்“

“மை ஃபேமிலி லைஃப் டோட்டல் ஃப்யிலியர்“

“சாரி”

“அப்பா தான் எனக்கு எல்லாம்“

“ஹி ப்ளஸ்ட் ஆர் யூ“

“அப்பா எனக்கு கொழந்தையா பொறப்பாரு”

“ம்ம்“

“என் பொண்ணுக்குத் தம்பியா இருப்பாரு”

“ஷ்யூர்“

“என்க்கு யாரும் இல்ல”

“நான் இருக்கேன்“

“ஐ நோ…”

“தேங்ங்ஸ்”

“லவ் யூ“

“லவ் யூ“

“எனக்கு அப்பா கட்சியா இருந்த இடத்தைப் பாக்கணும்“

“பாக்லாமே“

“வரவா… ஆர்கனைஸ் பண்றியா“

“வா.. பண்றென்“

“உன் போட்டோ அனுப்பேன்“

அனுப்பினான். பர்ஸனல் ஃபேஸ்புக் பக்கத்தையும் இன்ஸ்டா பக்கத்தையும் அனுப்பினான் அஸ்வத். நான்கு ரவுண்டுகள் முடித்து இருந்தான்.

“உன் போட்டோ அனுப்பு “

அவள் பதினைந்து போட்டோக்கள் அனுப்பினாள்.

“சோ க்யூட்“

“அப்பாவும் இப்டிதான் சொல்வார்”

“இந்த போட்டோட்டோ பாத்தா எல்லா இப்டிதான் சொல்வாங்க“

“போடா“

மொபைல் கைநழுவியது, சாப்பிடாமலேயே தூங்கிவிட்டான்.

*****

காலையில் எழுந்து சாட் வரலாற்றைப் பார்க்கையில் எரிச்சலாக இருந்தது அஸ்வத்துக்கு. வாழ்க்கையில் இதுவரை பெண்ணின் அண்மை கிடைக்கவில்லை எனினும் யார் யாரையோ நினைத்து சுய இன்பம் அனுபவித்து இருந்தாலும் , வேலையில் இதுவரை எந்தப் பெண்ணிடமும் அத்து மீறியதில்லை அஸ்வத். அந்த சின்னப் பெருமையும் தன்னிடமிருந்து போனதே என்று வாய்க்கசப்புடன் யோசித்துக்கொண்டு இருக்கையில்,

“ஹாய்“

“ஹாய்“

“மிஸ் யூ“

“லவ் யூ“ என்று டைப் செய்துவிட்டு மொபைலைத் தூக்கிப் போட்டான்.

தூரத்தில் நோட்டிஃபிகேஷனில் ஒரு பெரிய சிகப்பு இதயம் தெரியவே… எடுத்துப் பார்த்த அஸ்வத்,

அவனும் ஒரு சிகப்பு இதயத்தை அனுப்பிவிட்டுத் தலையை சொறிந்து கொண்டான்.

முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தவன்,

“சாரி“ என்று டைப் செய்தான்

“ஏன்“

“இல்ல., கொஞ்சம் எல்லை மீறிட்டேன்“

“நாட் அட் ஆல், இட்ஸ் நேச்சுரல் ரிலேஷன்ஷிப்“

“ப்ட் சாரி“

“ஹக் மீ“

“சாரி“

“ஐ நீட் யூர் கேர்“

“ஷ்யூர்“

“எனக்கு அப்பா கடைசியா இருந்த இடத்தைப் பாக்கணும்“

“யா..பாக்கலாம்“

“இன்னிக்கி வரவா“

“ஓஹ் வரலாம்”

அஸ்வத்துக்கு படபடப்பு தொற்றிக்கொண்டது.

“பதினோரு மணிக்கு வந்துட்டு கால் பண்றேன்“

கொரோனா கேண்டின் சென்று டீ குடித்துவிட்டு பாரதிராஜாவுடன் பேசினான்.

“இந்த வாரத்தோட கேண்டின் க்ளோஸ் “ என்று சோகமாக பாரதிராஜா சொன்னார்.

அலுவலகம் போய், இந்த விஷயத்தை மகர பூஷ்ணத்திடம் சொல்லலாமா வேண்டாமா எனக் குழம்பி, வேண்டாம் என்று முடிவு செய்தான் அஸ்வத். ஆனால் தன் சகாக்களிடம் சொன்னான்.

“அவ நல்ல மூட்ல இருந்தா விடியோ எடுத்துடலாம்“

மருத்துவமனை வளாகத்துக்கு வந்த சிந்து மொபைல் அடித்ததும், அவளைப் பார்க்கச் சென்றான் அஸ்வத். கொரோனா கேண்டினுக்குக் கூட்டிச் சென்று டீ வாங்கிக் கொடுத்தான்.

சிந்து வாளிப்பாக இருந்தாலும் உடல் முழுக்கச் சோகம் அப்பி இருந்ததைப் பார்த்து அஸ்வத்துக்கு சர்வ நாடியும் ஒடுங்கிப்போனது.

வறண்ட புன்னகையைக் கொடுத்தாள். சாட்டில் பேசியதைப் போல பேசவில்லை. உடுத்தி இருந்த காட்டன் புடவையால் முகத்தை ஒத்தி ஒத்தி எடுத்தபடி இருந்தாள். வியர்வையாலா அல்லது கண்ணீரா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தன் கைப்பையை அவ்வப்போது ஏனோ பிரித்துப் பார்த்தபடி இருந்தாள்.செருப்பு புதியதாக இருந்தது. விசித்திரமாக இரண்டு கைகளிலும் கைக்கடிகாரம் கட்டி இருந்தாள். நெற்றியில் சாந்துப்பொட்டு சின்ன அகல் விளக்கு போல இட்டிருந்தாள். கைகளில் ஜாக்கெட் முடியும் இடத்தில் டாட்டூ குத்தியிருந்தது தெரிந்தது. கால்களை மாற்றி வைக்கையில் விலகும் புடவையின் ஊடாக கால்களின் உரோமங்களை அகற்றிய பளபளப்பு தெரிந்தது.

ஒரு ஒட்டுதலும் இல்லாமல், “பாக்கப் போலாமா“ என்றாள்.

“இல்ல, அப்பா ஐசியூவுல இருந்து இறந்து போயிட்டாரு”

“ஸோ?“

“ஐசியூ அலவ்ட் இல்ல“

“ப்ளீஸ் சிரஞ்சீவி“

“சாரி, என் பேரு சிரஞ்சீவி இல்ல… அது அட்மினுக்காக வச்ச பேரு. என் பேரு அஸ்வத்தாமன்“

“ம்ம்“

“சாரி“

“இட்ஸ் ஓக்கே“

“ரியலி சாரி“

“ப்ச் ஓக்கே, எவ்ளோ ஏமாத்தத்ததைப் பாத்துட்டேன்“

“இல்ல எல்லோருக்கும் இப்டிதான்“

“சரி சிரஞ்சீவி… அப்பா கடைசியா இருந்த இடம்…”

“ஐசியூ பாக்க முடியாது. ஆனா ஃபர்ஸ்ட் குவாரண்டைன் வார்ட்லதான் இருந்தாரு, அதைப்பாக்கலாம்“

“போலாம்“

குவாரண்டைன் வார்ட் யாருமற்றுக் கிடந்தது. அதற்கு யாரும் பூட்டுக் கூட போட்டிருக்கவில்லை. அதை காலையில் முன்னமே பார்த்திருந்தான் அஸ்வத் . நல்ல விசாலமான ஹால். வழக்கத்தை விட அதிக உயரத்தில் கட்டப்பட்டு இருந்தது. வேறு எதன் பொருட்டோ கட்டப்பட்டு குவாரண்டைன் வார்டாக மாற்றியிருந்தார்கள்.

இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

ஏமாற்றக்கூடாது என நினைத்த  அஸ்வத் முன்பே சிந்துவின் அப்பா எந்தப் படுக்கையில் இருந்தார் என்பதைத் தயங்கித் தயங்கிக் கேட்டு வைத்திருந்தான்.

கிட்டத்தட்ட 60 படுக்கைகள் கிடந்தன. மொத்தம் நான்கு வரிசைகள். ஒவ்வொரு வரிசைக்கும் 15 கட்டில்கள். யாருமற்ற பெரிய இடத்துக்குள் உருவாகும் அடர்த்தியான அமைதி இங்கும் இருந்தது. அதில் வலதுபுறம் இருந்த வரிசையில் ஒன்பதாவது படுக்கைக்கு அழைத்துச் சென்றான் அஸ்வத். இரண்டொரு டியூப் லைட்டுகளையும், மின்விசிறியையும் போட்டான்.

“இங்கதான் இருந்தாரு. அப்புறம் ஐஸோலேஷன் வார்டுக்குப் போகாம நேரடியா ஐசியூக்கு போய்ட்டாரு“

அந்தப் படுக்கையைத் தடவிப் பார்த்தாள் சிந்து. அதில் அமர்ந்தாள். அந்தத் தலையணையை எடுத்து முகர்ந்து பார்த்தாள்.

“அதை மாத்தி இருப்பாங்க“

நிமிர்ந்து பார்த்தாள்.

“இதை மட்டுமா? பாடியையும்தான் மாத்திட்டாங்க“

அதிர்ந்து நின்றான் அஸ்வத்.

“எங்க அப்பா உயரம். குள்ளமா ஒரு பாடி வந்துச்சி. அதை நான் பாக்கக் கூட இல்ல. போட்டோ அனுப்புனாங்க, அதுலதான் பாத்தேன். பாத்த ஒடனே எங்க அப்பா இல்லன்னு தெரிஞ்சிச்சி, ஆனா என்னைத்தவிர வேற யாருக்கும் தெரில. நானும் யாருக்கும் சொல்லல“

“சாரி சிந்து“

“ இங்க இருந்து எங்க அப்பா யாருக்கும் தெரியாம எங்கயும் எழுந்து போயிருக்க மாட்டாரு. அதனால செத்துட்டாருன்னு நினைச்சிகிட்டேன் “

“  “

“யாரோ எரிச்சி, எங்கப்பாவுக்கு காரியம் செஞ்சிருப்பாங்க“

“சாரி சிந்து “

சிந்து தேம்ப ஆரம்பித்தாள்.

அந்தப் படுக்கையில் படுத்து வெறி வந்தவள் போல புரண்டு புரண்டு “அப்பா“ “அப்பா“ என அரற்றிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அஸ்வத் செய்வதறியாமல் அவள் தலையைத் தொட்டான்.

அவனை இழுத்துத் தன் மேல் போட்டுக்கொண்டாள். அஸ்வத்துக்கு உடல் நடுங்கியது. தாங்கள் இருவரும் ஸ்ட்ரெச்சரில் படுத்து, உருண்டு ஓடுவது போல இருந்தது அவனுக்கு. அஸ்வத்தைக் கீழே தள்ளி தான் மேலே படர்ந்து தன் முலைகளை அவன் மார்பில் அழுத்தி வெறியுடன் அவன் உதடுகளைக் கவ்வுகையில், பெண் வாசனை உடல் முழுக்க படர்ந்து அவனுக்கு மூச்சு முட்டியது. முதல் முத்தம் பெற்ற நடுக்கத்தில் அஸ்வத்துக்கு விந்து வெளியேறியது.

குவாரண்டைன் வார்டின் அந்தப் பெரிய கதவு பாதி திறந்திருந்த இடுக்கில் நண்பகல் வெளிச்சம் முன்னேறிக்கொண்டு இருந்தது. அந்த வெளிச்ச சுழற்சியில் துகள்கள் சுழன்றுகொண்டிருந்தன. அஸ்வத்துக்கு ஜுரம் வருவது போல இருந்தது. அஸ்வத்தின் உடைகளைக் கிழித்துப்போட்ட சிந்து, சீற்றத்துடன் முத்தமிட்டு ஆங்காங்கே கடித்துக் கொண்டிருந்தாள். வெளியேறியிருந்த விந்துவைத் தன் காட்டன் புடவையால் துடைத்தாள்.

அஸ்வத் மீண்டும் உடனே உயிர்பெற்றான். அவனுக்கு உடல் நடுக்கமும் வெப்பமும் ஏற ஆரம்பித்தன. என்ன செய்வதென புரியாமல் மேலெழுந்த அஸ்வத்தை கீழே தள்ளிய சிந்து தன் புடவையை சரி செய்து உள்ளாடை விலக்கி அவன் மேலமர்ந்தாள். அழுத்தமாக அவன் மீது படர்ந்து அவன் கழுத்தை நெறித்தாள். பின் நெற்றியில் முத்தமிட்டாள். அஸ்வத்தின் கைகள் சிந்துவின் முலைகளுக்குப் போகையில், அஸ்வத்தின் கண்களை சந்திக்காமல் அவன் கைகளைத் தட்டிவிட்டு அவன் மார்பைக் கீறிக்கொண்டு இயங்க ஆரம்பித்தாள்.

அந்தப் பக்கமாக வந்து, பாதி திறந்திருந்த கதவின் வழியாக இந்தக் காட்சியைப் பார்த்த ஆம்புலன்ஸ் டிரைவர் கதவைச் சாத்திவிட்டுச் சென்றார்.

———————————