எக்ஸைல் – 2 உருவாக்கம் பற்றி இன்னும் கொஞ்சம்…

பாலு மகேந்திராவுடன் உரையாடிக் கொண்டிருந்த போது தலைமுறைகள் சரியாகப் போகவில்லையே என்று கேட்டேன்.  அதற்கு அவர், “அதை நான் international audience-க்காக அல்லவா எடுத்தேன்” என்றார்.  அதேபோல் எக்ஸைல் – 2 ஐ நான் ஆங்கில வாசகர்களுக்காகவே எழுதினேன்.   நாவலில் Tango என்று வந்தால் என்ன ஏது என்று உடனே புரிய வேண்டும்.    Tango இசையைக் கேட்டிருக்க வேண்டும்.  அந்த நடனத்தைப் பார்த்திருக்க வேண்டும்.  ஸல்ஸா ஜல்ஸாவாக இருக்க, த்தாங்கோவில் மட்டும்  ஏன் அந்த meloncholy என்று ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும்.  சர்வதேச இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இது புரியும்.  தமிழில் எக்ஸைலில் தான் முதல் முதலாக Tango என்ற வார்த்தையையே கேள்விப்படுகிறார் ஒரு வாசகர் என்றால் கஷ்டம்தான்.  அதனால்தான் எக்ஸைல் ஆங்கிலத்தில் வருவதற்கு மிகவும் ஆர்வம் காட்டினேன்.  ஆனால் ஒரே ஆறுதல், அஞ்சலி பகுதி மட்டும்தான் இப்படி ஐரோப்பியத்தனமாக இருக்கும்.  400 பக்கங்கள்.  மீதி 1000 பக்கங்களும் தமிழ் வாழ்க்கை தான்,  கபாடபுரத்திலிருந்து இன்றைய டாஸ்மாக் வரை பேசும்.

Astor Piazzolla பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.  த்தாங்கோவுக்கு அவர் வாசித்திருக்கும் Bandoneon ஐ நீங்கள் பின்வரும் இணைப்பில் ஒன்றரை மணி நேரம் கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=pgha2OTkyFE

Comments are closed.