அல்ஜீரியாவில் கபீலியா என்று ஒரு பகுதி இருக்கிறது. அங்கே சுதந்திரப் போராட்டம் நடந்தது. அந்தப் பிராந்தியத்தில் அரபி மொழி பேசினால் அபராதம் விதிக்கப்படும். கபீலிய மொழி தடை செய்யப்பட்ட மொழியாக இருந்தது. உதாரணமாக, தமிழ் நாட்டில் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படும் என்றால் என்ன நிலைமை என்று யோசித்துப் பாருங்கள். இதையெல்லம் என்னுடைய கலகம் காதல் இசை என்ற நூலில் எழுதி இருக்கிறேன். சரி… விஷயத்துக்கு வருகிறேன். கபீலியாவில் ஷாப் ஹாஸ்னி பிரபலமாக இருந்தார். நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொன்னது அரசு. அவரது சகாக்கள் ஃப்ரான்ஸ் சென்று விட்டார்கள். என் உயிர் போனாலும் என் மண்ணில்தான் போகும் என்றார் ஹாஸ்னி. அப்போது அவர் வயது 26. சுட்டுக் கொன்றார்கள். ஹாஸ்னி… இதை எழுதும் போது என் கண்கள் கலங்குகின்றன. இசை என்பது ஜாலி அல்ல. உயிர். ஆனால் இம்மாதிரி கலைஞர்களின் இசை செம போராக இருக்கும். ஆனால் ஹாஸ்னியின் இசை மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி இருக்கும்… கேளுங்கள்…
Comments are closed.