விடிவெள்ளி

தென்னமெரிக்காவிலிருந்து நமக்கு கார்ஸியா மார்க்கேஸ், பாப்லோ நெரூதா போன்ற ஒரு சிலரைத் தெரிந்தாலும் தென்னமெரிக்க கண்டம் முழுக்கவுமே இந்தியாவில் அறியப்படாத இடமாகவே இருக்கிறது.  முக்கியமாக அவர்களின் சினிமா மற்றும் இசை.  ஃபாபியானா காந்த்திலோ (Fabiana Cantilo) அர்ஹெந்த்தினாவில் எனக்குப் பிடித்த பாடகி.  அவரது எளிமை வசீகரமானது.  ஒயின் அருந்திக் கொண்டே மிகத் தனிமையாகக் கேட்க அற்புதமான அனுபவம் தரும் பாடகி…   கொஞ்சம் நேரம் உங்கள் இசைக் கடவுளை மறந்து விட்டுக் கேட்டுப் பாருங்கள்…   இந்தப் பாடலின் பெயர் Amanece en la ruta.  அமானஸி என்லா ரூத்தா.  பொருள்: பாதையில் தெரியும் விடிவெள்ளி.   ஸ்பானிஷ் மொழியை உச்சரிப்பது தமிழை உச்சரிப்பது போலவே இருக்கும்.  ஆங்கிலத்தை முற்றாக மறந்து விட வேண்டும்.

https://www.youtube.com/watch?v=c-Ul91rd7uI&index=3&list=AL94UKMTqg-9Byof18Up8sj2Rc0VqXB0qe

 

 

Comments are closed.