பிணந்தின்னிகள் இயம்பும் நட்சத்திரங்களின் செய்தி: சுனில் கிருஷ்ணன்

என்னுடைய சிறுகதைத் தொகுதி நேநோவை முன்வைத்து நண்பர் சுனில் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை இன்று ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்துள்ளது.

இன்றைய தினம் எழுத்தாளர்களுக்கு விருது என்பது அதிக அளவில் நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவம். நான் அதை விமர்சிக்க மாட்டேன். எல்லோரும் நல்ல எண்ணத்தில் செய்கிறார்கள். ஒரு நல்ல மனிதர் நூறு பேருக்கு விருது வழங்குகிறார் என்று கேள்விப்பட்டேன். அதுவும் நல்ல விஷயம்தான். ஆனால் இந்தக் காரியத்தை இன்னும் எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்றால், விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினர் அதற்கு முன்னோடியாக இருக்கிறார்கள். யாருக்கு விருது வழங்குகிறோமோ அவரது எழுத்து பற்றிய உரையாடலைத் தொடங்குவது. இதுதான் அந்த விருதை விட முக்கியமான விஷயம். விருதை முன்வைத்து இப்படிப்பட்ட அறிமுகங்களும் உரையாடல்களும் விவாதங்களும் எழ வேண்டும்.

சுனில் கிருஷ்ணனின் கட்டுரையைப் படித்து பல இடங்களில் நெகிழ்ந்து விட்டேன். என் வாழ்வைப் பின்நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது அவர் கட்டுரை. திரும்பிப் பார்த்து அச்சத்திலும் தவிப்பிலும் கலங்கி விட்டேன்.

பிணந்தின்னிகள் இயம்பும் நட்சத்திரங்களின் செய்தி- சுனில் கிருஷ்ணன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)