சாருவைப் பற்றிய ஒரு அட்டகாசமான Documentary, ” THE OUTSIDER ” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது…மிக நேர்த்தியாக வித்தியாசமாக இந்த ஆவணப்படத்தை அன்பு நண்பர் அராத்து இயக்கியுள்ளார்.
நேற்று அப்படத்தை சுமார் 500 பேர் மெய்மறந்து ரசித்துப் பார்த்ததை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றேன்..படம் முடிந்த பிறகும் கைதட்டல் அடங்க சிறிது நேரமானது…
சாருவின் சிறுவயது நாகூர் வாழ்க்கை, தஞ்சாவூர் கல்லூரிக் காலம், அவருடைய தபால்துறை பணி, தாய்லாந்து தீவுப் பயணங்கள், சீலே சார்ந்த கலாச்சாரக் காட்சிகள், அவருடைய சிறுவயது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் கருத்துக்கள் என்று விரிவாக காட்சிப்படுத்தியுள்ளார் அராத்து.
ஒரு ஆவணப்படத்துக்கான விறுவிறுப்பான Concept based planning, execution என்று இந்தப்படம் அனைவரையும் கவர்ந்தது…பொதுவாக ஆவணப்படங்கள் சில இடங்களில் சலிப்பு தட்டும். ஆனால் அராத்துவின் இயக்கத்தில் இப்படம் More interesting and apt conceptual pattern இல் அமைந்துள்ளது..
ஆவணப்படத்தை உயிரோட்டமாகக் காட்சிப்படுத்த மிக வித்தியாசமான கோணங்கள், இடத் தேர்வுகள், அளவான தேவையான வசனங்கள் , Shots பிரித்த விதங்கள், Colour correction, Editing என்ற வகைமைகளில் அராத்துவின் திறமை பாராட்டப்பட வேண்டிது…
Everyone can witness the very true portrayal of Charu Nivedita ‘s hedonism..
Congratulations Araathu R for your efforts, dedication, innovations and conceptual making of this rare Documentary. You deserve greater applause as the captain of this ship. Keep going friend.
அருணாசலம், மதுரை