இன்று மட்டும் புத்தக விழாவுக்கு வர மாட்டேன். நாளையிலிருந்து மாலை ஐந்து மணியிலிருந்து எட்டரை வரை ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எஃப் 19. இன்று வராததற்குக் காரணம், அருஞ்சொல். அருஞ்சொல்லுக்கான அடுத்த கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். அருஞ்சொல் நேர்காணலை இதுவரை என் எழுத்தைப் படிக்காதவர்கள் பலரும் படிக்கிறார்கள் என்று தெரிகிறது. அருஞ்சொல்லின் வீச்சு பற்றி ஆச்சரியமடைந்தேன். இதுவரை கேட்கப்படாத கேள்விகள். இதுவரை சொல்லாத பதில்கள். (ஒரே ஒரு விதிவிலக்கு: இக்கேள்விகளில் பல த அவ்ட்ஸைடர் ஆவணப்படத்தில் அராத்துவினால் கேட்கப்பட்டு பதில் சொல்லப்பட்டிருக்கிறது.)
பணம் அனுப்பி பிடிஎஃப் கிடைக்காதவர்கள் இன்று மாலை வரை காத்திருக்கவும். மேலும் ஒரு சில அத்தியாயங்களை எழுதிச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.
Hathmic என்ற கம்பெனியின் காஃபி தூள் நான் குடிக்கும் குறிப்பிட்ட ரகம் கிடைக்க மாட்டேன் என்கிறது. அன்னபூர்ணி ஆர்டர் செய்த போது ஹாத்மிக் கோல்ட் தான் வந்தது. கோல்ட் இன்ஸ்டண்ட் காஃபி சுவையில் இருக்கிறது. மைசூர் சூப்பர் ஸ்ட்ராங் காஃபிதான் ஃபில்டர் காஃபி போல் இருக்கும். யாரேனும் முயற்சி செய்து எனக்கு அனுப்ப முடியுமா? நீயே வாங்க வேண்டியதுதானே என்று கேட்காதீர்கள். அதற்கு நான் வங்கி வரை செல்ல வேண்டும். என் வங்கி கார்ட் வேலை செய்யவில்லை. விருப்பம் உள்ளவர்கள் எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com
அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு நாவலின் பிடிஎஃப்பை வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒரே ஒரு நண்பர்தான் வாங்கியிருக்கிறார். இது பற்றி நேற்று அராத்துவிடம் பேசிக் கொண்டிருந்தபோது “நம் ஆட்களிடம் நீங்கள் காசு கொடுத்துத்தான் படிக்கச் சொல்ல வேண்டும்” என்றார். அட்டகாசம்.