ஒரு பத்தாயிரம் வார்த்தைகள் உள்ள நீண்ட சிறுகதை என்றுதான் ஆரம்பித்தேன். இருபத்தைந்தாயிரம் வார்த்தைகள் வந்தன. பிறகு நாற்பதாயிரம் வார்த்தைகள். சீனிக்கும் கார்ல் மார்க்ஸுக்கும் இன்னும் ஒன்றிரண்டு நண்பர்களுக்கு அனுப்பி விட்டு இனிமேல் ஒரு வார்த்தை சேர்க்க மாட்டேன் என்று உறுதி கூறி விட்டேன். ஆனால் நேற்று இரவு நித்திரையில் மேலும் ஒரு அத்தியாயம் கனவாகத் தோன்றியது. வாக்கியம் வாக்கியமாக கனவில் எழுதப்பட்டது. நான்கு மணிக்கு எழுந்து அவற்றைப் பதிவு செய்தேன். அதையும் இறுதி அத்தியாயமாகக் கோர்த்து பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். இனி கனவில் தோன்றினால் அது அடுத்த நாவல்தான்.
ஒரு வாரத்தில் 45000 வார்த்தைகளில் ஒரு நாவல் உலக சாதனை என்று நினைக்கிறேன். தொடர்ந்து தமிழின் சமகால இலக்கியத்தில் உலக சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
நாவலின் பிடிஎஃப் கிடைக்கப் பெறாதவர்கள் உடனே எனக்கு எழுதுங்கள். பிடிஎஃப் தேவைப்படுபவர்களும் எழுதுங்கள். புத்தகம் வந்த பிறகு பிடிஎஃப் அனுப்ப இயலாது. இன்னும் ஒரு வாரத்தில் புத்தகம் கிடைக்கும்.
charu.nivedita.india@gmail.com
வாழ்க்கையில் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு – Charu Nivedita (charuonline.com)