நண்பகல் நேரத்து மயக்கம்

என் நெருங்கிய நண்பர்கள் பலர் சிபாரிசு செய்ததாலும் அங்கமாலி டயரீஸ் படத்தின் இயக்குனர் என்பதாலும் நண்பகல் நேரத்து மயக்கம் படம் பார்த்தேன்.  குப்பை என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் வர்ணிக்க முடியவில்லை.  இந்தப் படத்தைப் பாராட்டுபவர்களுக்கு fake சினிமாதான் பிடிக்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.  இந்தப் படத்தை இயக்கியவர் மீது எனக்கு வருத்தமே இல்லை.  இதைப் பார்த்துப் பாராட்டுபவர்களைப் பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.  அவர்கள் விஜய் ரசிகர்களை விட கீழான சினிமா ரசனையில் இருக்கிறார்கள்.

என் வாழ்நாளில் இந்த அளவுக்கு ஒரு போலியான சினிமாவை நான் பார்த்ததில்லை.  இதற்கு மேல் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை.  இம்மாதிரி narrativeஇல் எனக்குப் பிரச்சினை இல்லை.  ஆனால் இது fake narrartive என்பதுதான் பிரச்சினை.  எது நிஜம் என்று நீங்கள் கேட்டால் ட்யூரின் ஹார்ஸ் படத்தைப் பாருங்கள்.