சூம்பி இலக்கியம்: அராத்து

ஆண் பெண் பாலுறவு எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு இயல்பானதுதான் ஆண் ஆண் மற்றும் பெண் பெண் பாலுறவும் என்று நினைப்பவன் நான்.  அதனால்தான் என் வலது காதில் வளையம் அணிந்திருக்கிறேன்.  ஆண் ஆண், பெண் பெண் உறவில் எந்தப் பிறழ்வும் இல்லை என்று நம்புகிறேன்.  அதனால்தான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே நான் bisexual என்று அறிவித்தேன்.

மேலும், ஒரு ஆண் அல்லது பெண் தன் ஆயுள் முழுவதும் இன்னும் ஒரே ஒரு பெண்ணுடனோ அல்லது ஆணுடனோதான் பாலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. 

ஆனால் ஒருவரின் சம்மதம் இல்லாமல் உறவுக்கு அழைத்தல் அல்லது உறவு கொள்ளுதல் அத்துமீறல்.  அது ஒரு கொடுங்குற்றம். ஒரு பெண்ணை உற்று நோக்குவதே பாலியல் குற்றம் என்று கருதுபவன் நான். 

என் வாழ்க்கையை ஆட்டோஃபிக்‌ஷனாக முச்சந்தியில் வைத்திருக்கிறேன்.  ஆனால் தொன்மம், மயிர் மட்டை என்று பீலா விட்டுக் கொண்டிருப்பவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்த்தால் அது கொடும் குற்றவாளிகளின் வாழ்க்கையாக, சைக்கோ செக்ஸ் குற்றவாளிகளின் வாழ்க்கையாக இருக்கிறது.  அதனால்தான் அவர்கள் சொந்த வாழ்வை விட்டு விட்டு தொன்மம் மயிர் மட்டை என்று ஜல்லியடிக்கிறார்களோ என்று தோன்றுகிறது.  நீங்கள் ஓரினச் சேர்க்கையாளர் என்றால் அதை தைரியமாகப் பொதுவெளியில் வைக்க என்ன பிரச்சினை?  அது மட்டும் அல்ல, நீங்கள் catamiteஆ, sodomiteஆ என்றும் சொல்ல வேண்டும். 

கோணங்கியை யாராவது சந்திக்க விரும்பினால் – அவர் ஒரு விவிஐபியாக இருந்தாலும் – கோணங்கி அவரை “கோவில்பட்டிக்கு வரச் சொல்லுங்கள்” என்று சொன்னதன் அர்த்தம் இதுதானா என்று இப்போது கேட்கத் தோன்றுகிறது. சே.

இந்தப் பிரச்சினையில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், இதுவே அந்த எழுத்தாளர் பெண்கள் மேல் “கை” வைத்திருந்தால் தமிழ்ச் சமூகமே கொழுந்து விட்டு எரிந்திருக்கும்.  ஆண் உடம்பு என்றால் அத்தனை இழிவாக, கேவலமாகப் போய் விட்டது போலும். 

இது குறித்து அராத்து எழுதிய பதிவையும் அருண் ராம் பிரசாந்த்தின் பதிவையும் பகிர்கிறேன்.  

சாரு

சூம்பி இலக்கியம் – அராத்து

கோணங்கியின் பாலியல் அத்துமீறல் பற்றி கார்த்திக் ராமச்சந்திரன் எழுதிய போஸ்ட் பேசுபொருள் ஆகியிருக்கிறது. அவர் அதை துணிந்து பொதுவெளியில் எழுதியது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் , ஒரு பெண் ஒரு ஆண் மீது பாலியல் குற்றச் சாட்டு சுமத்துவதற்கும் , ஒரு ஆண் இன்னொரு ஆண் மீது சுமத்துவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. பெண் என்றால் முதலில் பரிதாப உணர்ச்சி தோன்றி விடும். அதையும் வக்கிரமாகப் பேசும் கோஷ்டிகளும் உண்டுதான். ஒரு ஆண் சொன்னால், சமூகத்தில் முதலில் கேலியும் கிண்டலும்தான் உருவாகும். இதையெல்லாம் மீறித்தான் கார்த்திக் ராமச்சந்திரன் சொல்லியிருக்கிறார். நான் கூட அவர் சொன்னவுடன் இதைப்பற்றி எழுதவில்லை. ஏனெனில் பாலியல் அத்துமீறல் புகார்களில் நிறைய குழப்பங்கள் உள்ளன. முழுவதும் தெரியாமல் எதுவும் சொல்லிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான். ஆனால் இப்போது பலரும் பாதிக்கப்பட்டதாகச் சொன்னதும் எழுத ஆரம்பித்தேன்.

நவீன இலக்கிய எழுத்தாளர் எனச் சொல்லிக்கொள்பவர் , வெளிப்படையாக தன்னை ஒரு “கே” என்றோ பைசெக்சுவல் என்றோ அறிவித்துக்கொண்டிருக்கலாம். இப்போதைய இலக்கிய , ஆன்லைன் சமூகத்தில் யாரும் முகம் சுளிக்கப் போவதில்லை. இன்னும் கேட்டால் ஆதரவுதான் பெருகியிருக்கும். “கே” வாக அறிவிக்கும் போது , இன்னும் தெளிவாக, டாமினண்ட் , ரெஸிஸிவ் என அறிவித்துகொண்டால் தகுந்த பார்ட்னர்கள் கிடைத்து இருப்பார்கள். இல்லை வெரைட்டி வேண்டும் என்றால் – கே – ஓப்பன் ரிலேஷன்ஷிப் என்றே அறிவித்துக்கொண்டு இருக்கலாம். நிம்மதியாக காமக் கேளிக்கைகளில் ஈடுபட்டு இருக்கலாம். பாலியல் அத்துமீறல் என்பதே கண்டிக்கத்தக்கது. அதிலும் தன்பால் ஈர்ப்பு இல்லாதவர்களிடம் அத்துமீறுவது என்பது இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கண்டிக்க வேண்டியது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் இரு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். மிகவும் அருவருப்பாக உணர்வார்கள். இரு பெரும் அருவருப்பு !கார்த்திக் ராமச்சந்திரன் நாகரீகம் கருதி மேலோட்டமாக எழுதியுள்ளார்.

குற்றம் என சட்ட ரீதியாக அணுககையில் , விளக்கமாகச் சொல்ல வேண்டி வரும். அதாவது பாதிக்கப்பட்டவரின் ஆண்குறியை கோணங்கி பயன்படுத்தினாரா ? அல்லது தன் ஆண்குறியை பாதிக்கப்பட்டவரின் மேல் பிரயோகித்தாரா என்பதே அது. பின்னது வன்புணர்வு அளவிலான குற்றமாகக் கருதப்படும் என்றே நினைக்கிறேன். வக்கீல்கள் விளக்கம் சொல்வார்கள். பின்னது தார்மிக ரீதியிலும் அதிகப்படியான , மன்னிக்கவே முடியாத குற்றம். முன்னதும் அப்படித்தான். ஆனால் பெரும்பாலான ஆண்களால் அதை சுலபமாகக் கடக்க முடியும். கார்த்திக் ராமச்சந்திரன் சொல்வது அனைத்தும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் , கோணங்கி செய்தது தனிப்பட்ட அளவிலான குற்றம் மட்டுமல்ல. தமிழ் இலக்கியவாதிகளையே அசிங்கப்படுத்தி இருக்கிறார். மொத்த தமிழ் இலக்கியவாதிகள் மீதும் தேவையற்ற அவதூறை சுமத்தி இருக்கிறார். இது ஒரு கேடுகெட்ட இலக்கிய கிரிமினல் வேலை. அதாவது பச்சையாகச் சொல்வதானால் மௌனியும் , நகுலனும் இவரை சூம்ப வைத்திருக்கிறார்கள் என கோணங்கிச் சொல்கிறார். அப்படி தான் விரும்பிச் சூம்பியதாலேயே தனக்கு இலக்கியம் கைவந்தது என்பதாகச் சொல்லியிருக்கிறார். ஒரு காமடியான வாதத்திற்கு சொல்வதானால் , அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் , சூம்பி சூம்பி இலக்கியம் கற்றால் அது கோணங்கி இலக்கியமாகத்தான் வெளிப்படும். நான் கூட யோசிப்பேன்…ஏன் கோணங்கி எழுத்து இப்படி ஜாங்கிரி சுத்துவது போல இருக்கிறது என்று. இப்போதுதான் புரிகிறது. இனி கோணங்கி இலக்கிய வகைமையை சூம்பி இலக்கியம் என அழைக்கலாம்.

காமடி கிடக்கட்டும்…உங்கள் சூம்பி பொழைப்பிற்கு பாவம் நகுலனையும் , மௌனியையும் ஏனய்யா துணைக்கு இழுக்கிறீர்கள் ?நகுலன் அவர் பாட்டுக்கு சுசீல சுசீலா என ஜபித்துக்கொண்டு யாருக்கும் தொந்தரவு தராமல் குவாட்டர் அடித்து விட்டு எழுதிக்கொண்டு கிடந்தார். மௌனி பாட்டுக்கும் , கோவிலில் அர்ச்சனை முடிச்சிட்டு போற பொண்ணு பின்னால போயி , தன்னோட தத்துவ படிப்புகளை அதில் போட்டு கொழப்பிகிட்டு , வீட்டு பால்கனியில ஒக்காந்துகிட்டு , மொட்ட மரத்தை பாத்து தாம்பாட்டுக்கு பேசிப்பேசி அழியாசுடர்னு எழுதி வச்சாரு. தன்னுடைய அத்துமீறலுக்கு தன்னுடைய மூத்தோர்கள் , இலக்கிய பிதாமகர்களையா பலி கொடுப்பது? ஒருக்கால் நீங்கள் அவர்களை சூம்பி இலக்கியம் கற்றிருந்தாலும் (!) அது உங்கள் தேர்வு மிஸ்டர் கோணங்கி. நீங்கள் விரும்பிச் செய்திருப்பீர்கள். அதை நீங்கள் விருப்பமில்லாத அடுத்தவர்…சாரி அடுத்தவர்கள் மேல் பிரயோகிப்பது கடுமையான அத்துமீறல்.

கார்த்திக் ராமச்சந்திரனுக்கு இன்னும் மனபலம் உண்டாகட்டும்.

***

2020இல் நானும் நண்பர் வெங்கடேஷும் தென்தமிழ்நாடு ட்ரிப் போன சமயத்துல ஒரு நாள் கோணங்கி வீட்ல தங்க நேர்ந்தது. கோணங்கி நைட் எல்லாரும் குடிக்கலாம்னு சொல்லி (நானே சுயமா குடிக்க ஒத்துக்கிட்டேன், வெங்கடேஷ் வேணானு சொல்லியும்) வாங்கி குடுத்து எல்லாரும் ராத்திரி குடிச்சோம். நல்லா இலக்கியம் லாம் பேசுனோம். போரும் அமைதியும் பத்தி, பெருந்தேவி, நகுலன் கவிதைகள் பத்திலாம். கோணங்கி அப்ப என்கிட்ட அவர் பேசுறது அவரோட சின்ன வயசுல அவர் நகுலன் வீட்டுக்குப் போய் இலக்கியம் பேசுன மாதிரி இருக்குன்னு சொன்னப்ப ரொம்ப பெருமிதப்பட்டேன். அன்னைக்கு ராத்திரியே அதுக்கு வருத்தப்பட வச்சுட்டாப்ல. அடுத்த நாள் காலைல வெங்கடேஷ் கிட்ட வண்டிய எடுக்க சொல்லி திரும்ப இந்தப்பக்கம் வரவே வேணானு பதட்டத்துல சொன்னேன். வாழ்க்கைல முதலும் கடைசியுமா எனக்கு நடந்த பாலியல் சீண்டல். அப்பவே நான் இதப்பத்தி எழுதிருக்கனும். ஆனா அப்ப இருந்த மனநிலைல அத மறக்கதான் செய்யனும்னு எழுதாம விட்டுட்டேன். ஆனா இனிமே அப்டி விட முடியாது. கோணங்கி is an abuser. People should know. பேரன்பின் ஆதி ஊத்தும் இல்ல மயிரு ஊத்தும் இல்ல.

அருண் ராம் பிரசாந்த்