ஆர்த்தோ பற்றிய நாடகத்திற்கு ஆங்கிலத்தில் Antonin Artaud: The Insurgent என்றும் தமிழில் மேலே குறிப்பிட்டவாறும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நண்பர் அ. ராமசாமி நாடகத்தில் சில திருத்தங்களைக் குறிப்பிட்டார். அந்தத் திருத்தங்களையும் செய்து விட்டேன். நாடகத்துக்கான தமிழ்த் தலைப்பும் அ. ராமசாமி வைத்ததுதான். இப்போது அந்த நாடகத்தின் பிடிஎஃப் வடிவத்தை அதை வாசிக்க விரும்புபவர்களுக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறேன். அதற்கான விலை அல்லது நன்கொடையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். நாடகத்தை தமிழில் அரங்கேற்றம் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது. நாடகத்தில் இடம் பெறும் ஒரு கலவிக் காட்சியை mimeஆக உணர்த்தி விடலாம். அக்காட்சியில் வெளிச்சத்தை நீக்கி விடலாம். ஆண்களும் பெண்களும் ஆடையின்றி இடம் பெறும் காட்சியில் அவர்களுக்குக் குறைந்த பட்ச ஆடையை உடுத்தலாம். அந்தக் காட்சி பெயோத்தே என்ற சடங்கின்போது நிகழ்கிறது. இந்த இரண்டையும் செய்து விட்டால் நாடகத்தைத் தமிழ்ச் சூழலில் நிகழ்த்துவதில் பிரச்சினை இருக்காது.
இருநூறு பேராவது நாடகப் பிரதியின் பிடிஎஃப் வடிவத்தை வாங்க முன்வருவீர்கள் என்று நம்புகிறேன். நாடகம் வங்க மொழியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதற்கான செலவும் என்னுடையதுதான். நாடகத்தைப் படித்த அத்தனை நண்பர்களுக்கும் நாடகம் மிகவும் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆர்த்தோவின் மீதான ஈர்ப்பும் ஈடுபாடும் எனக்கு இப்போது வந்ததல்ல. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் என்ற கதையில் ஆர்த்தோ பற்றிய குறிப்பு வருகிறது. அக்கதையின் தமிழ் வடிவம் என் கையில் இப்போது இல்லை. அதனால் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தருகிறேன். ஒரே ஒரு வாக்கியம்தான் என்றாலும் மார்க்கி தெ சாத், அந்தோனின் ஆர்த்தோ, ரொலாந் பார்த், லெவி ஸ்த்ராஸ் போன்றவர்களை குருதியில் ஏற்றிக் கொண்டிருப்பவர்களால் மட்டும்தான் அப்படி எழுத முடியும். ஏனென்றால் இந்தச் சிந்தனையாளர்களின் ஒட்டு மொத்த சாராம்சத்தையும் என்னுடைய ஒரே வார்த்தை உணர்த்துகிறது.
and if scientists like Galileo traveled in the space (La terre d’espace), it can very well be termed that people like Fleber and Roland Barthes traveled in the plane called as the text (La terre du texte), and People like Levi Strauss journeyed in the space of the human earth (la terre humaine), and Marquis de Sade traveled in the body’s plane (la terre du corps), and Freud and Wilhelm Reich journeyed the space of the mind (la terre psychique) and people such as Antonin Artaud deterritorialized the body and mind, and that there is nothing termed as important or unimportant among these?
ஆர்த்தோ பற்றிய குறிப்பைப் பாருங்கள். தொண்ணுறுகளில் எழுதிய கதை.
நாடகத்தை எழுதிய போது நானே ஆர்த்தோவாக மாறி இருந்தேன். அப்படித்தான் அதை எழுதினேன், அதை நீங்கள் நாடகத்தை வாசிக்கும்போதே உணரலாம்.
நாடகத்துக்கான தொகையை அனுப்ப விவரங்கள்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai