Conversations with Aurangzeb

நான்தான் ஔரங்ஸேப் நாவல் ஆங்கிலத்தில் வெளிவர இன்னும் ஐந்தாறு தினங்களே உள்ளன. இந்த நாவல் வெளிவந்த உடனேயே இந்தியாவின் எல்லா நகரங்களிலும் கிடைக்கும். என்னுடைய வாசகர்களில் யார் யார் எல்லாம் ஆங்கிலத்தில் படிக்கக் கூடியவர்களோ அவர்கள் அனைவரும் இந்த நாவலை வாங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அல்லது, படிக்கக் கூடியவர்களுக்கு வாங்கித் தரலாம். அல்லது, புத்தகத்தை வாங்கி கல்லூரி நூலகங்களுக்கு அளிக்கலாம். புத்தகம் வரப் போகிறது என்ற செய்தி வெளிவந்த உடனேயே குஜராத்தில் உள்ள ஒரு இலக்கிய அமைப்பு அங்கே உள்ள கல்லூரி மாணவர்களோடு இந்த நாவல் பற்றிய ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

இங்கே அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் என்று ஒரு நாடகம் எழுதினேன். உலக அளவில் எழுதப்பட்ட மிக முக்கியமான நாடகங்களில் அது ஒன்று. ஆனால் அந்தப் புத்தகம் வெளிவந்த பிறகும் இங்கே ஒரு சலனமும் இல்லை. புத்தகம் வெளிவந்த விஷயம் கூட இங்கே யாருக்கும் தெரியாது. இதற்கெல்லாம் யாருடைய காலைக் கழுவ வேண்டும் என்றும் தெரியவில்லை.

ஒப்பிட்டுப் பாருங்கள். ஆங்கிலத்தில் நாவல் வெளிவருவதற்கு முன்னேயே செய்தி கேள்விப்பட்டு குஜராத்தின் ஒரு இலக்கிய அமைப்பு அந்த நாவல் பற்றிக் கல்லூரி மாணவர்களுடன் உரையாட அழைக்கிறது. இங்கே நாடகம் வெளிவந்த செய்தியே யாருக்கும் தெரியாது. போஸ்டர் அடித்தா ஒட்ட முடியும்? சமூக வலைத்தளங்களில்தான் செய்தி சொல்ல முடியும். ஆனாலும் ஒரு சலனமும் இல்லை.

Conversations with Aurangzeb விலை 599. இப்போது முன்பதிவுத் திட்டத்தில் விலை ரூ. 513. புத்தகம் இந்த மாதம் இருபதாம் தேதி வெளிவரும்.

’Comprehensively irreverent . . . genre-bending . . . sparklingly witty.’ – MANU PILLAI

‘Who would have thought Aurangzeb could be so entertaining.’ – MANU JOSEPH

A writer hopes to get some primary research done for his new book by interviewing the spirit of Shah Jahan. But the endeavour turns into an obstacle course, with his translator arguing about how to start a novel, a fellow writer giving him unsolicited feedback, and a friend plaguing him with phone calls. Worst of all, Shah Jahan is elbowed out by Aurangzeb, who hijacks the novel. In a series of conversations that touch upon everything from marketing strategies for emperors to mutiny, from Marxism to Sunny Leone, and culminates in two men and a spirit going to a bar, Aurangzeb and various other visitors tell a story no one could have predicted.

Part historical novel, part satire, Conversations with Aurangzeb – by the cult Tamil writer Charu Nivedita and brilliantly translated by Nandini Krishnan – is a biting commentary on our times.

புத்தகம் வாங்க:
Conversations with Aurangzeb : A Novel : Nivedita, Charu, Krishnan, Nandini: Amazon.in: Books