குருவும் சிஷ்யர்களும்

எனக்கு பல நண்பர்கள் பொங்கல் வாழ்த்து அனுப்பினார்கள். பதில் அனுப்ப நேரம் இல்லை. உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். எனக்கு வரும் பொங்கல் வாழ்த்தை எப்படி எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை. ஏனென்றால், நான் பல காலமாகவே ஒரு ஞானியின் மனநிலையில் வாழ்ந்து வருவதாக நினைக்கிறேன். குகையில் தவம் செய்யும் ரிஷி என்று வைத்துக் கொள்ளுங்கள். என் அறைதான் என் குகை. என் அறை ஒரு பங்க்கர். லௌகீக வாழ்வின் எந்த ஒரு கொண்டாட்டமும் விழாவும் அல்லது எதிர்மறையான விஷயங்களும் – எதுவுமே – என்னை பாதிப்பதில்லை. என் எழுத்து இந்திய எல்லையைத் தாண்டிப் போக வேண்டும் என்ற ஆசையைத் தவிர வேறு எந்த ஆசையும் எனக்கு இல்லை. பயணமும் இசையும் என்னோடு கூடவே இருப்பவை.
அரசியல் ஆகட்டும், ஆன்மீகம் ஆகட்டும், சினிமா ஆகட்டும், எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும் அங்கே ஒரு கட்டத்துக்கு மேல் தன் மாணவனை, தன் வாரிசை, தன் சிஷ்யனை குரு வளர விடுவது இல்லை. ஒன்று, குருவை சிஷ்யன் கொன்று விடுவான். அல்லது, குரு சிஷ்யரைத் தீர்த்துக்கட்டி விடுவார். சில சமயங்களில் கொலை அளவுக்குப் போகாவிட்டாலும் குரு சிஷ்யனை ஓரங்கட்ட ஆரம்பிப்பார். சிஷ்யன் குருவுக்கு எதிராக சதி செய்வான். அல்லது, துரோக காரியங்களில் ஈடுபடுவான். நான் சொல்வது சினிமா துறையில் பணிபுரியும் துணை இயக்குனர்களுக்கு நன்கு புரியும் என்று நினைக்கிறேன்.
இந்த யோசனையெல்லாம் ஏன் வந்தது என்றால், அராத்துவின் ஃபேஸ்புக் பதிவைப் பார்த்ததால்தான். அவருடைய புருஷன் நாவலுக்கு முன்பதிவு நூறைத் தாண்டிவிட்டது. உல்லாசம், உல்லாசம்… இன்னும் முப்பத்தைந்திலேயே நிற்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக. இதற்கான காரணங்களையும் அராத்துவே சொன்னார். ஆர்த்தோ நாடகம், பெட்டியோ (பதினைந்தாயிரம் ரூபாய்) என்று தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டே இருக்கிறேன். விலையும் அதிகம்.
என் இடத்தில் வேறு ஒரு எழுத்தாளராக இருந்தால் அராத்துவை ஓரங்கட்ட ஆரம்பிப்பார். மனதில் புகைச்சல் வரும். தமிழில் icon எனக் கருதப்பட்ட ஒரு எழுத்தாளருக்கு அவருடைய இறுதிக்காலத்தில் தன் மாணவனைப் பார்த்து அப்படி புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது.
எனக்கு அப்படி ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால், சமூகம் இன்னும்கூட என் எழுத்துக்குத் தயாராகவில்லை என்று நினைத்துக் கொள்கிறேன். நான் எழுத்தாளர்களின் எழுத்தாளன் என்று நினைத்துக் கொள்கிறேன். மேலும், என் பள்ளியில் பயின்ற அராத்துவுக்கு இத்தனை புகழும் பிராபல்யமும் கிடைப்பது பற்றி நான் பேருவகை கொள்கிறேன்.
இந்தப் பின்னணியில் உங்களுக்கு மீண்டும் ஞாபகமூட்டுகிறேன். உல்லாசம், உல்லாசம்… நாவல் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் வெளிவரும். விலை 1000, 2000, 5000, 10000, 25000, 50000,100000. நாவலின் பின்னட்டையில் இந்த விலைப்பிரிவுகள் தனித்தனி பெட்டிகளாக இருக்கும். இதில் ஒரு பெட்டியில் ‘டிக்’ செய்யப்படும். உதாரணமாக, நீங்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்குகிறீர்கள் என்றால், ஐம்பதாயிரம் பெட்டியில் ’டிக்’ அடிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் எனக்குக் கிடைக்கும் பணம் அனைத்தும் சீலே பயணத்துக்கு உதவும். ஸ்பெய்ன், ஃப்ரான்ஸ், கொலம்பியா, சீலே என்று நான்கு நாடுகளுக்குச் செல்ல இருக்கிறோம்.
கேரள இலக்கிய விழாவில் ஒரு சீலே கவிஞரை சந்தித்தேன். அவர் சீலேயில் பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் அறிமுகம் செய்து தருவதாகச் சொன்னார்.

முன்பதிவு செய்ய விரும்பினால் அதற்கான ரேஸர் பே விவரம்:

https://rzp.io/l/ullasamullasam1000

https://rzp.io/l/UllasamUllasam2000

https://rzp.io/l/UllasamUllasam5000

https://rzp.io/l/UllasamUllasam10000

பத்தாயிரத்துக்கு மேல் ரேஸர்பே ஏற்பதில்லை. அதற்கு மேலான தொகை அனுப்ப விரும்பினால் எனக்கு எழுதவும்.

charu.nivedita.india@gmail.com