கேரளத்தில் சாலைவழிப் பயணம்

சென்னையிலிருந்து பதினைந்தாம் தேதி கிளம்பி பெங்களூர் சென்று அங்கே ஒருநாள் இரவு. அயன் ஹில். பதினாறு கிளம்பி கூர்க். பதினேழு மைசூரிலிருந்து கேரளம். கேரளத்தில் மலைகளும் நதிகளும் சூழ்ந்த ஒரு குக்கிராமத்தில் நான்கு நாள் தங்கல். நாங்கள் நான்கு பேர். மைசூரில் ஒரு நண்பரிடம் கார் உள்ளது. வர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதலாம். உங்களிடம் கார் இருந்தால் இன்னும் வசதி. மைசூர் நண்பர் உங்களிடம் கார் இல்லாமல் இருந்தால்தான் தன் காரை எடுப்பார். இல்லாவிட்டால் எங்கள் காரிலேயே சேர்ந்து கொள்வார். என்னோடு வரும் மூன்று பேரைத் தவிர வாசகர் வட்ட நண்பர்கள் யாரும் இந்த முறை சேரவில்லை. விடுப்பு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். மூவரில் இரண்டு பேர் நாடோடிகள். ஒருத்தர் தொழிலதிபர். அதனால்தான் சுதந்திரமாகக் கிளம்பி வருகிறார்கள். சேர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதுங்கள். வரும் நண்பர்கள் பெட்ரோல் செலவில் தங்கள் பங்களிப்பையும் செலுத்த வேண்டும். இப்படி எழுத அவமானமாக இருக்கிறது. என்ன செய்வது? இப்படியெல்லாம் எழுதித் தொலைக்கும் அளவுக்குத்தான் சமூகம் இருக்கிறது.

charu.nivedita.india@gmail.com