உலக சினிமா இலக்கணமும் அழகியலும் – 12 (சில முக்கிய அறிவிப்புகள்)

பயிலரங்கம் காலை பத்து மணிக்குப் பதிலாக ஒன்பதரைக்கே தொடங்கும். இயக்குனர் ராஜ்குமாரும் அராத்துவும் பயிலரங்கைப் பற்றி அறிமுகம் செய்து பேசுவார்கள்.

ஒரு மேடையில் பேசுவதும் பயிலரங்கம் நடத்துவதும் ஒன்று அல்ல என்று தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறது. எப்படி என்று விளங்கிக் கொள்வோம்.

1970களின் முற்பகுதியில் வந்த ஒரு திரைப்படம். அந்தத் திரைப்படம் சினிமா மொழியில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்தியாவின் திரைப்படக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் அந்தப் படம் இல்லை. இந்தியாவில் அந்த இயக்குனர் பற்றிப் பேசப்பட்டதும் இல்லை. அமெரிக்காவில் மட்டும்தான் இன்னமும் விவாதிக்கிறார்கள். அதுவும் பல்கலைக்கழக மட்டங்களில். அந்தப் படத்தை நான் ஏன் உங்களிடம் விவாதிக்க நினைக்கிறேன் என்றால், உங்களிடம் ஒரு கேமராவும் ஒருசில லட்சம் ரூபாயும் இருந்தால் போதும். அப்படி ஒரு படத்தை எடுத்து விடலாம். ஆனால் அந்தத் திரைமொழியின் இலக்கணமும் அழகியலும் தெரிந்திருக்க வேண்டும். இது ஒன்றும் ஆவணப்படம் அல்ல.

அந்தப் படம் பற்றி நான் எத்தனை மணி நேரம் பேசினாலும் அதன் அர்த்தத்தை சரியாக வாங்கிக் கொள்ள முடியாது. காரணம், திரைப்படம் எப்படி இருக்கும் என்பதைப் பார்த்தால்தான் புரிந்து கொள்ள முடியும். அதனால் அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளைத் திரையிட வேண்டும். படமோ எங்கேயும் கிடைக்கவில்லை. கடைசியில் ஒளிப்பதிவாளர் செழியனின் முயற்சியில் கிடைத்தது. படத்திலிருந்து முதல் ஐந்து நிமிடத்திலிருந்து எட்டு நிமிடம், 9.30 நிமிடத்திலிருந்து 13 நிமிடம், 20.25 நிமிடத்திலிருந்து 21.32 நிமிடம், 27ஆவது நிமிடத்திலிருந்து 30 நிமிடம் என்று திரையிட வேண்டும். இப்படி ஒரு ஐம்பது படங்கள். இதெல்லாம் ஒரு இரண்டு ஆண்டு திரைப்படப் படிப்பாக இருந்தால் முழுப் படத்தையும் பார்க்கலாம். இது ஒருநாள் பயிலரங்கம். திரைப்படக் கல்லூரியில் இரண்டு ஆண்டு படிப்பதை நான் ஒருநாளில் சொல்லித் தர இருக்கிறேன். அதனால்தான் இப்படி.

படத்தில் சப்டைட்டில் எல்லாம் ஃப்ரெஞ்சில் இருந்தது. படமோ ஸ்பானிஷ். ஸ்பானிஷ் படத்துக்கு ஃப்ரெஞ்ச் சப்டைட்டில். பார்த்தேன். பேச்சும் ஓரளவு புரிந்தது. ஆனாலும் உங்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காக ஃப்ரெஞ்ச் தெரிந்த நண்பரை அழைத்து அவரைப் பார்க்கச் செய்தேன். பார்த்து அந்த வசனங்களைச் சொல்லி விட்டு, படத்தை டவுன்லோடு செய்து வி.எல்.சி.யில் பார்த்தால் ஆங்கில சப்டைட்டில் வருகிறது என்றார். அதையும் பார்த்தேன்.

இதில் என்னோரு சேர்ந்து படம் பார்த்து எடிட்டிங் வேலை செய்து, பவர் பாய்ண்ட் தொகுக்கிறார் இல்லையா ஒரு நண்பர், அவர் பாடுதான் பெரும்பாடு. நான் ஒரு நாளில் பத்து மணி நேரம் வேலை செய்கிறேன் என்றால், அவர் ஒரு ஐந்து மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. கேட்கவில்லை. இன்னும் அதிகம் கூட இருக்கும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றால் ஒருத்தரிடமிருந்தும் ஒரு அசைவையும் காணோம். இதுவரை பெயர் கொடுத்தவர் அனைவரும் என் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே. வெளியிலிருந்து ஒருத்தர் வரவில்லை. அமெரிக்காவிலிருந்து பத்து பேர் ஆளுக்குப் பத்தாயிரம் ரூபாய் அனுப்பினார்கள். பத்து பேரும் நெருங்கிய நண்பர்கள். வெளியிலிருந்து ஒருத்தர் கூட இல்லை. ஐம்பது டாலர் என்று சொல்லியும் ஒருத்தர் வரவில்லை. நான் என்ன நினைக்கிறேன் என்றால், கட்டணமே இல்லை என்றாலும் வர மாட்டார்கள். காரணம், நான் காது கேளாதோர் மத்தியில் சங்கீதம் இசைத்துக்கொண்டிருக்கிறேன்.


ஒரு திரைப்படத்தில் இசை எப்படி இருக்க வேண்டும்? இந்தப் பயிலரங்கில் திரை இசை பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

***

ஒரு நண்பர் பணம் அனுப்புவது குழப்பமான முறையாக இருக்கிறதே என்று சொன்னார். இந்தியாவில் இருக்கிறீர்கள் என்றால் குழப்பமே இல்லாமல் 95975 00949 என்ற எண்ணுக்கு ஜீபே செய்து விடலாம். இல்லாவிட்டால் எனக்கு அனுப்பலாம். charunivedita@axisbank

அல்லது, என் வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம்:

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai

இது தவிர, ரேஸர்பே போன்ற வசதிகளும் உள்ளன.

குறைந்த பட்ச நன்கொடை: 2000 ரூ. மாணவர்களுக்கு: 1000 ரூ.

வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு: 50 டாலர். ஸூம் இணைப்பு வழங்கப்படும். அமெரிக்காவில் இரவு நேரம் என்பதால் ஒருசில நாள்களில் பயிலரங்கின் ஒளிப்பதிவை அனுப்பி வைக்க முடியும். இந்தியாவிலேயே தொலைதூரத்தில் வசிப்பவர்களுக்கு ஸூம் இணைப்பு அனுப்பப்படும்.

பயிலரங்கம் நடக்கும் இடம்: எஸ்.கே.பி. கல்லூரி, திருவண்ணாமலை. மதிய உணவும் தேநீரும் வழங்கப்படும்.