27. துய்ப்பின் கொண்டாட்ட வெளி

நகிஸா ஓஷிமாவின் இயக்கத்தில் 1976இல் வெளிவந்த In the Realm of the Senses என்ற திரைப்படத்தை transgressive இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள அனைவருமே பார்க்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன்.  அச்சு அசலாக ஒரு நீலப்படம் பார்ப்பது போலவே இருக்கும்.  ஆனால் நீலப்படம் அல்ல என்பது பார்வையாளருக்கு திரைப்படம் ஆரம்பித்ததுமே தெரிந்து விடும்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு காட்சியில் சில கெய்ஷாக்கள் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கே தரையில் விழுந்து கிடக்கும் ஒரு கிழவனைப் பார்க்கிறார்கள். ஆடை கலைந்திருப்பதால் வெளியே தெரியும் அவனது ஆண்குறியில் சிறுவர்கள் பனிக்கட்டிகளை அடித்து விளையாடுகிறார்கள். (க்ளோஸப்பில் ஆண்குறி). சிறுவர்களை விரட்டி விடும் கெய்ஷாக்களில் ஒருத்தியைப் பார்த்து கிழவன் “உன்னை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன், உன்னிடம்  அடிக்கடி வந்து இன்பம் துய்த்திருக்கிறேன், தோக்யோவில் பார்த்தேனா, க்யோத்தோவில் பார்த்தேனா என்று ஞாபகம் இல்லை” என்கிறான். 

எனக்கு உன்னைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை என்று சிரித்துக்கொண்டே சொல்கிறாள் அந்த கெய்ஷா. 

”ஒரே ஒரு முறை எனக்கு இன்பம் தந்து விட்டுப் போ.”

“உன் சாமான் இப்படித் தளர்ந்து போயிருக்கிறதே?  எப்படி இன்பம் கொடுப்பது?”

தளர்ந்து போன ஆண்குறியின் க்ளோஸப்.

”அப்படியானால் உன் சாதனத்தைக் காண்பி.  அதைப் பார்த்தால் எழுந்து விடும்.” 

அவள் முடி அடர்ந்த தன் யோனியைக் காண்பிக்கிறாள்.  (க்ளோஸப்).  கிழவனின் ஆண்குறி சற்றே எழுச்சி அடைகிறது.  அவன் அவளுடைய யோனியைப் பார்த்துக்கொண்டே கர மைதுனம் செய்கிறான்.  அவளும் அதைத் தொட்டுத் தடவி உருவி அவன் கர மைதுனம் செய்ய உதவுகிறாள்.  (க்ளோஸப்.)

அவள் பெயர் சதா.  அவள் ஒரு பயணியர் விடுதியில் பணிப்பெண்ணாக வந்து சேர்கிறாள்.  அந்தப் பயணியர் விடுதியின் மேலாளரான கிச்சி எந்நேரம் பார்த்தாலும் விடுதியில் உள்ள பணிப்பெண்களொடு கலவியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான்.  அந்தக் காட்சிகள் அனைத்தும் மிகத் துலக்கமாகவும், வெளிப்படையாகவும் காட்சிப்படுத்தப்படுகின்றன. 

சதாவின் வருகைக்குப் பிறகு அவனை அவள் தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாள். அதாவது, அவன் எந்நேரமும் தன்னைப் புணர்ந்து கொண்டே இருக்கச் செய்கிறாள். 

ஒரு காட்சி:  சதா சிறுநீர் கழிப்பதற்காகச் செல்கிறாள். சரி, போய் வா, அதுவரை நான் காத்திருக்கிறேன் என்கிறான் கிச்சி.  “இல்லை வேண்டாம், இப்போதே என்னைப் புணர்” என்கிறாள் சதா. 

கலவியில் ஈடுபடுகிறார்கள். (க்ளோஸப்).  அவனுக்கு விந்து வெளியாவதில்லை.  ”சரி, எவ்வளவு நேரமானாலும் ஆகட்டும், நான் கலவியில் ஈடுபடுகிறேன், கவலைப்படாதே” என்கிறாள் சதா. 

நீண்ட நேரம் ஆகியும் அவனுக்கு விந்து வெளியாகாததால் அவள் அவனுடைய ஆண்குறியை வாயில் எடுத்து சப்புகிறாள்.  சிறிது நேரத்தில் வெளிவரும் விந்து அவள் வாயிலிருந்து ஒழுகி வழிகிறது. 

இந்தக் காட்சி முழுவதும் க்ளோசப்பில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

இந்தக் காட்சியை என்னால் உலகின் மிக முக்கியமான திரைப்படங்களின் மிக முக்கியமான காட்சிகளுக்கு இணையாக வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. 

Battle of Chile ஆவணப்படத்தில் டாக்டர் அயெந்தே மொனேதா அரண்மனையில் தன்னைத்தானே சுட்டுக் கொல்லும் காட்சி.

The Hour of the Furnaces ஆவணப்படத்தில் சே குவேராவின் குண்டு துளைக்கப்பட்ட உடல்.

Saving Private Ryan படத்தின் ஆரம்பத்தில் இருபத்தைந்து நிமிடங்களுக்கு ஓடும் போர்க் காட்சிகள்.

The Pianist படத்தில் ஒரு நடைபாதையில் இரண்டு இளம் நாஜி சிப்பாய்கள் நடந்து செல்கிறார்கள்.  அப்போது அவர்கள் எதிரே முதிய யூதர் ஒருவர் வருகிறார்.  சிப்பாய் அந்த முதியவரை இங்கே வா என்று அழைத்து,  “ஏன் நீ எனக்கு வணக்கம் சொல்லவில்லை?” என்று கேட்கிறான்.  முதியவர் தன் தொப்பியைக் கழற்றி, தலையைக் குனிந்து, “மன்னியுங்கள்” என்கிறார்.  சிப்பாய் அந்த முதியவரைக் கடுமையாக அறைகிறான்.  அறையை வாங்கிக் கொண்டு தொடர்ந்து நடக்கும் முதியவரைப் பார்த்து சிப்பாய்,  “நடைபாதை உனக்கானது அல்ல, கீழே இறங்கி சாக்கடையில் நடந்து போ” என்கிறான்.

அதே படத்தின் இறுதியில் நாயகன் நாஜி அதிகாரிக்கு பியானோ வாசித்துக் காண்பிக்கும் காட்சி. 

ஸைக்கோ படத்தில் வரும் ஷவர் காட்சி.

ஏலியன் படத்தில் இதயத்தைக் கிழித்துக்கொண்டு ஏலியன் வெளிவரும் காட்சி.

Zoltan Fabri இயக்கிய Fifth Seal படத்தில் இறந்து கொண்டிருக்கும் தன் தோழனை அவனது சகா கன்னத்தில் அறையும் காட்சி.  (கன்னத்தில் அறையாவிட்டால் அவன் அங்கிருந்து உயிரோடு செல்ல முடியாது.  அவன் உயிரோடு செல்லாவிட்டால் அவன் வளர்க்கும் அனாதை யூதக் குழந்தைகளைக் காப்பாற்ற ஆள் இல்லை.)

காட்ஃபாதர் படத்தில் வரும் குதிரைத் தலை மற்றும் “நான் கொல்லவில்லை” என்று மைக்கேல் தன் மனைவியிடம் சொல்லும் காட்சிகள்.

இப்படி நூறு படங்களிலிருந்து நூறு காட்சிகளைச் சொல்லலாம்.  காரணம், ’உலக வாழ்வில் மானுட இனம் உணரும், அனுபவிக்கும் அத்தனை உணர்வுகளுக்கும் இணையானதே உடலின் காம இச்சையும்’ என்பதுதான் In the Realm of the Senses படத்தின் மையம்.

ஒரு காட்சியில் கிச்சியின் மேல் ஏறிப் புணர்ந்தபடி சதா ஒரு இசைக்கருவியை வாசித்துக்கொண்டே பாடுகிறாள். உணர்ச்சி மிகுதியில்  ஒரு கட்டத்தில் என்னால் வாசிக்க முடியவில்லை என்று சொல்லும்போது கிச்சி அவளைப் பாடிக்கொண்டே புணரும்படி கட்டாயப்படுத்துகிறான். 

(இதே போன்ற காட்சிகள் என்னுடைய எக்ஸைல் நாவலில் உண்டு.  அந்த நாவலை எழுதும்போது நான் இந்தப் படத்தைப் பார்த்திருக்கவில்லை.  எக்ஸைலைப் படித்த பல நண்பர்கள் அதில் வரும் இது போன்ற கலவிக் காட்சிகளெல்லாம் புருடா என்றும், அப்படி நடக்கவே வாய்ப்பு இல்லை என்றும் சொன்னார்கள். நகிஸா ஓஷிமா அதையெல்லாம் பட்டவர்த்தனமாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்.)

ஒரு காட்சியில் கிச்சி தன் மனைவியைப் புணர்ந்து கொண்டிருக்கிறான்.  அதைப் பார்க்கும் சதா கிச்சியின் மனைவியைக் கற்பனையிலேயே குத்திக் கொல்கிறாள்.  ஒருநாள் மனைவி தனக்கு மென்ஸஸ் ஆகி விட்டது என்று சொல்லும்போது அவளுடைய யோனியிலிருந்து வழியும் குருதியை எடுத்துச் சுவைக்கிறான் கிச்சி. 

கதையின் போக்கில் சதா கிச்சியின் மனைவியை ஓரங்கட்டுகிறாள்.  கதை என்ன கதை?  அந்த விடுதியில் உள்ள பெண்களையெல்லாம் கிச்சி புணர்ந்துகொண்டே இருக்கிறான்.  சதா வந்த பிறகு சதாவும் அவனும் புணர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.  

பிறகு கிச்சிக்கும் சதாவுக்கும் ஒருநாள் திருமணச் சடங்கு நடக்கிறது.  படத்தில் இது ஒரு முக்கியமான காட்சி.  ஆறு ஏழு கெய்ஷாக்கள் குழுமியிருக்க கிச்சியும் சதாவும் கலவி கொள்கிறார்கள்.  அப்போது ஒரு கெய்ஷா அந்தக் கலவியைக் கண்கொண்டு காண கூச்சப்படுகிறாள் என்பதால் மற்ற கெய்ஷாக்கள் அவளை நிர்வாணமாக்கி அவள் யோனியில் ரப்பர் ஆண்குறியால் செயற்கைக் கலவி செய்கிறார்கள்.  இது எல்லாமே க்ளோஸப்பில் காண்பிக்கப்படுகிறது.

அந்த இரவில் ஏழெட்டு கெய்ஷாக்களும் கலந்து கொள்ளும் கூட்டுக் கலவி நடைபெறுகிறது.  அப்போது ஒரு பாடகன் பாரம்பரியப் பாடலைப் பாடி ஆடுகிறான். 

அடுத்த காட்சியில் கிச்சியின் ஆண்குறியை வாய்ப் புணர்ச்சி செய்து கொண்டிருக்கிறாள் சதா.  க்ளோஸப்.  அப்போது அவர்களின் அறைக் கதவைத் திறக்கும் பணிப்பெண் கண்களில் பொறாமையுடன், “மதியம் ஆகி விட்டது” என்று சொல்லிவிட்டுக் கதவை மூடுகிறாள்.

கிச்சி கண் விழித்து சதாவுக்குக் காலை வணக்கம் சொல்லி விட்டு, ”இரவு முழுவதுமா என் ஆண்குறியை சுவைத்துக் கொண்டிருந்தாய்?  உனக்கு அலுக்கவில்லையா?” என்று கேட்கிறான். 

ஆமாம், எனக்கு இந்த ’இளம் முனிவனை’ ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது என்கிறாள் சதா.  கிச்சி சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து கொள்கிறான்.

அதற்காகக் கழிப்பறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை,  என் புழையிலேயே சிறுநீர் கழி, அது எனக்குப் பிடிக்கும் என்கிறாள் சதா.

என்னால் இரண்டு வேலையை ஒரே சமயத்தில் செய்ய முடியாதே என்கிறான் கிச்சி.  இருந்தாலும் சதா அவனை விடுவதாக இல்லை.  கலவி தொடங்குகிறது. 

கிச்சியின் முதல் கேள்வி:  நீ ஈரமாக இல்லாத நேரமே இல்லையா?

”இல்லை.  இது சம்பந்தமாக நான் ஒரு மருத்துவரைக் கூட பார்த்தேன். ஒரு ஆண் தொட்டாலே நான் ஈரமாகக் கூடிய அளவுக்கு உணர்ச்சி மிகுந்தவளாக இருக்கிறேன் என்று அவர் சொன்னார்” என்கிறாள் சதா. 

இந்தக் காட்சி முழுவதும் சதாவின் உடலும் அந்த உடலின் வேட்கையும்தான் க்ளோஸப்பில் காண்பிக்கப்படுகின்றன.  ரொமான்ஸ் படத்தில் வரும் நாயகியின் தேகத்தை அவள் பள்ளியின் முதல்வர் வதைக் கலவி (BDSM) செய்வதற்காகக் கட்டிப் போட்டு, அவள் வாயையும் கட்டி, அவள் யோனியில் மயிலிறகால் வருடும்போது யோனியிலிருந்து மதன நீர் வழிந்தோடும் காட்சியை இங்கே நாம் நினைவு கூரலாம்.  ரொமான்ஸ் இயக்குனர் காத்ரீன் ப்ரேயா தான் ரொமான்ஸை இயக்குவதற்கு உந்துதலாக இருந்தது In the Realm of the Senses படம்தான் என்று சொல்லியிருக்கிறார்.

நகிஸா ஓஷிமாவின் பெரும்பாலான படங்களைப் போலவே இந்தப் படமும் நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தையே அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.  1936ஆம் ஆண்டு சதா அபே என்ற பெண் தன் கணவன் கிச்சியோடு உடலுறவு கொள்ளும்போது அதன் உச்சத்தில் கிச்சி இறந்து போகிறான்.   உடனே சதா அவனுடைய ஆண்குறியை அறுத்து வைத்துக்கொண்டு தோக்யோவின் தெருக்களில் அலைந்தாள்.  இது அப்போது மிகப் பெரிய செய்தியாக ஆனது.  ஆனால் மக்களும் நீதிமன்றமும் சதாவை இரக்கத்துடன் அணுகினார்கள்.  அதனால் அவளுக்கு ஆறு ஆண்டுகளே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  இப்போதும் கூட செக்ஸ் பற்றிய tabooவைத் தாண்டும்போது “என்ன, சதா மாதிரி பேசுகிறாய்?  சதா மாதிரி நடந்து கொள்கிறாய்?” என்று ஜப்பானிய பேச்சில் சதாவின் கதை இருந்துகொண்டே இருக்கிறது.  

தி. ஜானகிராமனின் மோகமுள்ளில் யமுனா ஒரு ஹிந்துஸ்தானி பாடகரைக் கேட்டு விட்டு, “இப்படியே செத்து விடலாம் போலிருக்கிறது பாபு” என்று சொல்கிறாள்.  அதேபோல் சதாவும் கிச்சியும் தங்கள் உடல் உறவின் உச்சமாக மரணத்தைக் காண்கிறார்கள்.  இப்படிப்பட்ட காதல் ஜோடிகள் ஜப்பானில் உறவின் உச்சத்தில் தற்கொலை செய்து கொள்வது வழக்கம்.  அதை ஜப்பானிய மொழியில் ஷிஞ்ஜு என்கிறார்கள்.  ஆனால் சதாவும் கிச்சியும் தற்கொலை செய்து கொள்வதற்கு பதிலாகத் திரும்பத் திரும்ப உடலுறவில் ஈடுபடுவதிலும், வித்தியாசமான கலவி முறைகளை சோதித்துப் பார்ப்பதிலுமாக தங்கள் காமத்தைத் தீர்த்துக்கொள்ள முயல்கிறார்கள்.  உதாரணமாக ஒருமுறை அறுபத்தொன்பது வயது பெண்மணி ஒருத்தியோடு கிச்சியைக் கட்டாய உடலுறவு கொள்ளச் செய்கிறாள் சதா.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் செலவுக்குப் பணம் இல்லாமல் போகிறது.  அதனால் தான் படித்த பள்ளியின் முதல்வரிடம் போய் படுத்து, பணம் வாங்கி வருவதற்காக நகரம் செல்கிறாள் சதா.  நீ என் அருகில் இருந்தால் போதும், உறவு கொள்ள வேண்டாம் என்கிறார் பள்ளி முதல்வர்.  ”இல்லை, இல்லை, உங்களோடு உறவு கொள்வதை எண்ணி நான் நேற்று இரவு முழுவதும் உறக்கம் கொள்ளவில்லை” என்கிறாள் சதா.  விறைப்பு இல்லாமல் முதல்வரால் அவளோடு உறவு கொள்ள முடியாமல் போகவே, சதா தன்னை அடிக்கச் சொல்கிறாள்.  அவர் மென்மையாக அடிக்கவே, கடுமையாக அடிக்கச் சொல்கிறாள்.  கிள்ளச் சொல்கிறாள்.  முதல்வர் மென்மையாகக் கிள்ளவே பலமாகக் கிள்ளச் சொல்கிறாள்.  பிறகு தலைமுடியைப் பிடித்து இழுக்கச் சொல்கிறாள்.  பிறகு அவளே முதல்வரின் மேலே ஏறி அவரை வன்கலவி செய்கிறாள்.

ரியூ முராகாமியின் தோக்யோ டிகேடன்ஸ் படம் ஞாபகம் வருகிறது. அதில் ஒருவன் தன்னிடம் வரும் பாலியல் தொழிலாளியிடம் தாங்கள் கலவி கொள்ளும்போது தன் கழுத்தை நெறிக்கச் சொல்கிறான்.  ”நான் நிறுத்து நிறுத்து என்று கத்தினாலும் நீ நிறுத்தக் கூடாது,  அப்படி நிறுத்தினால் உன் நிறுவனத்துக்கு உன்னைப் பற்றி புகார் பண்ணுவேன்” என்கிறான்.  உடலுறவின்போது அவன் சொன்னபடியே அவள் அவன் கழுத்தை நெறிக்கிறாள்.  உறவு முடிந்து பார்த்தால் அவன் சுவாசமின்றிக் கிடக்கிறான்.  பாலியல் தொழிலாளி தன் தோழியோடு அந்த இடத்திலிருந்து தப்பி ஓட முயற்சிக்கும்போது அவனுக்கு சுவாசம் வந்து விடுகிறது.

சென்ஸஸ் படத்தில் சதா கிச்சிக்கு இதைச் செய்யும்போதுதான் கிச்சி இறந்து போகிறான்.

வெளியூருக்கு வந்த சதாவினால் ஒருநாள் கூட கிச்சியைப் பிரிந்து இருக்க முடியவில்லை.  தன்னோடு எடுத்துக்கொண்டு வந்த அவனுடைய ஆடையை ரயிலின் கழிப்பறைக்குச் சென்று முகர்ந்து பார்க்கிறாள்.

சதா ஊருக்குப் போயிருக்கும் சமயத்தில் விடுதியில் உள்ள ஒரு மூதாட்டி, “நீ யாருக்கும் தெரியாமல் உன் ஊருக்கு ஓடி விடு, இல்லாவிட்டால் சதா உன்னோடு படுத்துப் படுத்தே உன்னைக் கொன்று விடுவாள்” என்று கிச்சியை எச்சரிக்கிறாள்.

அதைக் கேட்டு கோபமடையும் கிச்சி அவளை அப்போதே வன்கலவி செய்கிறான். (நடிப்புக் காட்சி அல்ல, நிஜக் காட்சி.)

சதாவும் கிச்சியும் ஒருவரை ஒருவர் வெறித்தனமாக ————————  இந்த இடத்தில் நேசிக்கிறார்கள் என்று போட்டாலும் தவறு, காதலிக்கிறார்கள் என்று போட்டாலும் தவறு.  ஏனென்றால் இருவரும் ஒருவரோடு ஒருவர் உடலுறவு கொள்வதையே தங்கள் உச்சமான நேசம் எனக் கருதுகிறார்கள்.  அந்த உடல் சேர்க்கையில்தான் அவர்கள் இருப்பின் அர்த்தத்தையே காண்கிறார்கள்.

பின்நவீனத்துவத் தத்துவவாதியான Jean Baudrillard சினிமாவை simulacrum என்று கூறுகிறார்.  இமிடேஷன்.  ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களோ இமிடேஷனையே நிஜம் என்று நம்பி வாழ்கிறார்கள்.  தென்னமெரிக்காவில் நிஜமான புரட்சியாளன் சே குவேரா என்றால் இங்கே இமிடேஷன் புரட்சிக்காரர் எம்ஜியார்.  அதைப் போலவே தமிழ்நாட்டில் அறிஞர்கள், கலைஞர்கள், நாவலர்கள், புரட்சித் தலைவிகள், கவிப் பேரரசுகள், சிந்தனைச் சிற்பிகள் என்று நிறைய உண்டு.  இது எல்லாமே simulacrum.  இமிடேஷன்.  அதன் காரணமாகத்தான் தங்கள் கண்முன்னே தொங்கும் படுதாவில் தீயவர்களை ஒழித்துக்கட்டும் சினிமா நடிகனை நிஜமான நியாயவாதி என நினைத்து தமிழர்கள் தங்களின் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.

உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட எல்லா திரைப்படங்களுக்கும் நகிஸா ஓஷிமாவின் In the Realm of the Senses படத்துக்குமான வித்தியாசம், சென்ஸஸ் unsimulated திரைப்படம் என்பதுதான்.  சென்ஸஸின் காட்சிகள் நடிக்கப்பட்டவை அல்ல.  நிஜமாகவே நிகழ்த்தப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டவை. 

கிச்சி சதாவுக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கிறான்.  விடுதிக்குத் திரும்பிய உடனேயே ”உன்னுடையதை எடுத்து எனக்குள் விட்டுக் கொள்ளவா?” என்கிறாள் சதா. 

சிரித்துக்கொண்டே கிச்சி, “எப்போது பார்த்தாலும் உனக்கு என்னுடையதை எடுத்து உள்ளே விடுவதும், வெளியே விடுவதும்தான் வேலையாகப் போய் விட்டது” என்கிறான்.

அடுத்து வருவது உடலுறவுக் காட்சி.  படம் முழுவதுமே சதா – கிச்சி உடலுறவுக் காட்சிகள்தான் என்றாலும் இந்தக் காட்சி மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகிறது. 

சதாவும் கிச்சியும் எதிரும் புதிருமாக அமர்ந்த நிலையில் உறவு கொள்கிறார்கள்.  அப்போது சதா சொல்கிறாள்: ”உன்னுடைய சாதனம் எனக்குள் நுழைவதையும் வெளியே வருவதையும் கண்கொண்டு பார்க்கும்போது நான் அடையும் இன்பத்துக்கு அளவே இல்லை.  பேரின்பம்.  பேரின்பம்.  பேரின்பம்.  பேரின்பம்.  பேரின்பம்.  பேரின்பம்.  பேரின்பம்.  என் சுயநினைவையே இழந்து விட்டது போல் இருக்கிறது. அளவிட முடியாத போதையில் திளைத்துக்கொண்டிருக்கிறேன் நான்.”

இதுதான் மற்ற நீலப்படங்களிலிருந்து சென்ஸஸை வேறுபடுத்துகிறது.  இந்த இடத்தில் சதா என்ற நிஜமான பெண்ணை திரைப்படத்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கும் நடிகை Eiko Matsudaவைப் பாராட்டாத விமர்சகர்களே இல்லை.  அவர் இந்தப் படத்தில் செய்திருப்பது ஒரு மகத்தான சாதனை என்பதை படத்தைப் பார்க்கும்போது உணர்வீர்கள். 

“உன் பள்ளி முதல்வரோடு எப்படிப் பண்ணினாய்?  அதை இப்போது செய்து காண்பி” என்கிறான் கிச்சி.

“அவருக்கு விறைக்கவே இல்லை.  அதனால் நான்தான் அவரை என்னென்னவோ செய்து தூண்டி விட வேண்டியிருந்தது.  ஆனால் அதற்கிடையில் நான் உன்னைப் பற்றி நினைத்ததும் எனக்குள் ஏதோ ஹிஸ்டீரியா வந்து விட்டது போல் உணர்ந்தேன்.  என்னை அறையச் சொன்னேன்.”

கிச்சியின் முகம் சுருங்குகிறது.

”என்னை அறை.”

அறைகிறாள்.

”இன்னும் பலமாக அறை.”

பலமாக அறைகிறாள்.

“இன்னும் பலமாக.”

மேலும் பலமாக அறைகிறாள்.  அறைந்து கொண்டே இருக்கிறாள்.  கலவி நடந்து கொண்டே இருக்கிறது.  அறைகளும் பலமாக விழுந்தவண்ணம் இருக்கின்றன.

கடைசியில் அவனும் அவளும் உச்சம் அடைகிறார்கள்.

இங்கிருந்துதான் அவர்களின் BDSM நிகழ்வுகள் தொடங்குகின்றன. 

அடுத்த காட்சியில் கிச்சியும் சதாவும் அரை நிர்வாண உடையில் அமர்ந்திருக்கிறார்கள்.   ஒரு பெண் அவர்கள் அருகில் அமர்ந்து இசைக்கருவியை இசைத்தபடி பாடிக்கொண்டிருக்கிறாள்.  அப்போது சதா ஒரு மாமிசத் துண்டை எடுத்துத் தன் ஈரமான யோனியில் தேய்த்து கிச்சியிடம் தருகிறாள். 

உண்மையான காதல் என்றால் காதலி சொல்லும் எதையுமே செய்ய வேண்டும் என்கிறாள் சதா.

உன்னுடைய மகிழ்ச்சிக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றபடி அவன் அந்த மாமிசத் துண்டை சுவைக்கிறான்.  அப்போது சதா அவன் வாயிலிருக்கும் மாமிசத் துண்டின் பகுதியை தன் வாயால் கவ்விச் சுவைக்கிறாள்.  தொடர்ந்து கிச்சி மாமிசத் துண்டுகளை எடுத்து அவள் யோனியில் தொட்டுத் தொட்டு உண்கிறான்.  அவன் உண்பதை அவன் வாயிலிருந்து கவ்வி சதா உண்கிறாள்.  இது அனைத்தும் ஒரு பாடகியின் கண்முன்னே நடக்கிறது.

மாமிசத்தைத் தின்ற பிறகு கிச்சி ஒரு அவித்த முட்டையை எடுத்து சதாவின் முடியடர்ந்த யோனிக்குள் திணித்து விடுகிறான்.  இது மிக நெருக்கமான க்ளோஸப்பில் காண்பிக்கப்படுகிறது.  முட்டை யோனியின் உள்ளே போனதும் அசௌகரியமடையும் சதா அதை வெளியே எடு என்கிறாள்.

என்னால் முடியாது, நீயேதான் குத்துக்காலிட்டு அமர்ந்து முக்க வேண்டும், அப்படிச் செய்தால் முட்டை வெளியே வரும் என்கிறான் கிச்சி.

அவன் சொன்னபடியே செய்கிறாள் சதா.  முட்டை வெளியே வந்து விழுந்ததும் அதை எடுத்து அப்படியே வாயில் போட்டுக் கொள்கிறான் கிச்சி. 

இந்தக் காட்சி முழுவதும் நடிக்கப்படாமல் நிஜமாகவே நிகழ்த்தப்படுகிறது. 

ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) எழுதிய The Story of the Eye நாவலில் வரும் நாயகி இதேபோல் முட்டையின் மீது அமர்ந்து கொள்வதை இங்கே நாம் இந்தக் காட்சியோடு ஒப்பிடலாம்.  ஆனால் பத்தாயின் நாவலில் முட்டை ஒரு குறியீடு.  ஆனால் சென்ஸஸ் படத்தில் உடல் துய்ப்புக்கான ஒரு பௌதீகமான பொருள்.

காட்சி முடியவில்லை.  உடலுறவு கொள்ளும் முன்பாக ஒரு குறுங்கத்தியை எடுக்கும் சதா “உன்னுடைய சாதனத்தை அறுத்து நிரந்தரமாக எனக்குள் விட்டுக் கொள்ளப் போகிறேன்” என்கிறாள்.

”அப்படிச் செய்தால் நீ இறந்து விடுவாயே என்பதால்தான் தயக்கமாக இருக்கிறது.”

“இல்லை சதா.  நான் இறக்க மாட்டேன்.  எப்போதுமே நான் உன் கூடவேதான் இருப்பேன் என்று சொல்லியிருக்கிறேன் இல்லையா?”

”உண்மைதான்.  ஆனால் உன்னை உன் மனைவியோடு பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை.  நீ எனக்கு மட்டுமே வேண்டும்.  அதனால்தான் உன் குறியை அறுத்து என் யோனிக்குள் விட்டுக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்.”

மீதி நாளை வரும்…

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதை ஞாபகப்படுத்துகிறேன்.

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai

***