புதிய எக்ஸைல் பற்றிய என் விளக்கம்

நம்மை விட நம் நண்பர்கள் வேகமாக இருக்கிறார்கள்.  ஒரு நண்பர் டிசம்பர் ஏழுக்குப் பிறகு புதிய எக்ஸைலின் விலை 500 ரூ தான் இருக்கும் என்று எழுதியிருக்கிறார்.  ஒருக்கணம் அவரே கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளராக கற்பனை செய்து பார்ப்பதை யாரும் தடுக்க முடியாது.  அதற்காக அதை அவர் பொதுத்தளத்தில் பகிர்ந்து கொண்டால் என்ன சொல்லலாம்?  நாளையே அவர் தமிழகத்தின் முதல்வராகத் தன்னை நினைத்துக் கொண்டு டாஸ்மாக்கில் நாளையிலிருந்து விஸ்கி பிராந்தியெல்லாம் ஓசியில் கிடைக்கும் என்று வலைத்தளத்தில் எழுதுவாரா?  எழுதினால் பைத்தியம் என்றுதானே சொல்வார்கள்?  எனவே பைத்தியங்களின் பேச்சை நம்பாதீர்கள்.  டிசம்பர் 7-க்குப் பிறகு புதிய எக்ஸைலின் விலை ஆயிரம் ரூபாய்.  ஜனவரி 5 அன்று புத்தக வெளியீட்டு விழாவின் போது 50 சதவிகிதக் கழிவு கொடுக்கப்பட மாட்டாது.  கொடுத்தால் முன்பதிவுக்குப் பணம் அனுப்பியவர்களுக்கு நியாயம் செய்வதாக இருக்காது.  அன்றைய தினம் புதிய எக்ஸைல் விலை 1000 ரூ.  என் கையெழுத்து வேண்டுமெனில் தனியாக அதற்கு 5000 ரூ.  இந்தப் பிரச்சினை எல்லாம் வேண்டாம்.  500 ரூபாய்க்கு முன்பதிவு செய்து விடுங்கள்.  புதிய எக்ஸைல் பற்றி கீழே உள்ள இணைப்பில் பேசியிருக்கிறேன்.   இதைச் செய்து கொடுத்த நண்பர்கள் தங்கள் பெயர் வேண்டாம் என்றார்கள்.  அவர்களுக்கு என் மனம் கனிந்த நன்றி.

https://www.youtube.com/watch?v=IGSMK_POE0Y&feature=youtu.be