நடிகர் சங்கத் தேர்தலுக்கு மறுநாள் பேப்பர் வாங்கக் கடைக்குப் போகும் போது தி இந்துவில் பாண்டவர் அணி வெற்றி பற்றிய செய்தியை (தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சரத்குமார் அணி தோற்று விடும் என்று எனக்குத் தெரியும்) தலைப்புச் செய்தியாகவோ முதல் பக்கத்திலோ போட்டிருந்தால் அன்றோடு தி இந்து படிப்பதை நிறுத்தி விட வேண்டும் என்ற யோசனையில்தான் போனேன். நல்லவேளையாக அந்தச் செய்தி முதல் பக்கத்தில் இல்லை. எங்கேயோ எட்டாம் பக்க மூலையில் வந்திருந்தது. தி இந்து என் பரீட்சையில் பாஸாகி விட்டது என்று சந்தோஷப்பட்டேன். தினமலரில் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு எப்போதுமே முக்கியத்துவம் தருவதில்லை.
நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் பற்றி இன்றைய தி இந்துவில் சமஸ் எழுதியிருக்கும் கட்டுரை வெறும் நடிகர் சங்கம் பற்றியது மட்டும் அல்ல. தமிழ்ச் சமூகம் எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது என்பது பற்றியுமான கட்டுரை அது. பல ஆண்டுகளாக இதே விஷயத்தைத்தான் நான் மாற்றி மாற்றி எழுதிக் கதறிக் கொண்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள். இன்றைய தி இந்துவில் சமஸ்-இன் நடுப்பக்கக் கட்டுரை.
இணைப்பு: