நிர்வாண சத்கம் : ஆதி சங்கரர்

தி. ஜானகிராமனின் உலகையும் மனோதர்மத்தையும் புரிந்துகொள்ள ஒரு திறப்பாக இருப்பது, சேதுபதி அருணாசலத்தின் கட்டுரை. இயற்கையையும் இசையையும் ஒன்றாகவே பார்த்தார் தி.ஜா. இதுதான் அந்தத் திறப்பு. இதன் வழியே தி.ஜா.வின் உலகில் நுழைந்தால், இந்திய மண்ணில் உதித்த ஞானிகள் கண்ட தரிசனத்தை நாமும் காணலாம். தி.ஜா.வைப் படித்தவுடனே நான் ஆதி சங்கரரின் கவிதைகளைப் படித்தேன். ஆதி சங்கரரை நாம் எல்லோரும் ஓர் ஆன்மிகவாதியாகவே காண்கிறோம். அதனாலேயே நாத்திகர்கள் அவரை வெறுக்கவும் செய்கிறார்கள். ஆனால், அவர் ஓர் அற்புதமான கவி என்பதை அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது அறிந்துகொள்ளலாம். முக்கியமாக, ‘நிர்வாண சத்கம்’. (சதகம் என்பது நூறு பாடல்கள். உ-ம். பர்த்ருஹரியின் சதகங்கள்.) நிர்வாண சத்கம், வெறும் ஆறே பாடல்கள்தான். ஆனால், அந்த ஆறு பாடல்களுக்குள் இந்தப் பிரபஞ்சத்தையே அடக்கிவிட்டார் ஆதி சங்கரர் என்ற மஹாகவி.

 

*

மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்,

ந-ச ஷ்ரோத்ர ஜிஹ்வே, ந-ச க்ராண நேத்ரே,

ந-ச வ்யோம பூமிர், ந-தேஜோ ந-வாயு:

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

ந-ச ப்ராண சங்க்யோ, நவை பஞ்சவாயு:

ந-வா சப்த தாதுர், ந-வா பஞ்சகோஷ:

ந-வாக் பாணி பாதம், ந- சோபஸ்த பாயு:

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

ந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹள,

மதோ நைவ, மேநைவ மாத்ஸர்ய பாவ:

ந-தர்மோ ந-ச அர்த்தோ, ந-காமோ ந-மோக்ஷ:

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

ந-புண்யம் ந-பாபம், ந-சௌக்யம் ந-துக்கம்!

ந-மந்த்ரோ ந-தீர்த்தம், ந-வேதா ந-யக்ஞ:

அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந-போக்தா,

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

ந-ம்ருத்யுர் ந-சங்கா, ந-மே சாதிபேத:

பிதா நைவ, மே நைவ மாதா, ச-ஜன்மா

ந-பந்துர் ந-மித்ரம், குருர் நைவ சிஷ்யா:

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

அஹம் நிர்-விகல்போ, நிராகார ரூபோ,

விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்

ந-ச சங்கதம் நைவ, முக்திர் ந-மேய

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

*

நான் மனம் அல்ல புத்தியும் அல்ல சித்தமும் அல்ல

நான் செவி அல்ல நாக்கு அல்ல நாசி அல்ல கண் அல்ல

வானும் அல்ல பூமியும் அல்ல

ஒளியும் அல்ல வளியும் அல்ல

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்.

நான் பிராணனும் அல்ல பஞ்ச வாயுவும் அல்ல

ஏழு தாதுக்களும் அல்ல பஞ்ச கோஷமும் அல்ல

பேச்சும் அல்ல கைகால்களும் அல்ல செயல்புலன்களும் அல்ல

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

எனக்கு வெறுப்பு இல்லை விருப்பமும் இல்லை

பேராசையும் இல்லை மோகமும் இல்லை

கர்வமும் இல்லை பொறாமையும் இல்லை

அறம் பொருள் இன்பம் வீடு எதுவுமில்லை

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

எனக்குப் புண்யமும் இல்லை பாவமும் இல்லை

சௌக்யமும் இல்லை துக்கமும் இல்லை

(எனக்கு) மந்திரம் இல்லை தீர்த்த ஸ்தலங்கள் இல்லை வேள்விகளும் இல்லை

நான் துய்ப்பவனும் அல்ல துய்க்கப்படுபவனும் அல்ல

துய்ப்பும் அல்ல

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை

சாதியில்லை பேதமில்லை பிதா இல்லை மாதா இல்லை ஜன்மமும் இல்லை

உற்றம் சுற்றம் குரு சிஷ்யன் யாரும் இல்லை

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

நான் குணபேதம் இல்லாதவன் எந்த ரூபமும் இல்லாதவன்

எங்கெங்கும் எப்போதும் எல்லா புலன்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன்

எனக்கு பந்தமும் இல்லை முக்தியும் இல்லை நான் அளக்க முடியாதவன்

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

*

எனக்கு சம்ஸ்கிருதம் படிக்க மட்டுமே தெரியும். அர்த்தத்துக்கு, அகராதிகளையும் பேராசிரியர்களையும் நாடுவேன். ‘நிர்வாண சத்கம்’ என்ற ஆதி சங்கரரின் இந்தப் பாடல், இணையத்தளங்களில் பல பிழைகளுடன் காணக் கிடைக்கிறது. பலரும், சதகம் என்றே எழுதுகின்றனர். சதகம் என்றால் நூறு. சத்கம் – ஆறு.

நிர்வாண சத்கம் பாடலுக்குப் பக்கம் பக்கமாக விளக்கம் எழுதிக்கொண்டு போகலாம். சில வார்த்தைகளுக்கு மட்டும் சுருக்கமான விளக்கம்: பஞ்ச வாயு = பிராண, அபான, வ்யான, உதான, சமான வாயு. பஞ்ச கோஷம் = கோஷம் என்றால் sheath. அன்னமய கோஷம், பிராணமய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம், ஆனந்தமய கோஷம். உணவு, உயிர், மனம், அறிவு, ஆனந்தம்.

தி.ஜானகிராமன் பற்றிய கட்டுரையின் நான்காம் பகுதி…

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/11/15/%E0%AE%A4%E0%AE%BF.-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D—%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4/article3126795.ece