நிலவு தேயாத தேசம்… (5)

தூரத்து வாசகர்களைப் பற்றிக் கவலையில்லை.  ஆனால் நெருங்கிய நண்பர்களே அப்படிச் சொல்லும் போது கவலையாக உள்ளது.  ஒரு நண்பரிடம் நிலவு தேயாத தேசம் தொடர் படிக்கிறீர்களா என்று கேட்டேன்.  ஜனவரி வரை எதுவும் படிக்கக் கூடாது என்று இருக்கிறேன் என்றார்.

என்ன, ஏதாவது காரணமா?

ஒன்றுமில்லை, சும்மாதான்.

ஏன், ஏதாவது பரீட்சையா?

ம்ஹும், ஒன்றுமில்லை.  சும்மா தான்.

அப்படியானால் நல்ல விஷயம்.  ஜனவரி வரைக்கும்தானா?  இல்லை, எப்போதுமா?

சே, சே… ஜனவரி வரைக்கும்தான்.  அப்புறம் படிக்க ஆரம்பித்து விடுவேன்.

எனக்கு ஒன்று புரியவில்லை.  இன்னும் நாலு நாட்களுக்கு சாப்பிடக் கூடாது என்றோ, சில மணி நேரங்களுக்கு சுவாசிக்கக் கூடாது என்றோ கணவன் அல்லது மனைவியிடம் சண்டை போடக் கூடாது என்றோ நாம் எதுவும் பிரதிக்ஞை எடுத்துக் கொள்வதில்லை.  அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் பிரதிக்ஞைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் வைத்துக் கொள்ள தயங்குவதே இல்லை.  படித்தால் என்ன கெட்டா போய் விடுவோம்?  நான் இப்போது மிகத் தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பது பழுப்பு நிறப் பக்கங்களும், நிலவு தேயாத தேசம் என்கின்ற இரண்டு தொடர்கள்தான்.   முடிந்தால் படியுங்கள்.  ஆனால் இந்தத் தொடர்களைப் படிக்க முடியாதவர்கள் என்னோடு நட்பு வைத்திருப்பதில் அர்த்தமில்லை.

http://andhimazhai.com/news/view/nilavu5.html