ஒழுத்தாளன் (2)

Sir,i’ve to tell some important infos. in ‘kamal 50’ programme In vijay tv,kamal shared some,from that he told,”i had a big list to do things from my age 17or18,when i was in film industry.but i didnt finish first three in that long list till date…”in another interview,”iam in a compulsion that i must give profit to the producers you must note that not to me. in this issue i feel sad that iam being a villain for myself.these things arent understood by others.they didnt understand me ton.”he added.what is your opinion in this issue sir.i hope you reply me.thank ynu.

manoj

டியர் மனோஜ்,

இதெல்லாம் என்ன கடிதம்?  என் மின்னஞ்சல் முகவரி இருந்தது என்றால் கண்டபடி எழுத வேண்டியதா? கமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏதாவது சொன்னால் அது பற்றி அவரிடம் கேட்க வேண்டியதுதானே?  கமலின் மின்னஞ்சல் முகவரி தெரியாவிட்டால் நடிகர் கமல்ஹாஸன், எல்டாம்ஸ் ரோடு, சென்னை என்று லெட்டர் போடுங்கள்.  அவருடைய காரியதரிசி உங்களுக்குக் கட்டாயம் கடிதம் போடுவார்.  என்னைப் போன்ற ஒழுத்தாளர்களுக்குக் காரியதரிசி வைத்துக் கொள்ளும் அளவுக்குப் பணம் இல்லை.  இருந்திருந்தால் இது போன்ற அறிவுபூர்வமான கடிதங்களை என் காரியதரிசியே படித்து பதில் எழுதி விடுவார்.  ஏன் நீங்களே இதைக் குப்பையில் தள்ளி விடுவதுதானே என்று சில பல வாசகர்கள் நினைக்கலாம்.  எல்லா கடிதங்களுக்கும் பதில் போடுவது என் வீக்னெஸ்.  சில பேர் வாகனங்களில் செல்லும் போதே போன் அடித்தால் எடுத்து “இதோ பைக்கில் போய்க் கொண்டிருக்கிறேன் சாரு, அப்புறம் பேசுகிறேன்” என்கிறார்கள் அல்லவா, அதன் அர்த்தம் என்ன?  போன் அடித்தால் எடுத்தே ஆக வேண்டும்.  செத்தாலும் சரி.  அதுபோல் தான் எனக்கும் இந்த அடிக்‌ஷன் இருக்கிறது.  கடிதம் வந்தால் பதில் போடு.  இதற்கு ஏதாவது டி-அடிக்‌ஷன் மையம் இருக்கிறதா என்று நண்பர்கள் விசாரித்து சொல்லவும்.

அன்புடன்

சாரு