ட்டி. என். ராஜரத்தினம் பிள்ளை

டி.என். ராஜரத்தினம் பிள்ளை பற்றி கி.ரா. எழுதிய இந்தக் கட்டுரை 13.12.1988 தேதியிட்ட தினமணி கதிரில் வெளிவந்து சொல்வனத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டது.   இணைப்பு:

http://solvanam.com/?p=19710

டி.என். ராஜரத்தினம் பிள்ளை என்றால் யார், சுதந்திரப் போராட்ட தியாகியா, அரசியல்வாதியின் அப்பாவா, ஏதாவது பழைய காலத்து சிரிப்பு நடிகரா என்று குழம்பும் அன்பர்கள் பின்வரும் இணைப்பில் உள்ள சாருகேசியைக் கேட்டுப் பார்க்கலாம்.

http://gaana.com/artist/t-n-rajarathnam-pillai

சாருகேசி பற்றி என் நண்பர் ராம் அற்புதமான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  ராமானுஜம் பற்றி பல முறை எழுதியிருக்கிறேன்.  மனோதத்துவ டாக்டர்.  தேகம் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.  இன்னும் வெளிவரவில்லை.  ஹிண்டு தினசரியில் அவ்வப்போது எழுதுபவர்.  இப்போது தமிழ் இந்துவிலும் அவர் எழுதுவதைப் பார்க்கிறேன்.  மனோதத்துவ டாக்டர்கள் என்றாலே கால் பிடரியில் அடிக்க ஓடுவேன்.  ஆனால் ராமானுஜம் இலக்கியம் பயின்றவர், நமது மரபில் நன்கு ஊறியவர் என்பதால் பல மனோதத்துவ டாக்டர்களிடம் நான் காணும் விபரீதங்களை ராமானுஜத்திடம் கண்டதில்லை.  இயல்பான மனிதர்.  பெரும் படிப்பாளி.

http://rampsychiatrist.blogspot.in/2011/08/blog-post.html