அரசியல் நையாண்டி என்றால் இதுதான். மீண்டும் கார்ல் மார்க்ஸ்…

கார்ல் மார்க்ஸின் சிலம்ப விளையாட்டு மீண்டும்.  விரைவில் நூல் வடிவில் வரும்.  இன்னொரு விஷயம். சில எழுத்தாளர்கள் பிரமாதமாக எழுதுகிறார்கள்.  ஆனால் அவர்களின் பள்ளிகளிலிருந்து மாணாக்கர் யாரும் வருவதில்லை.  சீடர்கள்தான் வருகிறார்கள்.  சில எழுத்தாளர்களின் வாசகர்கள் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி வலப்பக்கமும் இடப்பக்கமும் ஆடுவதோடு சரி.  ஆனால் அடியேனின் பள்ளியிலிருந்து எழுத்தாளர்கள் படை போல் கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார்கள்.  என் எழுத்து மற்றவர்களையும் எழுதத் தூண்டுகிறது என்பதே எனக்கு மிகப் பெரிய அங்கீகாரம், கௌரவம்.  கீழே உள்ள ஐந்து வரிகளில்தான் என்ன கிண்டல், என்ன நையாண்டி…

”திமுக ஆக்கிரமிச்சத சன்னும் கலைஞர் டிவியும் சொல்லாது. அதிமுக ஆக்கிரமிச்சத ஜெயா டிவி சொல்லாது. விஜயகாந்த் ஆக்கிரமிச்சத கேப்டன் டிவி சொல்லாது. பச்சமுத்து ஆக்கிரமிச்சத புதிய தலைமுறை சொல்லாது. வைகுண்டராஜன் ஆக்கிரமிச்சத நியூஸ் செவன் சொல்லாது. தந்தி டிவி எவன் ஆக்கிரமிச்சாலும் சொல்லாது. மத்த டிவில்லாம் நினைச்சாலும் சொல்ல முடியாது. கடைசியா இருக்கது பொதிகை தான். அதுக்கு ஆக்கிரமிப்புன்னாலே என்னன்னு தெரியாது.”

ஜி. கார்ல் மார்க்ஸ்