அடியேனைப் பற்றி அராத்துவின் வசை

அராத்து அவரது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு என்னைப் பற்றி எழுதி இருக்கிறார்.  இதற்கு வாசகர்கள் கொடுத்திருக்கும் கருத்துக்களையும் படிக்க வேண்டுமானால் அவரது முகநூல் பக்கத்துக்கே செல்லுங்கள்…  இன்னொரு விஷயம், இந்த அவதூறுகளுக்கு விரைவில் பதில் சொல்லுவேன்…

https://www.facebook.com/groups/charugroup/#!/araathu.officialpage?fref=ts

(முள் கரண்டி , எருக்க முள்ளு , ஆக்ஸா பிளேடு , அருவாள்மணை , சப்பாத்தி கள்ளி எல்லாத்தையும் எடுத்து ரெடியா வச்சிக்கணும் . படிச்சி முடிச்சதும் உடம்பு முழுக்க வீர் வீர் ந்னு தேய்க்கிற தேய்ல இண்டர்நெட் முழுக்க ரத்தமா தெறிக்கணும் , ஓகே …….ரெடி ஜூட்…)

சாரு நிவேதிதா – எழுத்துக்கும் வாழ்கைக்குமான விளையாட்டு .

எழுத்தில் சாரு நிவேதிதாவை சந்தித்து விட்டு நேரில் சந்திப்பவர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்…கும். ஏமாறக் கூடாது என சந்திப்பைத் தவிர்ப்பவர்கள் பலர். நேரில் சந்தித்ததால் உண்டாகும் ஏமாற்றம் டெம்ப்பரரிதான். எழுத்தை விட பல ஆச்சரியங்கள் சந்தித்த பின் ஸ்லோவாக நிகழ ஆரம்பிக்கும். இது இலக்கியக் கட்டுரை இல்லை என்பதால் இனி இந்த அளவுக்குக் குழப்பம் இருக்காது. டு தி பாயிண்ட்.

திட்டுபவர்கள், விமர்சிப்பவர்களுக்கான பதில் சொல்லும் பதிவு அல்ல இது. அவர்களும் திருட்டுத்தனமாக படித்துப் பகடி செய்ய (ங்கோத்தா, ங்கொம்மா) தடையேதும் இல்லை.

நமக்கு முதலில் உண்மையாக இருத்தல், நம் குழந்தைத்தனத்தை விட்டுக் கொடுக்காமல் இருத்தல், இதெல்லாம் சொல்லுவதற்கு ஈஸியாக இருந்தாலும் செயலில் கடினம்.

காலடி என்ற இடத்திற்கு ஆயுர்வேத ட்ரீட்மெண்டிற்காக போனோம். 15 நாள். கடும் பத்தியம். எங்கள் பிளான் என்னவெனில், 15 நாள் வைத்தியம் முடிந்த பின் 16-ஆவது நாள் கேரள பேக் வாட்டரில் கோனியாக் குடித்து கொண்டாடிட்டு விட்டு வருவது. 15 நாட்கள் முடிந்தன. டாக்டர் வெளியே அனுப்பும் போது சொன்னார். இன்னும் ஒரு மாதத்திற்குக் குடிக்கக் கூடாது என.

அறைக்குத் திரும்பினோம். சாரு, குழந்தையின் கையில் இருந்த கிலுகிலுப்பையைப் பிடுங்கிக் கொண்ட கோபத்தோடு சொன்னார், இதை இவனுங்க முன்னயே சொல்லி இருந்தா நான் ட்ரீண்ட்மெண்ட்டுக்கே வந்து இருக்க மாட்டேன். இதெல்லாம் ஃபிராடுத்தனம். இப்ப ஏன் சொல்றானுங்க? கத்தினார். ஆனால் ஒரு மாதம் குடிக்க வில்லை.

ஆறு மணிக்கு மீட் பண்ணுவோம் என சொல்லுவார். 5.50க்கு போன் வரும். ”சாரி அராத்து , சின்ன பிரச்சனை, 6 .15 க்கு வந்துடறேன்.”

இதுவரை நான், துரோகி, கருப்பு என நெருங்கிய நண்பர்கள் யாரும் சாருவுக்கு பணம் கொடுத்தது இல்லை. அவர் நேர்ப்பேச்சில் கேட்டதும் இல்லை.

எப்போதாவது டிக்கட் போடச் சொன்னால், நான் உங்களை நேரில் சந்திக்கையில் கொடுத்து விடுகிறேன் என்பார். மற்றவர்கள் போல வசதியாக மறந்து விடாமல், அவராகவே நினைவு வைத்துக் கொடுத்தும் விடுவார்.

பணம் வேண்டும் என வெப்சைட்டில் கேட்டு விடுகிறாரே ஒழிய, அக்கவுண்டில் போட்டால் பிரச்சனை இல்லை. கோடீஸ்வர கேர்ள் பிரண்டுக்கு ஜாலியாக 10 டௌனிங்க் ஸ்ட்ரீட்டில் வைன் வாங்கிக் கொடுத்து விடுவார். யாரேனும் நேரில் கொடுத்தால், பாவம் , ஹி ஹி ஹி, சரி சரி சரி, ஓகே ஓகே என பயங்கர கூச்சத்துடன் வழிவார்.

அவர் பிச்சை எடுத்து குடிக்கும் ரெமி மார்ட்டினில் மீந்ததை அவர் தூங்கிய பின் பல பணக்காரர்கள் குடித்து விட்டுத் தூக்கி எறிந்ததும் உண்டு. அவருடன் ஹோட்டலுக்குச் சென்று பில்லை அவர் தலையில் கட்டுவதும் உண்டு. ஒரு வாசகர் சாருவுடன் பப்புக்கு போய் டான்ஸ் எல்லாம் ஆடி விட்டு இருவருக்கும் சேர்த்து சாரு பணம் கொடுப்பதை சலனம் இல்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தாராம்.

சாருவை யாரும் சார் போட்டுக் கூப்பிட்டுக் கொண்டே இருந்து நான் இதுவரை பார்த்ததில்லை. சார் என கூப்பிட ஆரம்பிக்கும் நபர் அடுத்த அரை மணி நேரத்தில் தானாகவே சாரு என கூப்பிட ஆரம்பித்து விடுவார். 18 வயது பையன், ”அப்படி இல்லை சாரு” என சாதாரணமாக பேசுவான்.

சாரு,தனக்குப் பணம் கொடுக்கும் யாரையும் தன் வெப்சைட்டில் பாராட்டி எழுதியது இல்லை. வேண்டுமானால் திட்டித்தான் எழுதி உள்ளார். கேட்டால் …….

பணம் கொடுக்காதவர்கள் எனக்குப் பிரச்சனை இல்லை. அவர்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும், கொடுக்க முடியாததால் கொடுப்பதில்லை. ஒருவன் வாலண்டியராக கொடுக்கிறேன் என சொல்லி, அதன் பொருட்டு என் நேரத்தைத் திருடி, என்னிடம் நம்பிக்கையை விதைத்து விட்டுப் பிறகு கொடுக்கமல் போகும்போதுதான் திட்டுகிறேன்.

5000 – 20000 சம்பாதிக்கும் யாரும் எனக்குப் பணம் கொடுக்காதீர்கள் என நேர்ப் பேச்சில் சொல்லி இருக்கிறார். இருப்பினும் 50 ரூ , 500 ரூ கஷ்டப்பட்டு அனுப்புபவர்களைக் கண்டித்து இருக்கிறார்.

10000, 20000, 50000 என எப்போதாவது அனுப்பும் சாருவின் வாசகர்கள், தங்களை பிரஸ்தாபித்துக் கொள்வதில்லை. நாலு வரி லெட்டரோடு பணம் வரும். அதில், “என் வாழ்க்கையை சொர்க்கமாக ஆக்கியதற்கு நன்றி” என இருக்கும்.

இந்தியா முழுக்க ஒரே அலைவரிசையில் இயங்கும் சமூகமா என்ன? சாரு எழுதுவது, சாரு வெளிப்படையாக இருப்பது, குடிப்பது, ஸ்த்ரீலோலனாக இருப்பது ஒரு சிறு குழுவிற்குப் பிடித்தமானதாக இருக்கிறது. அவர்கள் சந்தோஷத்துடன் சாருவுக்குப் பணம் கொடுக்கிறார்கள். சாரு தாம் தூம் என செலவு செய்வதை தெரிந்தே கொடுக்கிறார்கள். 10000 சம்பளம் வாங்குபவன், சாருவுக்கு 500 ரூபாய் கொடுத்தால் முக அழகு கிரீம் வாங்குவார் அல்லது ஜஸ்ட் ஒரு கிளாஸ் வைனை தன் கேர்ல் ஃபிரண்டுக்கு வாங்கிக் கொடுப்பார் என தெரிந்தே கொடுக்கிறான்.

இது என் பார்வை. உங்களுக்கு 1000 பார்வை இருக்கலாம். நான் மறுக்கவில்லை. ஒன்றை மட்டும் சிரிப்பை அடக்க முடியாமல் மறுக்கிறேன் . அவர் பணத்தை ஏமாற்றி விட்டார், ஊழல் செய்து விட்டார் என சிலர் சொல்வதை மட்டும் செம காமடியாக பார்க்கிறேன். யாரேனும் என்னை சாரு பண விஷயத்தில் ஏமாற்றி விட்டார் என்ற புகாரோடு வந்தால், நான் முன்னின்று பணத்தை வாங்கி கொடுக்கிறேன் ஸ்மைலி போட்டாலும் இதை சீரியஸாக சொல்கிறேன். அவரை நல்லவர் என்பதற்காகக் கூட இதை சொல்ல வில்லை. ஃப்ராடுத்தனம் செய்யும் அளவுக்கு அவருக்கு மூளை இல்லை, அவ்வளவுதான்.

போனில் என்னை அழைத்து அவர் கேட்கும் விஷயங்கள் எல்லாம் ஷாக்கிங்காக, காமடியாக இருக்கும்.
—————
அராத்து , இது பெட்ரோல் கார் போல, தெரியாம டீசல் போட்டுட்டேன் என்னா செய்யறது ?

பெட்ரோல் என எழுதி இருக்குமே சாரு, கவனிக்கலையா ?

காருக்குள்ள ஒண்ணுமே எழுதி இல்லையே அராத்து.
—————-
ஒருமுறை ஏடிஎம்மில் நுழைந்து 20 நிமிடம் கழித்து வெளியே வந்தார் . வேலை செய்யலை அராத்து, இவனுங்களை நம்பக் கூடாது.

பின் நம்பர் ஒழுங்கா போட்டீங்களா சாரு?

நீங்க இப்படி கேப்பிங்கன்னு தெரியும் , அதான் எழுதி வச்சிருக்கேன் என 16 டிஜிட் நம்பரை காண்பித்தார்.
————————-
அவருக்கு தெரிந்தது எழுத்து , அவ்வளவுதான் . குஷ்வந்த் சிங் சமீபத்தில் எந்தப் பெண்ணை பார்த்தாலும் எனக்குக் காமக் கண்ணோட்டத்துடன் இன்னும் பார்க்கிறேன், சகோதரியாகவோ, தாயாகவோ, மகளாகவோ பார்க்க முடிவதில்லை என வெளிப்படையாக, ஆனால், கொஞ்சம் பாலீஷாக சொல்லி இருந்தார்.தினமும் விஸ்கி குடிக்கிறேன் எனவும் சொல்லி இருந்தார். யாரும் திட்ட வில்லை, எதிர்க்கவில்லை. இதையே சாரு ராவாக, நான் ஒரு ஸ்த்ரீ லோலன் என எழுதி மண்டகப்படி வாங்கிக் கொண்டார்.

ஒருவன் மனதளவில் ஸ்த்ரீலோலனாக இருந்து கொண்டு காம வெறியோடும் அலைந்து கொண்டு, வெளியே சகோதர பாசத்தோடு பழகுகிற மாதிரி பழகி நடித்துக் கொண்டு தங்கச்சி தங்கச்சி என கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறான் . இன்னொருவன் வெளிப்படையாக நான் ஸ்த்ரீ லோலன் என சொல்கிறான். யார் ஆபத்தானவன்? ஸ்த்ரீ லோலன் என சொல்பவனிடம் ஏன் பெண்கள் சகோதர பாசத்தைத் தேடிச் செல்ல வேண்டும்.

இவ்வளவிற்கும் சாரு கதைகளை படித்தால் தெரியும், அவருடைய கதாநாயகன் பெண்ணின் அண்மையே கிடைக்காமல் சுய இன்பம் அனுபவித்தபடி, விரக்தியாக, வலியுடன் வாழ்ந்து கொண்டிருப்பான்.

சாருவுக்கு ஒரு பெண் காமத்திற்காக கிடைத்தால் கூட எங்கே போய் எப்படி ரூம் போட்டு எப்படி மேட்டர் முடிப்பது என்ற பிராக்டிக்கல் விஷயம் மயிரு கூட தெரியாது.அப்படியே ஏதேனும் கசமுசா நடந்து விட்டது எனத் தெரிய வந்தால் , அந்த பெண்தான் கில்லி. அவர்தான் எல்லா வேலையும் (!) செய்து இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டிய அளவிலேயே கைவசம் டேட்டா இருக்கிறது.

சாருவின் நண்பர்கள் – எம் பி, சினி ஸ்டார், மத்திய அமைச்சர், சினிமா இயக்குனர், சினிமா தயாரிப்பாளர், படு பயங்கர ரவுடி, மத அமைப்பில் இருக்கும் அடிப்படைவாதி என பலரிடமும் சாருவின் பொருட்டு, சாருவின் விழா பொருட்டு நான் பேசியிருக்கிறேன். அதுவும் விழாவுக்கு வருகிறவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் பொருட்டு. கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக்காரர்கள் போலவே அனைவரும் பதில் தந்தனர். பல கோடி ஹிட் படத்தைத் தந்த தயாரிப்பாளர் சொன்னதை கேட்டால், ஷாக் ஆகி விடுவீர்கள் . படம் ரிலீஸில் பிசியா இருக்கேன், டூ ஹண்றட் டூ ஃபைவ் ஹண்றட் ருபீஸ் என்றால் டூ வீக்ஸில் வந்து வாங்கிக்குங்க என்றார். ஒரு மாநில அமைச்சருக்கு மதியம் 3 மணிக்கு போன் போட்டேன். எடுக்கவில்லை. அவரே மாலை 6 மணிக்கு அழைத்து கடுமையான குரலில், மதியம் 3 – 5, அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள், விஐபி என யாருக்கும் போன் போடக் கூடாது. தூங்கிட்டு இருப்பாங்க. அப்ப போன் போட்டா கடுப்பாயிடுவாங்க, வேலையே நடக்காது என அருளுரை வழங்கினார்.

மாபெரும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல் சீமாட்டிக்கு சாரு விழாவிற்கு வருபவர்களுக்குக் கொடுக்க 500 சமோசா வேண்டும் என எஸ் எம் எஸ் செய்தார். 300 தான் என்னால் ஏற்பாடு செய்ய முடியும் என பதில் எஸெமெஸ் வந்ததை த்ரிஷா மீது சத்தியமாக சொல்கிறேன், நான் பார்த்தேன். சாருவிடம் சொன்னேன் – நீங்க இந்த சினிமா டைரக்டர், அமைச்சர், செல்வந்தர், விஐபி இவங்க கூட எல்லாம் வச்சிக்காதீங்க. வேஸ்ட். வட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர் ரேஞ்சிக்கு வச்சிகிட்டாலே 1000 சமோசா கேட்டா 2000 கொண்டாந்து எறக்குவான் என சொன்னேன். சாருவுக்குப் பணம் கொடுத்து உதவுவது சாதாரண வாசகர்கள்தான். அதில் பலர் சாருவிடம் போனில் கூட பேசியதில்லை.

எல்லோராலும் கரித்துக் கொட்டப்படும் நர்ஸிம் 12,000 ரூபாய் தந்தார், வாசகர்கள் சாப்பிட்ட buffet வுக்கு.

பிச்சைக்காரன் என வர்ணிக்கப்படும் சாருவிற்கு ஐந்து லட்சம் தந்தால் என்ன செய்வார், பத்து லட்சம் தந்தால் என்ன செய்வார், ஒரு கோடி தந்தால் என்ன செய்வார் என அவருடன் பழகும் அனைவருக்கும் தெரியும். சிம்பிள், மிச்சம் வைக்காமல் செலவு செய்து விடுவார். பின் ஒரு கட்டுரை எழுதி அக்கவுண்ட் நம்பர் கொடுப்பார்.

நாம் எல்லொருமே எவ்வளவு பணம் கிடைத்தாலுமே, தங்கமாக, லேண்டாக, ஃபிக்சட் டெபாஸிட்டாக சேர்த்து வைக்கத்தானே பார்ப்போம்? செக்யூரிட்டி பிராப்ளம். அந்த மைண்ட் செட்டே சாருவுக்கு இல்லை. அது காமன் மேனுக்கான மைண்ட் செட். தி ரியல் பிச்சைக்காரன் கூட சேர்த்து வைப்பான். அதனால் நீங்கள் சாருவை பிச்சைக்காரன் எனத் திட்டினால் ப்யூரான பிச்சைக்காரன் தன்னை அவமானப்படுத்துவதாக கோபித்துக் கொள்வான்.

பிச்சை எடுத்தானாம் பெருமாளு, அத்தை புடுங்கிச்சாம் அனுமாரு – இதையும் சாரு விஷயத்தில் பல பணக்காரர்கள் அவருக்கு ஒரு ஏழை வாசகன் கொடுத்ததைப் பிடுங்கி தின்று பார்த்திருக்கிறேன், அவர் அதை ஒரு பணக்காரன் போல அனுமதிப்பார்.

கொள்ளையடிக்கலாம், கொலை செய்யலாம், திருடலாம், லஞ்சம் வாங்கலாம். இது எல்லாம் லைட்டாகத் திட்டப்படுகிறதே தவிர கிண்டல் செய்து அசிங்கப்படுத்தப்படுவதில்லை. இந்த கிரிமினல் தனங்கள் எல்லாம் தன்னைத் திமிரான ஆண் என காட்டிக் கொள்வதற்கு ஏதுவானதாக மாறி விட்டது.

அடுத்த மிடில் கிளாஸ் மனோபாவம், கடன் கேட்பது கௌரவம், உதவி கேட்பது பிச்சைக்காரத்தனம். கௌரவமாகக் கடன் வாங்கி கௌரவமாக திரும்பக் கொடுக்காமலேயே இருந்து விடலாம். ஆனால் உதவி? ச்சீ சீ அசிங்கம். மிடில் கிளாஸ் முதல் ஹை கிளாஸ் வரை எத்தனை பேர் வாங்கிய கடனை திரும்பக் கொடுத்திருக்கிறார்கள்?

சினிமாவில், ரஜினி கமல் முதல் அஜீத், கௌதம் மேனன், சோனா வரை அனைவருக்கும் கடன் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கேஸ் நடந்து கொண்டு உள்ளது.

எத்தனை பேர் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஜாலியாக செலவு செய்து விட்டு பணக்காரர்களாக உலா வருகின்றனர்? விஜய் மல்லையா தலையில் 7000 கோடி ரூபாய் கடன். திரும்பக் கொடுக்க வேண்டும் .அவர்தானே உண்மையான பிச்சைக்காரன்? ஆனால் அவர் நாடறிந்த பணக்காரனாக இன்றும் நடமாடி வருகிறார்.

உதவி கேட்பது நக்கலான ஒரு விஷயமாக மாறி விட்டது. பாரதி கூட உதவி கேட்டது இல்லை. பிரமிள் உதவி கேட்டது இல்லை .கோபி கிருஷ்ணன் உதவி கேட்டது இல்லை. உதவியே கேட்காமல் செத்துத் தொலைந்தார்களே? உதவி கேட்காமலேயே புலவர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் தானாகவே உதவி செய்யும் உன்னத சமூகமா இது? உதவியே கேட்காமல் அறச்சீற்றத்தோடு கம்பீரமாக கஷ்டப்படு, மரியாதை கொடுக்கிறோம், செத்த பின்பு தலையில் தூக்கி வச்சி கொண்டாடறோம் எனச் சொல்வது என்ன விதமான சாடிசம் ?

பிச்சை போட்டாலோ உதவி செய்தாலோ – அவன் தன்னை விட கீழானவனாகவே இருக்க வேண்டும் என்ற ஆதிக்க மனோபாவமும் நமக்குத் தெரியாமலேயே ஊறி விட்டது. அதனாலேயே, பிச்சை கேட்பவனிடம் நாம் டிக்டேட் செய்கிறோம் – இட்லி சாப்பிடறியா ? டீ வாங்கி கொடுக்கட்டுமா ? என. ஏனெனில் நீங்கள் போடும் பிச்சைக்காசு ஐந்து ரூபாயில் அவன் சிகரட் வாங்கி இழுத்து கெட்டுப் போய் விடுவான், இல்லை எனில் கட்டிங் அடிக்கத்தான் இது பிச்சை எடுக்குது என எள்ளல்.

படிப்பதற்கும், புத்தகம் வாங்கவும், நோட்டு வாங்கவும் பிச்சை போட நமக்கு மனத்தடை இருப்பதில்லை. கொஞ்சோண்டு காசு கொடுத்திட்டு, ச்சே நாம எவ்ளோ பெரிய நல்ல காரியம் செஞ்சிருக்கோம் என நம்மை நாமே சொறிந்து கொள்ள ஏற்ற வழி இது. படிப்பதற்குப் பிச்சை போட்டாலும், நம்மை விட கீழான நிலையிலேயே இருப்பான் என ஆழ்மனம் உறுதி செய்து கொண்டே அந்த பிச்சைக் காசைப் போடும்.

இப்படி வைத்துக்கொள்வோம். ஒருவன் நான் ஐ ஐ டி யில் படிக்கப் போகிறேன். பலரும் எனக்கு உங்களால் இயன்றதை கொடுங்கள், பல லட்சம் தேவைப் படுகிறது என்றால் கொடுப்போமா ? மாட்டோம். நம் குழந்தைகள் எங்கே படிக்கின்றன எனப் பார்த்து, இவன் பிச்சை வாங்கி நம்மை விட உயர்வதா என கடுப்பாகி மறுத்து விடுவோம், அவனைக் கரித்து கொட்டுவோம்.

பிச்சை போடுறது உன் இஷ்டம், போடு, இல்லை போடாம அந்தப் பிச்சைக் காசை நீயே வச்சிக்கோ. அவன் கட்டிங்தான் அடிக்கிறான், சரவண பவனில் ஏசியில் ஃபுல் மீல்ஸ் சாபிடறான், இல்லை நைட் ப்ளாட்பாரம் ஓரம் படுத்துக் கிடக்கும் பிச்சைக்காரிக்கு சிக்கன் பிரியாணி வாங்கிக் கொடுத்து எறக்கிட்டு போறான், இதுல ஏன் நீ ரொம்ப இன்வால்வ் ஆகிற? அவ்ளோ சோஷியல் ரெஸ்பான்ஸிபிளிட்டியா? அதுவும் பிச்சை போடாமலேயே ஏன் கவாங்க் கவாங்க் என கத்த வேண்டும். பொறாமையா? இவனுக்கு இவ்ளோ பேர் உதவி செய்றாங்களே, அந்தக் காசுல ஜாலியா ரெமி அடிச்சிட்டு, காஸ்ட்லீ ஜட்டி போட்டுட்டு 10 Downing போறானேன்னு பொறாமையா? நாம் பிச்சை கேட்டாலும் இவ்ளோ கிடைக்காது என்ற அடிமனப் பொறாமைதான் காரணம் என்பதைத் தாண்டி இந்த விஷயத்தில் எனக்கு வேறு ஏதும் தோன்றவில்லை.

அவர் வாங்கும் பென்ஷன் பணம் அவர் நாய்க்குட்டிகளுக்கே பத்தாது. அது அவர் மகன் ஆசைப்பட்டு வாங்கி அவர் தலையில் கட்டி விட்டுச் சென்ற குட்டிகள்.

அவர் வாசகர்கள் விருப்பப்பட்டு கொடுக்கும் காசை வைத்து சொத்து சேர்க்கவில்லை, செலவு செய்கிறார். லக்சூரியாக இருக்கிறார். லக்சூரியாக இருக்குமளவிற்கு சம்பாதிக்கும் ஒருவன் லோ கிளாஸ் ஒண்டிக்குடித்தனத்தில் வாழ்ந்து கொண்டு தன் சம்பாத்தியத்தையெல்லாம், தங்கத்திலும், வறட்டு வானம் பார்த்த நிலத்திலும் தன் எதிர்கால செக்யூரிட்டியை முன்னிட்டு முதலீடு செய்து விட்டு தற்காலத்தில் பிச்சைக்காரனைப்போல வாழ்ந்து கொண்டிருப்பதை இவர் வாழ்க்கையோடு சேர்த்து பார்க்க வேண்டி இருக்கிறது.

ராஸ லீலா குப்பை என சொல்லலாம், எக்சைல் ஃபக்கிங்க் நாவல் என சொல்லலாம், விளக்கமாகப் பேசலாம். ஒருவன் உதவி கேட்பதையும், பெண்களை எனக்குப் பிடிக்கும், நான் பெண்களைக் காதலிப்பவன் என சொல்வதையும், நான் குடிப்பேன் எனச் சொல்வதையும் மட்டும் வைத்தா இவ்ளோ நாள் வண்டி ஓட்டிக் கொண்டு இருப்பது?

எனக்கும் சாருவை விமர்சிப்பதற்கும் திட்டுவதற்கும் சில விஷயங்கள் உள்ளன. எனக்கெல்லாம் வாய்ப்பே தராதபடி கண்டினியஸாக விஷயம் தெரியாமல் வெளியில் இருந்து திட்டிக் கொண்டேயிருந்தால், நாங்களெல்லாம் எப்போ திட்டுவது ?

அவர் கெட்டவராகவே இருக்கட்டும், ஆனால் அவர் சிலரின் சிந்தனைப் போக்கை மாற்றி அமைத்திருக்கிறார். பல பைத்தியங்களைத் தெளிய வைத்திருக்கிறார். அந்த பிராஸஸில் சிலரை பைத்தியமாகவும் ஆக்கியிருக்கிறார்.

அவர் செத்தார் எனில், பேங்க் பேலன்ஸ் ஏதும் இருக்காது. அப்போது , இப்போது உள்ள வாசகர்களிடம் சண்டை இல்லாமல் இருந்தால் தூக்கிப் போடுவார்கள். இல்லையெனில் புதிதாக யாரேனும் வாசகர்கள் சாருவின் பிணத்தை (அட, நல்ல வார்த்தைப் பிரயோகமாக உள்ளதே) முதன் முறையாக சந்தித்துத் தூக்கிப் போடுவார்கள். சாருவுக்கு நாளை சாகப் போகிறோம் எனத் தெரிந்தால் இப்படி போஸ்ட் போடுவார் :-

அடியேன் விடைபெறுகிறேன்

நாளை 4 மணிக்கு நான் சாக இருப்பதால் என்னைச் சந்திக்க விரும்பும் நண்பர்கள் 3.30 க்குள் வரும்படி கேட்டுக் கொள்கிறேன் . நல்ல அலங்கார பாடையில் செல்ல வேண்டும் என எனக்கு நீண்ட (!) நாள் ஆசை. யாரேனும் வாசகர் இதற்கான செலவை ஏற்றுக் கொண்டு கஜா கஜா வென அற்புதமான பாடை கட்டித் தர வேண்டும் எனக் கோருகிறேன். அக்கவுண்ட் நம்பர் கொடுத்து நீங்கள் பணம் போட்டு, நான் அதை எடுத்துப் பாடை கட்ட நேரமில்லை.

எழவுக்கு வரும் வாசகர்களுக்கு யாரேனும் வாசகர்கள் இணைந்து ரெமி மார்ட்டின் வாங்கிக் கொடுக்கும் செலவைப் பகிர்ந்து கொள்ளலாம். வேறு யாரேனும் ரியல் குட் சிக்கன் வாங்கி ஃபிரை பண்ணி கொண்டு வரலாம்.

வழக்கமாக விழாக்களில், பயணத்தின்போது என்னை யாரும் ஒழுங்காக புகைப்படம் எடுப்பதில்லை. இந்தப் பெருவிழாவில் நல்ல கேமரா உள்ள வாசகர் என்னை மட்டும் நிறைய புகைப்படம் எடுக்க வேண்டும். என் பிணத்தையும் கொஞ்சம் ஸ்டைலாக சிரித்தபடி இருப்பது போல எடுக்கவும். நான் இறந்தும் பெண்களின் நெஞ்சங்களியே வாழ விரும்புகிறேன், அதற்குத்தான்.

Comments are closed.