ஒன்பது புத்தகங்கள் என்னென்ன?

ஒன்பது புத்தகங்கள் என்னென்ன என்பதில் எந்த ரகசியமும் இல்லை.  அது பற்றி எழுத எனக்கு நேரமில்லை. தினமணி இணைய இதழில் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்கள் தொடரில் ஒவ்வொரு எழுத்தாளர் பற்றியும் என் ஞாபகத்திலிருந்து எழுதவில்லை.  ஒவ்வொரு எழுத்தாளரின் புத்தகங்களையும் மீண்டும் படித்து விட்டே எழுதுகிறேன்.  எல்லாம் 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்தது.  இப்போது நான்கு தினங்களுக்குள் காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் இரண்டையும் அடுத்த வாரத்தில் ஆதவன் எழுதிய சிறுகதைகளையும் படிக்க வேண்டும்.  நேரமின்மையின் காரணமாகவே என்னென்ன புத்தகங்கள் என்று எழுத முடியவில்லை.  பழுப்பு நிறப் பக்கங்கள் முதல் தொகுதி வரும்.  அறம் பொருள் இன்பம் வரும்.  மனம் கொத்திப் பறவை வரும்.  இன்னும் என்ன?  வேற்றுக்கிரகவாசியின் டயரிக் குறிப்புகள், துக்ளக்கில் எழுதிய கட்டுரைத் தொகுதி, நியூஸ் சைரன் பத்திரிகையில் எழுதிய கட்டுரைத் தொகுதி எல்லாம் வரும்.  அநேகமாக எட்டு புத்தகங்கள் வரும்.   சிறுகதைத் தொகுதி மட்டும் வர வேண்டியது வராது.  நான் தான் தொகுத்துக் கொடுக்கவில்லை.  காரணம், என் பெயர் சீஸர் கதையில் இன்னும் கொஞ்சம் சேர்க்க வேண்டியிருக்கிறது.  அவ்ளோதான்.  இப்போது அறம் பொருள் இன்பம் விற்பனையில்.  அந்திமழை வெளியீடு.  கேள்வி பதில் தொகுப்பு.

***
கேள்வி: ஹலோ சாரு, நூற்றெண்பது நிமிடங்கள் இயங்குவது எப்படி?
பதில்: அப்படியெல்லாம் இயங்கினால் பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள். ஜாக்கிரதை.நீதி: இரண்டு மலை முகடுகளில் கயிறைக் கட்டி அதன் மீது கையில் கம்பு வைத்துக் கொண்டு நடப்பார்களே, தெரியும் அல்லவா? அது போல் நாம் நடந்தால் எலும்பு கூட மிஞ்சாது. எனவே வல்லுனர்கள் செய்வதை சாமான்ய மனிதர்கள் செய்யலாகாது.
***
கேள்வி: கடைசியில் மரணம்தானே?
பதில்: யார் சொன்னது? சட்டை கிழிந்து விட்டால் மாற்றுச் சட்டை போட்டுக் கொள்வது போல் ஆத்மா இந்தக் கூட்டை விட்டு விலகி இன்னொரு கூட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இந்த ஜனன மரண சுழற்சியில்தான் பாவம் புண்ணியம் என்பதும் சேர்கிறது.

***

கேள்வி: பின்நவீனத்துவம் என்பதை இலகுவாய் எனக்கு எவ்வாறு விளங்கப்படுத்துவீர்? (கத்தியில் கம்யூனிசத்துக்குக் கொடுக்கப்படும் விளக்கம் போல் என்றாலும் சரியே.)

பதில்:  பழைய வகை எழுத்து Fast Food. ஆற்றுக்குப் போய் தூண்டிலில் மீன் பிடித்து நாமே சமைத்துச் சாப்பிடுவது பின்நவீனத்துவம்.
புரிகிறதா? ஃபாஸ்ட் ஃபூட் வகையில் நமக்கு எந்த வேலையும் இல்லை. எல்லாம் அவர்களே. நாம் வெறுமனே அதை வாயில் போட்டு மெல்ல வேண்டியதுதான்.  கிட்டத்தட்ட எருமையும் நாமும் ஒன்று. ஆனால் பின் நவீனத்துவம் உங்கள் கற்பனையைக் கோருகிறது. எழுத்தாளன் கொடுக்கும் பிரதியை நீங்கள் வாசித்து, அதிலிருந்து உங்களுக்கான பிரதியை உருவாக்க வேண்டும். அதற்கான திறப்பும் அந்தப் பிரதியில் இருக்க வேண்டும். கட்டாந்தரையில் மீன் பிடிக்க முடியாதே?

***
கேள்வி: லிங்கா படம் பாத்தாச்சா?

பதில்: நான் வணங்கும் மகா அவ்தார் பாபாதான் என்னை அந்த ஆபத்திலிருந்து கடைசி நிமிடத்தில் காப்பாற்றினார். படம் வெளியான மறுநாள் என் நண்பர் கணேஷ் அன்பு, “டிக்கட் இருக்கிறது; வருகிறீர்களா?” என்று கேட்டார். நானும் சரி என்றேன். பிறகுதான் கடைசி நிமிடத்தில் முகநூலில் வந்திருந்த விமர்சனங்களைப் படித்து விட்டு அந்த ராஜ பிளவையிலிருந்து தப்பினேன்.

***

வெளியீட்டு விழா: ஃபெப்ருவரி 27, 2016, மாலை 6:30, ராஜா அண்ணாமலை மன்றம், பல் மருத்துவக்கல்லூரி அருகில், ஃபோர்ட் ரயில் நிலையம் எதிரில், பிராட்வே.

VPP-யில் பெற 87545 06060 என்ற எண்ணுக்கு டிஸ்கவரி வேடியப்பனுக்கு மெசேஜ் அல்லது வாட்ஸப் செய்யலாம்.

256 பக்கங்கள், விலை ரூ.200

***
Wecanshopping குஹன் மூலம் வாங்க, 9003267399 என்ற எண்ணுக்கு மெசேஜ் அல்லது வாட்ஸப் செய்யலாம்.
Wecanshopping இணையதளத்தில் வாங்க:
***
கதிரேசன் சேகர் என்ற புத்தக விற்பனையாளர் மூலம் புத்தகம் வாங்க 8489401887 என்ற எண்ணுக்கு மெசேஜ் அல்லது வாட்ஸப் செய்யலாம்.
***