விழா பதிவுகள் – 13

ஒரு ஆன்மீக விழா மாதிரி இருந்தது என்றாள் அவந்திகா.  எனக்கு யுவ கிருஷ்ணாவின் ஞாபகம் வந்தது. (அறம் பொருள் இன்பமுமா பிடிக்கவில்லை, யுவ கிருஷ்ணா?) மனுஷ்ய புத்திரனின் ஞாபகமும் வந்தது. ஒருவேளை திருப்பூர் கிருஷ்ணன், லெனின் ஆகியோருடன் சேர்ந்து மனுஷும் ஆன்மீகவாதியாகி விட்டாரா?  இருக்காதே?  அவ்வளவு சீக்கிரம் சாத்தான் தெய்வமாகி விட முடியுமா?  எப்படியோ, கார்ல் மார்க்ஸும் அதே விஷயத்தைத் தொட்டிருக்கிறார்.  கார்ல் மார்க்ஸின் முகநூல் பதிவு இது:

சாரு புத்தக வெளியீட்டு விழா:

விழாவில் முதலில் பேசிய திருப்பூர் கிருஷ்ணன், தனது பேச்சினிடையே திருவிக வின் ஒரு ஆன்மீக அனுபவத்தை சொல்லிவிட்டு ‘சாரு கூட ஆன்மீகத்தை நோக்கி நகர்ந்து கொண்டுதான் இருக்கிறார்’ என்று சொன்னார்.

ஐயய்யோ… என்ன இது… தம்பியின் பாதையில் அண்ணனும் முரசு கொட்டப் போய்விடுவாரோ என்று நண்பர்கள் அச்சத்தில் உறைந்த கணம் அது. டீ குடிக்க போனபோது என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

கொஞ்ச நேரத்தில் சாரு பேசினார். எழுத்தாளர்கள் என்பவர்கள் ரிஷிகளைப் போன்றவர்கள் என்று சாரு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதற்கு மனுஷ் ‘நம்மையெல்லாம் ரிஷிகள் என்று சொன்னால் இந்த உலகம் தாங்குமா’ என்று முகனூலில் எழுதியிருக்கிறார்.

இதை ஞாபகப்படுத்தி பேசும் போது சாரு குபீரென சிரித்தார். பேச்சே வரவில்லை. பிறகு சமாளித்துக்கொண்டு அவர் பேசியதைக் கேளுங்கள். வீடியோவில் இருக்கிறது என நினைக்கிறேன்.

சாரு, மனுஷ் போன்றவர்கள் சாத்தான்கள். அவர்களுடையதும் ஆன்மீகம் தான். ஆனால் அது வேறு வகை IMG_3993