விழா பதிவுகள் – 21

IMG_4108வேறு தேதியில் விழா நடத்தப்பட்டிருந்தால் திரையுலக, தொலைக்காட்சி நண்பர்கள் பலரும் வந்திருப்பார்கள்.  முக்கியமாக, பார்த்திபன், ராதா மோகன், தயாரிப்பாளர் ராம்ஜி, விஜய் டிவி ஆண்டனி.  சிங்கப்பூரில் வசிக்கும் அகிலன் முதலில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த நம்முடைய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு பிறகு இளையராஜா விழாவுக்குச் சென்றார்.  போகும் போது என்னை மேடையிலிருந்து அழைத்து சொல்லி விட்டுச் சென்றார்.  அவருக்கு என் நன்றி.  மேலே உள்ள புகைப்படத்தில்: ஓவியர் சீனிவாசன், எஸ். வைத்தீஸ்வரன், அசோகமித்திரன்.  கீழே உள்ள புகைப்படத்தில் இருப்பவர்கள் ஆர்.டி. ராஜசேகர், இயக்குனர் ஸ்டான்லி.  எல்லா புகைப்படங்களும் பிரபு காளிதாஸ் எடுத்தவை.  அவருக்கு என் பிரத்தியேக நன்றி.

IMG_4028