விழா பதிவுகள் – 22

வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மனாசே விழா பற்றி எழுதியிருந்தது இது.  மனாசேவுக்கு என் எழுத்து வெறும் எழுத்து மட்டும் அல்ல.  அவர் என் எழுத்தைப் படிக்காமல் இருந்திருந்தால் அவர் வாழ்க்கை வேறு விதமாகப் போயிருக்கும்.  அவர் வாழ்வின் போக்கை மாற்றியது என் எழுத்து என்று அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கிறார்.  மனாசேவுக்கு தமிழ் சரியாக எழுத வரவில்லை.  நான் எதையும் திருத்தவில்லை.  அவர் எழுதியபடியே இங்கே பதிவேற்றியிருக்கிறேன்.  ஆனால் விழா பற்றிய பதிவுகளிலேயே ஆக முக்கியமானதாக இதைக் கருதுகிறேன்.  ஏனென்றால், நம்முடைய வாசகர் வட்டம் எப்படி இயங்குகிறது என்பதற்கு இந்தக் கடிதம் ஒரு சாட்சி.  மனாசே மதுரையைச் சேர்ந்தவர். கீழே உள்ள முதலாவது புகைப்படத்தில், எஸ்.ராமகிருஷ்ணன், அம்ஷன் குமார்.  இடமிருந்து வலம்:  முதலில் இருப்பது என் தம்பி சுந்தர்.  அடுத்து இருப்பது சுந்தரின் பள்ளிக்கூடத்து வகுப்புத் தோழன் நாகூர் ரூமி.  இரண்டாவது புகைப்படத்தில் கார்ல் மார்க்ஸ், மனாசேயை நான் மறைத்துக் கொண்டிருக்கிறேன், மருது, கடைசியில் பூர்ணா.  IMG_4017 IMG_3965 (1)இனி கடிதம்:

எனக்கு சாருவை பார்க்க போறது ,அவர் பேசுறதை கேட்பது என்பது பேரின்பம் .
சாருவின் ஏழு புத்தகம் வெளியிட்டு விழாவிற்கு அழைப்பிதழ் வந்தஉடன் நானும் ,அண்ணனும் என் பாசமிகு நண்பரும் ஆன பூர்ணாவும் முடிவு செய்தோம் .கண்டிப்பாக நாம் போயே ஆகவேண்டும் . முந்தைய இரண்டு சந்திப்புகள் வேலை பளு காரணமாக சாருவுடன் சந்திக்க முடியாத படி செய்து விட்டது .இந்த முறை சென்றே ஆகவேண்டும் என்று உறுதி செய்தோம் .

நான் ,பூர்ணா ,மருது ராஜன் ,ஆகியோர் முதல் தினம் மதியமே கிளம்பினோம் பூர்ணாவின் காரில் ..கருப்பு வீட்டில் தங்குவது என்று முடிவு .  ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை கருப்பு கால் பண்ணி எங்கே வந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அக்கறையுடன் விசாரித்து கொண்டே இருந்தார் .கணேஷ் அன்புவும் .

இரவு 9-30 க்கு சென்னை வந்து சேர்ந்தோம் . பூர்ணா வே காரை சென்னை வரை ஓட்டிவந்து சேர்த்தார் . அங்கு போனால் கருப்புக்கு முன்னாடி எங்களை வரவேற்க கணேஷ் அன்பு .அன்புவை அப்படியே அள்ளி அணைத்து விட்டு ,கருப்புவையும் தான் .கொஞ்ச நேரத்தில் செல்வா அண்ணன் வந்து சேர்ந்தார் .அப்புறம் என்ன வழக்கமான கொண்டாட்டமான பேச்சு போய்க் கொண்டே இருந்ததில் மணி மூன்று ஆகிவிட்டது .இதில் அடுத்தநாள் படம் பார்க்கச் செல்வது என்று வேறு முடிவு .நல்ல சாப்பாடு கணேஷ் ,கருப்பு .
அடுத்தநாள் சீக்கிரம் எழுந்து பார்த்தால் அன்பு இன்னும் எழுந்து கொள்ளவில்லை என்று செய்தி வந்து சேர்ந்தது .நண்பர் வெங்கடேஷ் அழகர்சாமி நீண்ட இடைவேளைக்குப் பின் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது (சாருவின் சந்திப்பு எங்கு நடந்தாலும் அங்கு ஆஜராகி விடுவார் ).மாலை விழாவிற்கு நான் ,பூர்ணா ,கணேஷ் அன்பு ,மருது ,கருப்பு ,வெங்கடேஷ் அழகர்சாமி ஆகியோர் சென்றோம் .  அங்கே நின்று கொண்டிருந்த ஜெகவைக் கண்டவுடன் “மாமு”னு போய் கட்டி அணைத்து ,முத்தம் பெற்று பேரின்பம் பெற்றோம் .

அதற்க்கு அடுத்து தம்பி அஜித் வந்து கைகுடுத்துக் கட்டி அணைத்து நான் அஜித்னு சொன்னான்,சத்தியமா நான் நம்பல ,தம்பி இனி போட்டோ போடும்பொழுது கொஞ்சம் வெளிச்சத்தில் எடுத்த போட்டவ போடு .என்ன மாதிரி இருப்பேன்னு நினைச்சு ஏமாந்து போயிட்டேன் பார்த்தேல்ல?நண்பர்கள் ஸ்ரீராமை அறிமுகம் படுத்தி வச்சாங்க, டாக்டர் வேறயா கொஞ்சம் தள்ளி நின்றே ஒரு வணக்கத்தைப் போட்டு விட்டு நகர்ந்து விட்டேன் .அப்புறம் அவர் என்கிட்டே மேடையில் வைத்துப் பேசின பொழுதெல்லாம் ,டாக்டரிடம் பேசும் புது நர்ஸ் மாதிரியே பேசினேன். இது செட்டகாது டாக்டர் ,அடுத்த தடவை அள்ளி அணைத்துக் கொள்ளுகிறோம் .அதுதான் நமக்கு சரிபட்டு வரும் .

தம்பி சுரேஷ்குமார் கமலகண்ணன் .என் இனமடா நீ .இப்பொழுதான் பார்க்கிறோம் .இணையம் வழியாக சாரு வாசகர் வட்டத்தில் தான் பழக்கம் .நல்ல நட்பு .தம்பி .கொடுத்த வேலையை கண்ணும் கருத்துமாக செய்வார் .(உதாரணம் : டாக்டர் ஸ்ரீராம் எனக்கு ஒரு வேலை விழா முடியும் பொழுது குடுத்தார் .அப்பொழுது என்னிடம் கணேஷ் அன்பு பத்திரமாக பார்த்து கொண்டு வர சொன்ன லேப்டாப் இருக்கிறது ,நான் தம்பியிடம் “தம்பி ,லேப்டாப் பர்திகோல் வந்து வந்கிகிறேனு சொல்லிட்டு மறந்து மைலாப்பூர் வரை போய் விட்டேன் .மணி 10:30 .ஆனால், தம்பி ,கடமையாக கண்ணும் கருத்துமாக இருந்து விழா முடிந்த அடுத்தநாள் போய் கணேஷ் அன்புவிடமே சேர்த்தாருன பார்த்துக் கொள்ளுங்களேன்) .
நிர்மல் எங்கள் வீட்டு அன்புப் பிள்ளை .வாஞ்சையுடன் அணைத்து அனைவர் நலம் விசாரித்து விட்டு ,இரவே கிளம்பனும் உறவேனு சொல்லிட்டு, டாக்டர் அருணா ராஜை அறிமுக படுத்தி வைத்தார் .டாக்டர் உங்க போஸ்ட் போல்ட்டா இருக்கு ,நீங்க அன்னைக்குக் கொஞ்சம் பயந்த மாதிரி தெரிஞ்சதே ?.உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி .
கொஞ்ச நேரத்தில் எல்லோருக்கும் டீ ,கேசரி ரெடி ஆன உடன் நண்பர்கள் அவர் அவர்களாக வேலையைப் பகிர்ந்து கொண்டு செய்ய ஆரம்பித்தோம் .இதுதான் சாருவின் பள்ளி முறை .
நான் எல்லோரையும் வரவேற்று சிற்றுண்டி சாப்பிட போய் சாப்பிட சொல்லுவதை எடுத்து கொண்டேன் .அப்பதானே எல்லா நண்பர்களையும் பார்க்க முடியும் .ஆனா ,நான்தான் “ஷாக்” ஆகி போனேன் .
எல்லோரையும் வரவேற்ற பொழுது பாதி தம்பிகள் ,நண்பர்கள் ,தோழிகள் ,” ஹே, மனாசே ,எப்படி இருக்கிங்கனு” கேட்டது ,செம சந்தோசமா இருந்துச்சு . சிலபேரின் பெயர் தெரியாவிட்டாலும்,எல்லோரையும் வரவேற்றது ரொம்ப மனதுக்கு சந்தோசத்தை தந்தது .
நீண்ட கால நண்பர்கள் பார்த்தி,அருண் ,நாதன் ,சாம் ,கிருபா ,மணி அண்ணன் (மனிதனுஷ் கோடி ),வெண்பா ,அருணா அருணா போன்ற நண்பர்களை வரவேற்று மகிழ்ந்தேன் .
“ஜெகா அண்ட் சாம் அன் கோ”வை அரங்கிற்குள் அனுப்புவதற்குள் நான் பட்ட பாடு இருக்கே ……………இச்ச்ஸ் அப்ப்பா ……….செம டீம் மச்சிகளா விட்டுராதிங்க .சாரு ,
விழாவை பத்தியும்,அன்புவின் அன்பு சாப்பாட்டு பத்தியும் அநேகர் சொல்லி விட்டார்கள் . உண்மையில் அன்று உங்கள் பேச்சு அட்டகாசம் .நானும் ,நிர்மலும் சொல்லிகொண்டோம் ,”தல ,இன்னைக்கு அட்டகாச படுத்திகொண்டு இருக்கார்னு “.

சாரு ,என்வாழ்வின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் என்னோடு இருந்தது இரண்டு .
ஓன்று நம்பிக்கை .
இன்னொன்று உங்களின் “ஜீரோ டிகிரி “நாவல் .என்வாழ்வை இந்த இரண்டும் தான் இன்று கட்டமைத்தது என்றால் ,அது மிகை இல்லை .
இல்லை என்றால் நான் என்றோ இறந்து போய் இருப்பேன் சாரு .இல்லை என்றால் பைத்தியம் பிடித்துத் திரிந்திருப்பேன் .ஐ லவ் யு சாரு .

உங்களின் அன்பும் ,குழந்தைத்தனமும் ,கொண்டாட்ட மன நிலையும்,தேடலும் ,பகிர்தலும் ,புரிதலும் ,அணைத்தலும்,அன்பும் எங்களுக்கு உங்கள் மூலமாகவும் ;உங்களின் எழுத்தின் மூலமாகவும் என்று என்றும் கிடைக்கவேண்டும் .

இந்த நல்ல நிகழ்வை ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கும் ;நண்பர்கள் அனைவருக்கும் நன்றி பல .

அன்புடன் ,
மனாசே .