விழா பதிவுகள் – 23

புகைப்படத்தில் டாக்டர் ஸ்ரீராம், நிர்மல், ஜெகா.  நின்று கொண்டிருப்பவர் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த கருணாநிதி அர்ஜித்.
IMG_3952
இரண்டாவது புகைப்படத்தில் ஆத்மார்த்தி, கணேச குமாரன்.  முதல் வரிசையில் உமா ஷக்தி.
IMG_4038
உமா சக்தி முகநூலில்:
விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எப்போதும் சாருவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அரங்கு நிறைந்த கூட்டம் இருக்கும். இன்றும் அப்படியே. கடல் கடந்தும் அவரைக் கொண்டாட நண்பர்கள் வந்ததைப் பார்த்து மகிழ்ச்சி.சாருவைப் பார்த்து வாழ்த்துச் சொல்லவும் புத்தக வெளியீடு முடிந்தவுடன் கிளம்பவும் முடிவு செய்திருந்தேன். திடீரென்று சாரு மேடைக்கு அழைத்ததும் எப்போதும் போல் வார்த்தைகள் கிடைக்காமல் தவித்துவிட்டேன். ஆனால் மனம் மிகவும் நிறைவாக இருந்தது. அந்த மேடையில் நான் மதிக்கும் அத்தனை எழுத்தாளர்களும் இருக்க, தினமணி டாட் காம் சார்பாக எங்கள் டீமின் நன்றியைப் பதிவு செய்ததில் மகிழ்ச்சி.சாரு பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். சரளமாக எழுதுவது மட்டுமின்றி சரளமாக சுவாரஸ்யமாக ஹாஸ்யமாகவும் பேசுபவர் அவர். பல வாசக மனங்களை மட்டுமல்லாது மொத்த அரங்கை கைவசப்படுத்துவது அவருக்கு எளிது.

மகிழ்வும் நிறைவுமான மற்றொரு நாளைப் பரிசளித்த சாருவுக்கு நன்றி. பழுப்பு நிறப் பக்கங்கள் இன்னும் பல பாகங்கள் வெளி வர வாழ்த்துகிறேன்.