பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு. செல்லப்பா : பகுதி 2

பூனாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் விஷ்ணு கேஷவ் வாலிங்க்கர் என்ற ஒரு பிராமண பேராசிரியர் கிறித்தவராக மதமாற்றம் செய்யப்படுகிறார். அடுத்தக் காட்சியில் பேராசிரியர் வீட்டுக்கு தாமோதர் சாப்பேகர், பாலகிருஷ்ண சாப்பேகர் என்ற இரண்டு சகோதரர்கள் செல்கிறார்கள். அன்றைய நாள் 31 ஆகஸ்ட் 1896. பேராசிரியர் கிறிஸ்தவ மதத்தின் நன்மைகள் பற்றிச் சொல்லி அவர்கள் இருவரையும் ஆண்ட்ரூஸ் பாதிரியாரிடம் அழைத்துப் போவதாகக் கூறுகிறார். அப்போது வெளியே பெரிய பஜன் சத்தம் கேட்கிறது. ‘இந்து மதமே இப்படித்தான். கிருஷ்ணரின் ஜன்ம தினத்தைக் கொண்டாடுகிறார்களாம். பாருங்கள். பக்தி என்ற பெயரில் வெற்றுக் கூச்சல், ஆரவாரம். கிருஷ்ணனுக்கு 16108 மனைவிகள். அப்படியும் அவனுக்குப் போதவில்லை. பால்காரிகளுடன் சல்லாபம் செய்கிறான். இந்துக் கடவுள்களெல்லாம் காமாந்தகாரர்கள்’ என்கிறார் மதம் மாறிய விஷ்ணு கேஷவ். ‘இந்து மதத்தைப் பழித்ததற்காக மன்னிப்புக் கேள்’ என்கிறார்கள் சாப்பேகர் சகோதரர்கள். அவர் மறுக்கவே அவரை மண்டையில் பலமாகத் தாக்கி விட்டு வெளியேறுகிறார்கள்.

அடுத்தக் காட்சியில் வன்முறையை வன்முறையால் தீர்ப்பது பற்றி விவாதிக்கிறார்கள் சாப்பேகர் சகோதரர்கள். ‘முதலில் மொகலாயப் படையெடுப்புகளாலும் பின்னர் சிறுமதி படைத்த ஆங்கிலேயர்களாலும் நம் நாடு சீரழிக்கப்பட்டு விட்டது. இதற்காக பிராமணர்களாகிய நாம் ஆயுதம் ஏந்தவும் தயங்கக் கூடாது. தேவையானால் பிரிட்டிஷ் ராணுவத்தில் கூட சேரலாம்’ என்கிறார் சாப்பேகர் சகோதரர்களில் மூத்தவரான தாமோதர்.

தொடர்ந்து படிக்க:

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/03/27/%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AF%81.-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/article3347476.ece