கவி அய்யப்பன் நினைவு நாள் விழா

15-ஆம் தேதி மாலை திருவனந்தபுரம் செல்கிறேன். அன்று இரவும் மறுநாள் முழுவதும் திருவனந்தபுரத்தில்தான் இருப்பேன். 17-ஆம் தேதி காலை அங்கிருந்து சென்னை திரும்புகிறேன். மலையாளக் கவி அய்யப்பன் நினைவு நாள் விழாவில் கலந்து கொண்டு அய்யப்பன் மெமேரியல் லெக்சரும் கொடுக்க இருக்கிறேன். அய்யப்பனுடன் பழகியிருக்கிறேன். திருவனந்தபுரம் போகும்போதெல்லாம் அவரும் நானும் ஏதாவது ஒரு மதுபான விடுதியில் அமர்ந்து ஐந்தாறு மணி நேரம் பேசிக் கொண்டிருப்போம். ஷெல்லி, கீட்ஸ் போன்றவர்களின் கவிதைகளை சினிமா பாடலைப் போல் ராகத்தோடு பாடுவார். மலையாளத்தில் கவிதை என்றாலே பாட்டு தான். தமிழை தமிழர்கள் போலவே பேசுவார். துளிக்கூட மலையாள வாடை தெரியாது. திருவனந்தபுரம் நண்பர்கள் அங்கே என்னை சந்திக்கலாம். இது பற்றி ஹிண்டுவில் ஒரு செய்தி வந்துள்ளது.

http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/a-poetry-festival-in-memory-of-a-ayyappan/article9213362.ece

On October 16, Tamil writer Charu Nivedita will deliver the Ayyappan memorial lecture. Minister for Culture A.K. Balan will inaugurate the function.