பயிற்சிப் பட்டறை

ஒளிப்பதிவு & புகைப்படக் கலை – பயிற்சிப்பட்டறை

06-11-2016, ஞாயிறு, மாலை 5 மணிக்கு.

நன்கொடை: 100 ரூபாய் மட்டும்.

பயிற்சியளிப்பவர்: ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவிசங்கர்

நண்பர்களே, தமிழ் சினிமாவின் நூற்றாண்டை தமிழ் ஸ்டுடியோ கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தொகுப்பு குறித்து படத்தொகுப்பாளர் லெனின் சென்ற மாதம் ஒரு குறும் பயிற்சிப்பட்டறை நடத்திக் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக ஒளிப்பதிவாளரும் தமிழ்நாட்டின் மிக சிறந்த புகைப்படக் கலைஞருமான வைட் ஆங்கில் ரவிசங்கர் எதிர்வரும் ஞாயிறு மாலை 5 மணிமுதல் 9 மணி வரை புகைப்படக்கலை, ஒளிப்பதிவு சார்ந்து ஒரு குறும்பயிற்சிப் பட்டறையை நடத்திக்கொடுக்க உள்ளார். அண்மையில் வெளியான பிசாசு படத்தில் இவரது ஒளிப்பதிவு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிகழ்வையும் எப்போதும் போல் இலவசமாக வைத்துவிடலாம். ஆனால் பயிற்சி என்பதால் பியூர் சினிமாவின் மாடியில் உள்ள அரங்கில்தான் வைக்க முடியும். அதற்கென சில பிரத்யேக வசதிகள் தேவைப்படுகிறது. ப்ரொஜெக்டர் உள்ளிட்ட வசதிகளுக்காகவும் அரங்க வாடகைக்காகவும் 10000 ரூபாய்க்கு மேல் தேவை. எனவே நன்கொடையாக 100 ரூபாயை நிர்ணயித்துள்ளோம். இந்த நன்கொடை முழுக்க மேற்சொன்ன செலவுகளுக்காகவே. பயிற்சியளிக்கும் ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவிசங்கர் இதற்காக ஒரு ரூபாய் கூட தேவையில்லை என்று சொல்லி இலவசமாகவே நடத்திக்கொடுக்கிறார்.

பயிற்சியில் கலந்து கொள்ள குறைந்த அளவிலான நண்பர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். எனவே முதலில் முன்பதிவு செய்து பணம் செலுத்தும் நண்பர்களுக்கே இருக்கை உறுதி செய்யப்படும். 100 ரூபாய் பணத்தை பியூர் சினிமா அலுவலகத்தில் செலுத்திவிட்டு நுழைவு சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

முன்பதிவு செய்ய: 9566266036, 044 42164630