சினிமாவும் இலக்கியமும் – சாரு நிவேதிதாவுடன் ஒரு கலந்துரையாடல்

நண்பர்களே! தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக சினிமாவின் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த நூறு கலைஞர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வை நடத்தி வருகிறது. தமிழ் சினிமா இலக்கியத்தை எவ்விதம் அணுகியிருக்கிறது, இலக்கியம் சினிமாவிற்கு எவ்விதம் தேவைப்படுகிறது, இயக்குனர்கள் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன, என்பது போன்ற விவாதங்கள் நடைபெறும். சினிமாவும் இலக்கியமும் என்கிற தலைப்பில் சாரு நிவேதிதாவுடன் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம். அனுமதி இலவசம். அனைவரும் வருக.

நாள்: டிசம்பர் 3, 2016, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு.

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி.

(வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.)

– தமிழ் ஸ்டுடியோ அருண்