இமயம் (5)

எனக்குப் பிடித்த தென்னமெரிக்கப் பாடகர்களில் ஒருவர் Ze Ramalho.  ப்ரஸீலைச் சேர்ந்தவர்.  ப்ரஸீலுக்கு வெளியே அதிகம் பிரபலமாகதவர் எனினும் ப்ரஸீலில் இவருடைய பாடல்கள் கடந்த 45 ஆண்டுகளாக பிரபலம்.  ஆம்.  இவர் வயது 64.  இப்போதும் இவர் 45 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவுக்கு ப்ரஸீல் மக்களின் உணர்வுத் துடிப்பாக இருந்தாரோ அதேபோல் இருக்கிறார்.  பின் வரும் பாடல் ஸே ரமாலோவின் முக்கியமான பாடல்களில் ஒன்று.  போர்த்துகீஸ் மொழி உங்களுக்குப் புரியாவிட்டாலும் இந்தப் பாடலின் ஆன்மா உங்கள் நாடி நரம்புகளில் பாய்வது நிச்சயம்.  Chao de giz என்ற இந்தப் பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே:

I get down from this loneliness, spread stuff on a ground of chalk
There are a mere daydreams torturing me
Often clipped photographs in newspapers with leaves
I’ll throw you on a confetti-keeping fabric

 

I fire cannonballs, it’s useless, for there’s a Grand Vizier
There are so many old violets without a hummingbirdi
I’d like to wear, who knows, a straight jacket, ou a condom
But they won’t make fun out of us
Nor shall I kiss you, thus wasting my lipstick

 

Intro

 

Now, I hop in a truck, on the canvas I’m knocked out again
Foerever I was chained to your heel
My twenties of “boy, that’s over, baby” , Freud explains
I won’t get dirty smoking just one cigarrette
Nor shall I kiss you, thus wasting my lipstick
Concerning the confetti’s fabric, my carnival is over
And this explains why sex is a popular subject

 

Further, I’m going away

 

Further…

இந்தப் பாடலின் இணைப்பு

http://www.youtube.com/watch?v=yTelSxYo_rk

இந்தப் பாடலுக்கும் எங்களின் இமயப் பயணத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?  இருக்கிறது.  Pangong Lake இல் இரண்டு தினங்கள் (இரண்டு பகல், ஒரு இரவு)  தங்கினோம்.  நான் என்னுடைய பயணத்தில் எத்தனையோ அற்புதங்களைப் பார்த்திருக்கிறேன்.  ஆனால் பாங்கோங் ஏரியைப் போன்ற இடத்தை வேறு எதனோடும் ஒப்பிட முடியாது.  பூலோக சொர்க்கம் என்றே அங்கே போர்டு வைத்திருக்கிறார்கள்.  அது உண்மையும் கூட.   14,270 அடி உயரத்தில் உள்ளதால் நம்மால் இயல்பாக மூச்சு விட முடியவில்லை.  ஒரு மாதிரி கஞ்சா அடித்தாற்போல் இருக்கிறது.  134 கி.மீ நீளமும் ஐந்து கி.மீ. அகலமும் கொண்ட ஏரி இது.  இதன் முக்கால்வாசிப் பகுதி திபெத்திலும் கால் வாசி இந்தியாவிலும் உள்ளது.   அதற்கு முந்தின இரவு மூங்கில் தோட்டம் என்ற பாடலை (கடல்) திரும்பத் திரும்பப் போட்டு கேட்டுக் கொண்டிருந்தோம்.  அந்த மூங்கில் தோட்டம் பாடலின் பின்னணி இசை முழுவதும் Chao de giz பாடலிலிருந்து பெறப்பட்டது.  நீங்களே கேட்டுப் பார்க்கலாம்.  அந்த பாங்கோங் இரவில் camp fire போட்டு இரண்டு மணி வரை பாடியும் ஆடியும் கொண்டாடினோம்.  ஆனால் அதிகாலையில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த போது நான் எழுந்து அந்தப் பரந்து விரிந்திருந்த ஏரிக் கரையில் அமர்ந்து தியானம் செய்தேன், அரை மணி நேரம்…   அப்போது கணேஷ் என்னைப் புகைப்படம் எடுத்து வாசகர் வட்டத்தில் போட்டிருக்கிறார்.  அந்தப் புகைப்படத்தை இங்கே இணைக்க எனக்குத் தெரியவில்லை.  அதனால் யூட்யூபிலிருந்து தருகிறேன்.

இன்னொரு விஷயம்.  கண்ணதாசன், வைரமுத்துவுக்குப் பிறகு என்னைக் கவர்ந்த பாடலாசிரியர் வைரமுத்து தான்.  இதைப் பலமுறை நான் எழுதியிருக்கிறேன்.  இருவர், ஆய்த எழுத்து போன்ற படங்களில் அவர் எழுதியவை உதாரணம்.  இப்போது கடல்.

http://www.youtube.com/watch?v=fMx_cj0VuVk

இது மூங்கில் தோட்டத்தின் இணைப்பு

 

Comments are closed.