இந்தப் புகைப்படங்கள் மூன்றும் நவீன் குமார் எடுத்தது. இவர் எங்கள் இமயமலை குழுவில் இல்லை. வாசகர் வட்ட நண்பர். இவரும் மணாலியிலிருந்து லே வரை மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார். இவர் Nikon D90 கேமராவில் எடுத்த புகைப்படம் இது. பின்வருவது அவர் வட்டத்தில் எழுதியது… ”ரொதாங்கைத் (Rohtang Pass) தாண்டினால் மழை அவதியில்லை என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் மழை பெய்தால் ரொதாங்கைக் கடப்பதே சிரமம். சாலை முழுக்க சகதியாகத்தான் இருக்கும். தெறிக்கும் சகதியல்ல… பாதி வண்டியை உள்ளிழுத்துக் கொள்ளும் அடர்த்தியான சகதி (slush). அதிலிருந்து வாகனங்களை வெளியிழுப்பதே கொஞ்சம் சிரமம். அப்படி ஒரு மழை நாளில் சிக்கி ரொதாங்கைக் கடக்கவே எட்டு மணி நேரம் பிடித்தது எனக்கு”.
நடுவில் ஊதாவும் வெள்ளையுமாகத் தெரிபவை கூடாரங்கள். எங்கள் குழு இப்படிப்பட்ட கூடாரங்களில்தான் தங்கியது…
எங்கள் குழு கடந்து சென்ற பாதை…
Comments are closed.