காந்தி

காந்தி பற்றி எதுவுமே அறியாத முழு மூடர்கள் காந்தி பற்றி கன்னாபின்னா என்று வாய்க்கு வந்ததை உளறுவதை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  அப்படி உளறுபவர்களில் 15 வயதிலிருந்து 25 வயது வரை உள்ளவர்கள் அதிகம்.  25-க்குப் பிறகு அவர்களுக்கு மனைவியோடு பிரச்சினை பண்ணுவதிலும் அல்லது மனைவி கொடுக்கும் பிரச்சினைகளை சமாளிப்பதிலும்  பணம் சேர்ப்பதிலும் வீடு கட்டுவதிலும் குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக வளர்ப்பதிலும் நேரம் போய் விடுகிறது.  காந்தியாவது பூந்தியாவது?  ஆனால் பதினைந்திலிருந்து இருபத்தைந்து வயது வரை உள்ள மாணவ மணிகள் மத்தியில் காந்தியைத் திட்டுவது மோஸ்தராக உள்ளது.  இவர்களின் அரசியல் உணர்வு என்பதில் இந்துத்துவாவும் ஊழல் எதிர்ப்பும் கலந்து உள்ளது.  முற்போக்கு சிகாமணிகளாக இருந்தால் இந்துக்களைத் திட்டுவது, இந்துத்துவாவைத் திட்டுவது, காந்தியையும் திட்டுவது என்று போகிறது.  முகநூல் இவர்களுக்கெல்லாம் கிடைத்த பெரிய தளம்.  இந்த நிலையில் ஜெயமோகனின் காந்தி பற்றிய இந்த விளக்கக் கட்டுரை அவர்களின் கண்களைத் திறக்கலாம் என்று நினைக்கிறேன்.

http://www.jeyamohan.in/2773#.WR6bSX00jIU