ஃபாசிசம்

மக்கள் கூட்டம் என்ன சாப்பிட வேண்டும் என்பதைக் கூட தீர்மானிக்கும் ஃபாஸிஸ்டுகளைப் பற்றி ஜெகதீஷ் முகநூலில் எழுதியிருப்பது:

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தரம்/விலையை கண்காணிப்பது என்பது ‘மக்களின் நலனுக்காக‌ ஆட்சி’ செய்யும் எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கம்தான். நான் பார்த்த வரையில் இந்தியாவைத் தவிர எல்லா நாடுகளிலும் இந்த கண்காணிப்பு ஆத்மார்த்தமாக நடைபெறுகிறது. உதாரணத்துக்கு இங்கு அரேபியாவில் அடிப்படை அத்தியாவசிய உணவுப் பொருளான ரொட்டி மாவு விலையை அரசு கண்காணிக்கிறது. முழுவ‌தும் இறக்குமதியை நம்பி இருக்கும் நாடு என்பதால், சந்தையில் விலை ஏறும்போது அரசு மானியம் வழங்கி விலையைக் கட்டுக்குள் வைக்கிறது. நான் இங்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது, ஒரு அடி விட்டமுள்ள ரொட்டி அப்போதிருந்து இன்றுவரை ஒரு ரியால்தான். சமூகத்தின் அடித்தட்டு மக்களின் உணவுத்தேவையை முக்கியமாகக் கருதுவதால் இந்த கண்காணிப்பு. அரேபியாவில் என்றில்லை, முற்றிலும் உள்நாட்டு விளைச்சலில் வரும் அத்தியாவசிய காய்கறிகளின் விலையைக் கூட கண்காணிப்பதை கிழக்கு ஆசிய ஐரோப்பிய நாடுகளில் பார்த்திருக்கிறேன்.

இந்தியாவுக்கு வருவோம். இங்கு இன/மத/சாதி பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் தேவைப்படும் அடிப்படை உணவுப் பொருள் பருப்பு. இறைச்சி உண்ணாதவருக்கும் புரதத் தேவையை உறுதி செய்யும் முக்கியமான உணவுப் பொருள். ஆனால் பருப்பு விலை என்ன பாடுபடுகிறது என்பதை நாம் அறிவோம். முறைப்படுத்தபட்ட இந்தப் பொருளே கண்காணிக்காமல் வேடிக்கை பார்க்கும் கையாலாகாத காட்டுமிராண்டி கலுசடை அரசாங்கம், முறைசாரா தொழிலான விவசாயத்தின் முதுகெலும்பான மாட்டு வணிகத்தைக் கண்காணிக்கப் போகிறதாம். இதுக்கு முட்டுக்குடுக்க கண்டமானிக்கு பேசும் காட்டுமிராண்டிகள். காலநடை வளர்ப்பு பற்றி கிஞ்சித்தும் தெரியாமலும் விளக்கம் கொடுக்க வாயப்பொழக்கும் விருதாக்கூதரைகள்.

மனிதனுக்கு உணவை உறுதி செய்வதை விட மேன்மையான‌ காரியம் என்ன இருக்கிறது? இங்கே கண்காணிக்க வக்கில்லை என்றாலும் வளமையாக இருக்கும் உணவின் மீது கைவைத்து நாசம் செய்றாய்ங்கள். உருப்படுவீங்களா?

அரசு கெடக்கட்டும். மக்களோடு வாழ்பவர்கள்தானே இந்த ஃபேஸ்புக் ஆட்கள் எல்லாம்?!! அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை உட்கொள்ளும் முக்கியமான உணவு விசயத்தில், எந்த புண்ணாக்கு யதார்த்தமும் தெரியாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் எகத்தாளம் பேச கூச்சமே இருக்காதா. ச்சை