தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம்?

அராத்துவின் பையன் பெயர் ஆழிமழைக் கண்ணன்.  இப்படியெல்லாம் பெயர் வைக்காதீர்கள் என்று எவ்வளவோ மன்றாடினேன்.  அவர் கேட்கவில்லை.  தாஸ்தாயேவ்ஸ்கி, ப்யூகோவ்ஸ்கி, போர்ஹேஸ் என்றெல்லாம் வெளிநாட்டுக்காரன்கள் பெயர் வைக்கிறார்கள்.  அதை நம் ராமகிருஷ்ணன், போர்ஹே, தாஸ்தாவேஜ்ஸ்கி என்று உச்சரிக்கும் போதுஎவ்வளவு கோபப்படுகிறீர்கள்.  Jodorovsky என்ற பெயரை ஹொடரோவ்ஸ்கி என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று எங்களையெல்லாம் எவ்வளவு டார்ச்சர் செய்தீர்கள்…  அதே போல் அவன்களும் என் மகன் பெயரை ஆழிமழைக் கண்ணன் என்று சொல்லட்டும் என்றார் அராத்து.

அது சரி, ஆனால் அங்கேயும் ஒரு ராமகிருஷ்ணன் இருந்து கொண்டு ஆழிமழைக் கண்ணனை ஆய்மாய்க் கண் என்று சொல்லித் தொலைத்தால் என்ன செய்வது என்று கேட்டேன்.  அப்படியானால் அங்கேயும் ஒரு சாரு நிவேதிதா இருந்து கொண்டு ஆய்மாய்க் கண் என்று சொல்லக் கூடாது, ஆழிமழைக் கண்ணன் என்று தான் சொல்ல வேண்டும் என்று கட்டுரை எழுதுவார், கவலை வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

அந்த ஆழிமழைக் கண்ணனோடு பிச்சைக்காரன் ஒரு இலக்கியப் பேட்டி எடுத்தார்.  கேள்வியை எல்லாம் தன் கட்டுரையில் எழுதி விட்டு ஆழி சொன்ன பதிலை மட்டும் எழுதவில்லை.  காரணம், பதில்கள் அவ்வளவு பயங்கரம்.  பெண் கவிஞர்கள் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேள்விக்கு தண்டம் தண்டம் என்றான்.  தமிழ் இலக்கியத்தின் எதிர்கால நிலை என்ற கேள்விக்கு உருப்படாது, உருப்படாது என்று பதில்.  உனக்கு சாரு பிடிக்குமா ஜெயமோகன் பிடிக்குமா என்ற கேள்விக்கு என்ன சொன்னான் என்று சொன்னால் ஜெ. ரசிகர்களிடமிருந்து எனக்கு வரும் ஆபாசக் கடிதங்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும்.

ஆழியிடம் எனக்குப் பிடித்த ஒன்று, அவன் ஸ்பஷ்டமாக சாரு என்று அழைத்தது.  பொதுவாக இப்படிப்பட்ட சிறுவர்களின் சிருஷ்டித்தன்மையை பள்ளிக்கூடத்தில் நசுக்கி அழித்து விடுவார்கள்.  ஆழிக்கு அப்படி ஆகாது.  காரணம், அவன் தந்தை அவனுக்கு இப்போதே லவ்டேல் பள்ளியில் (ஊட்டி லாரன்ஸ்) இடம் பிடித்து வைத்து விட்டார்.  ஆழியின் அக்கா இவனை விட பெரிய ரௌடி.  அவளும் அந்தப் பள்ளியில்தான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள்.  சென்னையின் கொலைகாரப் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்க்காதீர்கள் என்று சொல்லி அராத்துவை மதமாற்றம் செய்ததில் அடியேனுக்கும் ஒரு சிறிய பங்கு உண்டு.  (சென்னையின் நம்பர் ஒன் பள்ளியில் நீச்சல் குளத்தில் நடந்த சம்பவம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.  இங்கே உள்ள பள்ளிகள் ரேஸ் குதிரைகளின் பயிற்சி மையமே தவிர பள்ளிகள் அல்ல.

http://www.pichaikaaran.com/2013/08/blog-post_6674.html?spref=fb

Comments are closed.