அர்ச்சனை

விஜய் ரகுநாதன் முகநூலில் எழுதியிருந்தது:

முன்தினம் சாரு செய்த விவேகம் திரைப்படத்தின் விமர்சனம் பார்த்தேன். படம் பற்றிய தகவல்களை அறிய இல்லை, அவர் குரல்வளம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்க. மனுஷன் blog எழுத தொடங்கிய காலம் orkut வழி ஒரு தோழி சொல்ல சாருவின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகம். அன்று முதல் அந்த தேகக்கதைகள் படிக்க அலாதியான அலைச்சல் உண்டு எனக்கு. (ஆம் பிஞ்சில் பழுத்தேன்)

என் நட்புவட்டத்துக்கு தெரியும், நான் எழுத்தாளர்கள் நட்பு வளர்த்துக்கொள்வது இல்லை என்று. காரணம் என்னுடைய எண்ணத்தில் நான் வாசிக்கும் எழுத்தாளர்களுக்கு ஒரு வடிவம் உண்டு, அதை அவர்களை சந்தித்து உடைக்க விரும்பமாட்டேன். அதுபோக நட்பாக இருந்தால் என் விமர்சனம் தடைபடும். ஆனால் இப்பொழுது அந்த கொள்கைகளை தளர்த்துவிட்டேன். மனுஷன் குரல் எப்படி என்றால்: இளையராஜா தம்பி கங்கை அமரன் பேசுவதுபோல் இருந்தது. நான் வரைந்த வடிவம் இல்லை. ஆனால் அதை வில்லன் look இருக்கு.

இந்த பதிவு சாரு என்னை கவர்ந்த எழுத்தாளர், எழுத்தாணி எரிமலை என்று புகழும் பதிவு இல்லை, நான் சாருவின் எழுத்துகளை அதிமாக விமர்சித்துளேன், So I don’t owe him and he don’t owe me.

விஷயத்துக்குவரேன், நேற்று Shalinனுடன் தொலைபேசி உரையாடலில் சாரு குரல் குறித்து என் ஆதங்கத்தை தெரிவிக்கும்போது அவர் சொன்னார் “அத விடு …அந்த வீடியோ கமெண்ட்ஸ் பாரு ரொம்பவும் மோசம்.” என்றார்.

எனக்கு ஒரு அளவுக்கு கணிப்பு உண்டு. Social media comment, வழக்கமா வசை என்று ஒரு data base போற்றுக்கேன். அதன்படி நான் நினைத்த வார்த்தைகள் இருந்தது அந்த comment feedல்.

என்னை அதிகம் சிந்திக்க வைத்தது ஒரு pattern அதில் கண்டேன். ஏறத்தாழ முக்கால்வாசி நபர்கள் வயது முதிர்ந்த ஆள் எப்படி இந்த தலைமுறை ரசிக்கும் படத்தை விமர்சிக்கலாம் என்று, அவர்கள் நாகரிகம் ஏற்ப கேட்டுருந்தனர்.

இது புதிது இல்லை நம் generationக்கு ஓரு திமிரு உண்டு. நான் என் தாத்தாவை விட புத்திசாலி, காரணம் hi tech தாக்கம் என்ற, ஒரு அரைகுறை கர்வம். அது உண்மைதான் என்றாலும், அவர்கள் வயதை வைத்து அனுபவம் மற்றும் உலக, சமுதாய புரிதல் இடைபோடுவது தவறு.

இந்த generation gap என்பது அவர்களையும் நம்மையும் judgemental freak என்ற நிலையில் வைக்க காரணம், நம் சிந்தனை மற்றும் tasteகளை பரிமாறி மதிக்காமல் இருப்பதை.

என் அப்பா வயதில் இருப்பவர்கள், என் Y-Gen வாழ்க்கை முறை வாழ நினைத்து வாழ்ந்தால், உடனே நாம் “இந்த வயசுக்கு ஏன் இத்தலாம்” என்று ஒதுக்கிவிட்டு அவர்களை outdated என்று சொல்வது நேர்மை இல்லை.

சாரு வயதை மட்டும் வைத்து judge செய்யும் அவர்களுக்கு தெரியாது, சென்னை discotheque வாழ்க்கை எப்படி என்று பல வருடம் முன் எழுதியவர் என்று. அதுபோக sexual orientation பற்றிய தகவல்களை அவர் அன்று பேசிவர். அவர் மட்டும் இல்லை, சில அப்பாக்கள் மற்றும் தாத்தாக்கள் விஷயம் தெரிஞ்ச ஆளுங்க.

முக்கியமாக, நம் generation நாளை outdated ஆகும் என்று கூறிக்கொண்டு, நம் முன்னோர்கள் அனைவரும் முட்டாள்கள் இல்லை என்று முடிக்கிறேன்.

பிகு: சாரு sir: Anirudh இசை metal என்று சொன்னது Black Sabbathக்கு நீங்கள் செய்த துரோகம்.