jagermeister என்ற மூலிகைகளால் ஆன மது ஒன்று உள்ளது. அராத்துவின் நண்பர் பிரபு எங்களுக்கு இதை அறிமுகப்படுத்தினார். ஜெர்மன் மது. மூலிகை மணம் வீசும் திரவம். ருசி நம் ஜிகிர்தண்டா ருசி. இதை ஹெகாமஸ் என்று உச்சரிக்க வேண்டுமாம். பாக்கி விபரங்களை நீங்கள் கூகிளில் தேடிக் கொள்ளலாம். பிரபுவும் அராத்துவும் நானும் ஒருமுறை குடித்திருக்கிறோம். மூன்று பேருக்கும் ஒரு போத்தல் சரியாக இருந்தது. இதைத் தண்ணீர் சேர்க்காமல் ஃப்ரீஸரில் வைத்து சில்லென்று அருந்த வேண்டும். இப்போது இரண்டாவது பெக் அருந்திக் கொண்டிருக்கிறேன். உபயம் நண்பர் குரு. ஞாபகம் இருக்கிறதா, இவரை? 7 ஆண்டுகளுக்கு முன்பு தனியாளாக பெங்களூரில் நம்முடைய முதல் வாசகர் வட்ட சந்திப்பை ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடத்தியவர்.
இதைக் கேட்டுப் பாருங்கள்… without you in sax by freddy just
http://www.youtube.com/watch?v=cp9B6KjjDCQ
Comments are closed.