கணேஷ் அன்புவுக்கு, அன்புடன்…

கணேஷ் அன்புவுக்கு,

அன்புடன் சாரு எழுதுவது.  முன்பு ஒருமுறை ஸீரோ டிகிரியை நான் வாசித்துப் பதிவு செய்யலாமா என்று நாம் யோசித்துக் கொண்டிருந்தோம் இல்லையா?  அதற்கு ஒரு முன்மாதிரி கிடைத்துள்ளது.  எனக்குப் பிடித்த ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் மிஷல் வெல்பெக் (Michel Houellebecq) அவர் எழுதிய கவிதைகளைப் படிக்கிறார்.  அதை அவருடைய நண்பர்கள் விடியோவாகவும் எடுத்துள்ளனர்.  பின்வரும் லிங்கை அவசியம் பாருங்கள்.  நாமும் செய்யலாமா, எப்போது ஆரம்பிக்கலாம், யார் யார் மாடல்கள் என்று எனக்கு மெயில் செய்யவும்… மாடல்கள் கிடைப்பது சிரமம் எனில் அராத்துவின் எண்ணற்ற தோழிகளைக் கேட்கலாம்.  அராத்து சிபாரிசு செய்தால் கேட்பார்கள்…  மேலும், நானும் அராத்துவும் தாய்லாந்தில் எடுத்த விடியோக்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  நாங்கள் இருவரும் professional videographers இல்லாவிட்டாலும் நிச்சயம் ஆதி பகவனை விட நன்றாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன்…

சாரு

http://www.youtube.com/watch?v=LLULVpcb5Mw