எழுத்தாளர்களைக் கொண்டாடுதல்… (2)

இந்தியாவில் எழுத்தாளர் என்றால் அவருக்கென்று சில அடையாளங்கள் உள்ளன.  அவர் நிச்சயமாக இடதுசாரியாக இருக்க வேண்டும்; anti Hindu வாக இருக்க வேண்டும்; நரேந்திர மோடியை எதிர்த்தே ஆக வேண்டும் (சமீபத்தில் யு.ஆர். அனந்தமூர்த்தியின் உளறலை நீங்கள் படித்திருக்கலாம்); நாஸ்திகவாதியாக இருக்க வேண்டும் (ஆனால் இந்துக் கடவுள்களை மட்டும்தான் மறுக்க வேண்டும்; மற்ற கடவுளகளை அல்ல); முற்போக்குச் சிந்தனை கொண்டவராக இருக்க வேண்டும்; பெண்கள் எதைச் செய்தாலும் ஆதரிக்க வேண்டும்… இது போன்ற cliche-க்கள் ஐரோப்பாவிலும் உண்டு.  இது எதற்கும் கட்டுப்படாதவர் மிஷல் வெல்பெக்.  அவருடைய பேட்டி ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கும் போது அது நான் கொடுத்த பேட்டியைப் போலவே இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.  கீழ்க் கண்ட பதிலைப் பாருங்கள்:

கே: ஃப்ரெஞ்ச் பத்திரிகைகளைப் பற்றி உங்கள் கருத்து?

பதில்: First of all, they hate me more than I hate them. What I do reproach them for isn’t bad reviews. It is that they talk about things having nothing to do with my books—my mother or my tax exile—and that they caricature me so that I’ve become a symbol of so many unpleasant things—cynicism, nihilism, misogyny. People have stopped reading my books because they’ve already got their idea about me. To some degree of course, that’s true for everyone. After two or three novels, a writer can’t expect to be read. The critics have made up their minds.

Comments are closed.