என் நண்பர்கள்ளாம் பதிப்பகம் ஆரமிச்சு கலக்கிக்கிட்டு இருக்கிறதால (போன்ல கூட பிடிக்க மிடில) நானும் எஸ்.ரா. போல ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். பேர்: விஷ்ணுபுரம் பதிப்பகம். (ஏன், அந்தப் பேரு அவருக்கு மட்டும்தான் சொந்தமா?) அச்சில் இருக்கும் புத்தகங்கள்:
முதல் புத்தகம்: ராம்ஜி நரசிம்மனின் திருவல்லிக்கேணி (நாவல் – ட்ரிப்ளிகேன் ரவுடிகள் பற்றிய நேரடி அனுபவ நாவல்)
2. காயத்ரி : Pas d’oignon pas d’ail (french novel)
3. செல்வி ராமச்சந்திரன் – ஒரு பதிப்பாளரும் 500 தமிழ் எழுத்தாளர்களும் (சுய சரிதை)
4. செல்வி ராமச்சந்திரன் – சைத்தான் (கவிதைத் தொகுதி)
5. ஜெயமோகன் – சினிமா வசனம் எழுதுவது எப்படி? (25 தொகுதிகள் – 25000 பக்கங்கள்) – சிறப்பு அம்சம்: கமல்ஹாசன் முன்னுரை. ஏ.ஆர். முருகதாஸ் – பின்னுரை
6. லக்ஷ்மி சரவணகுமார் – இலங்கைக்கு டவுன் பஸ்ஸில் செல்வது எப்படி? (ட்ராவலாக்)
7. பிரபு காளிதாஸ் : நான் ஒரு ஏழை எழுத்தாளன் (நான் லீனியர் போஸ்ட்மாடர்ன் நாவல் : சாரு நிவேதிதா முன்னுரை)
8. அராத்து : நமீபியா நைட்ஸ் (ஆன்மீக நாவல்)
9. சரவணன் சந்திரன் – திருப்பதி ஏழுமழையான் (நாவல் – எஸ். ராமகிருஷ்ணன் முன்னுரை)
10. எஸ். ராமகிருஷ்ணன் : சாக்ரடீஸும் கார்ல் மார்க்ஸும் (20 மணி நேர உரையின் எழுத்து வடிவம்)