Sarav urs முகநூலில் எழுதியது
சார், சுந்தர் பிச்சை மாதிரி ஒரு பெரிய கார்ப்பரேட் டெக்கி ப்ரெய்ன். ஜன நாயகத்தை மதிக்கிறவன். அவன் ஓட்டை வேற யாரோ போட்டுட்டாங்கன்னு தெரிஞ்சதும் சட்ட ரீதியா போராடுறான் சார். அவனுக்கு அரசியல்வாதிங்க தொல்லை குடுக்கிறாங்க. அவன் டெக்கி ப்ரெய்னை வச்சு அத்தனையும் அடிச்சு நொறுக்கி.. தமிழ்நாட்டுக்கே சி.எம் ஆகுறது தான் சார் கதை…
இந்த ஒன்லைன் கேட்டதும் செம்மையா இருக்குல. இதை யோசிச்சவனை திரைக்கதை எழுத விட்டிருந்தா தாலாட்டிருப்பான் இல்லியா? முருகதாஸ், விஜய்க்கு பில்ட் அப் ஏத்தி சல்லிசல்லியா நொறுக்கி வச்சிருக்காப்ள.
ஹீரோ பக்கம் பக்கமா பேசுறான். என்னென்னத்தையோ பேசுறாய்ங்க. தக்காளி, டொமேட்டோ சாஸ், கலெக்டர் ஆபீஸில் தற்கொலை, டெங்கு சாவுகள், அரசியல் அராஜகம், கலவரம், இலவசங்களை கிண்டல் செய்வது, கள்ள ஓட்டு, ஆதார்கார்டு விமர்சனம், பணப்பெட்டி பதுக்கல், மக்களே தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பது, சமூக சேவை செய்றவங்க எல்லாம் மக்கள் பிரதிநிதிகள்.. சகாயம் IAS, சி.எம் கேண்டிடேட் உஷ்ஷ்ஷ்.
வாட்ஸப் ஷேரிங்கில் மக்களுக்கு ஒரு இன்ஸ்டண்ட் ஆர்கசம் கிடைக்கும்ல அதை படம் முழுக்க குடுத்திருக்காய்ங்க. மல்டிப்பிள் ஆர்கசம் எல்லாம் தாங்க முடில. விளக்கெண்ணையில் செய்த அல்வா மாதிரி இனிக்குது ஆனால் குமட்டுது.
பர்ஸ்ட் டே ஷோ எல்லாம் போயிருக்க கூடாது தான். ஆனால் கார்ப்பரேட் மான்ஸ்டர்ஸ், ஒரு பண்டிகை நாளுக்கு வேற கொண்டாட்டமே இல்லாமல் செய்து இந்த படத்தை பார்க்க வச்சதெல்லாம் வன்புணர்வு. அதனால தான் இந்த விமர்சனமே எழுதிட்டிருக்கேன். இல்லேனா வழக்கம் போல கடந்து போயிருக்கலாம்.
விஜய் சார் இவிங்கல எல்லாம் நம்பி அரசியலுக்கு வந்துறாதீங்க… படத்துல நீங்க வந்தாலும் கை தட்டுறாய்ங்க, வரலட்சுமி வந்தாலும் கைதட்டுறாய்ங்க…. பாத்துகிடுங்க… :/