இயக்குனர் வெற்றிமாறனுக்கு ஒரு கடிதம்…

அன்பு நண்பர் வெற்றிமாறனுக்கு,

நான் உங்களுடைய படங்களை பெரிதும் கொண்டாடுபவன் என்பதை உங்களிடமே சொல்லியிருக்கிறேன்.  உங்கள் படங்களைப் பாராட்டி உயிர்மையிலும் எழுதியிருக்கிறேன்.  படித்திருப்பீர்கள்.  தமிழின் சமகால இலக்கியவாதிகளுடன் நட்பும், சமகால இலக்கியப் பரிச்சயமும் உள்ளவர் நீங்கள் என்பது பலருக்கும் தெரியாது.  இந்த நிலையில் சீன எழுத்தாளர் Jiang Rong எழுதிய Wolf Totem என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பில் பெரிதும் ஆர்வம் காண்பித்து, நண்பர் சி. மோகன் மொழிபெயர்ப்பில் அது வெளிவரவும் காரணமாக இருந்தீர்கள் என்று அறிந்தேன்.  வுல்ஃப் டோட்டம்  ஒரு கோடி பிரதிகள் சீனாவில் விற்றிருக்கிறது.  அதை 500 பேர் மட்டுமே படிக்கும் வாசகப் பரப்பைக் கொண்ட தமிழில் மொழிபெயர்ப்பதில் உள்ள ஆர்வம் எனக்குப் புரியவில்லை.  மேலும், அந்த நாவல் ஆங்கிலத்தில் பொடி எழுத்திலேயே 700 பக்கம் வருகிறது.  போகட்டும்.  இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.  இது பற்றிக் கருத்துச் சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் இந்த நாவல் ஃபாஸிஸத்தைக் கொண்டாடும் நாவல்.  ஹிட்லர் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துள்ளன.  ஆனால் ஹிட்லரின் ஃபாஸிஸத்தை ஆதரித்து வரும் நூல்களை யாரும் சீந்துவதில்லை.  இந்த ஓநாய் குலச் சின்னம் என்ற நாவல் ஃபாஸிஸத்தைக் கொண்டாடுகிறது.  இந்த உலகின் ஒட்டு மொத்த சரித்திரத்தையே மங்கோலியர்கள் தான் மாற்றி அமைத்தார்கள்; அதற்கு ஓநாய் தான் காரணம் என்கிறது இந்த நாவல்.  மங்கோலியர்கள் வேட்டைக்காரர்கள்; அதனால் புத்திசாலிகள்; சீனர்கள் விவசாயிகள்; அதனால் மூடர்கள்.  அதனால்தான் சீனர்களை மங்கோலியரும் ஜப்பானியரும் ஆண்டனர்.  ஏன், உலகம் முழுவதுமே விவசாயிகள் மூடர்கள் தான் என்கிறது இந்த நாவல்.  அந்தக் கோட்பாட்டின் படி பார்த்தால் இந்தியர்கள் அனைவருமே மூடர்கள் என்று ஆகிறது.   இது படுபயங்கரமான இனவாதம் அல்லவா?  wolf totem is undoubtedly a fascist and racist novel.  இதை எப்படி ஆன்மீகத்தையும் சாத்வீகத்தையும் அஹிம்சையையும் உலகத்துக்குப் போதித்த இந்தியாவில் நாம் மொழிபெயர்த்துக் கொடுக்க முடியும்?  நம்மையும் நம் வாழ்க்கை முறையையும் முட்டாள்தனம் என்று சொல்லும் நூலை நாம் எப்படி மொழிபெயர்க்கலாம்?  நம்மை மட்டும் அல்ல; நம் ஒட்டு மொத்த வரலாற்றையுமே அவமதிக்கும் நூல் அது.  வரலாறு என்பது ரத்தத்தால் வெற்றி அடைந்தவனின் வரலாறு தான் என்று சொல்வது எத்தகைய முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆகும்?  இதைத்தான் அந்த சீன எழுத்தாளர் செய்திருக்கிறார்.  அவருடைய கோட்பாட்டின் படி பார்த்தால் காந்தி ஒரு மூடர்.  ஹிட்லர் தான் அற்புத மனிதர்.

நாம் பசுக்களை வணங்கியவர்கள்.  மங்கோலியர்கள் ரத்தத்தில் வாழ்ந்தவர்கள்.  குதிரைக் குட்டிகளை ஓநாய்கள் விரட்டி விரட்டித் தின்னும்.  இதுதான் உயர்ந்த நாகரிகம், இந்த ஓநாய்தான் எங்கள் தெய்வம் என்று சொல்பவனை நாம் எப்படிக் கொண்டாட முடியும் என்று தயவுசெய்து எனக்குச் சொல்லுங்கள் வெற்றி மாறன்…

இந்த wolf totem நூலுக்கு சரியாக ஒரு வருஷம் முன்பாக அக்டோபர் 14, 2012 தேதியில் டெக்கான் க்ரானிக்கிள் மற்றும் ஏஷியன் ஏஜ் தினசரியில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன்.  அதை நீங்கள் படித்திருக்காவிட்டால் இப்போது படித்துப் பாருங்கள்… என் கருத்து தவறாக இருந்தால் அதை நான் மாற்றிக் கொள்ள எப்போதும் தயாராக இருப்பவன் என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்…

Wolf Totem by Jiang Rong sold a million copies till today and not to mention the pirated numbers — like Mao’s Red Book in its heyday. I would classify this book under “anthropology” rather than calling it literature. This book sets a terrific pace like Oscar Lewis’ anthropological book La Vida.

There are no fictional elements in the book (La Vida), but mostly the interview sessions of family members describing their life. Though it was an anthropological research, the eloquent narration of a life filled with cruelty, violence, carnal lust and perversions was avidly read by the readers just like a novel.

In the wake of Cultural Revolution, Chen Shen, a young student from Beijing travels to the grasslands of Olonbulag in Inner Mongolia and happens to live with the nomadic herders for 11 years before returning to Beijing. Wolf Totem illustrates those 11 years of Olonbulag.
No one in the history plundered as many nations as Genghis Khan did. Hailing from a nomadic race from one of the least populated regions of the world whose Mongolian language did not even have its own script. How someone from such a primitive culture managed to do as much as he did; the reason, says Jiang Rong, is the Mongolian’s wolf totem.

It is from wolves that the Mongolians learnt their military tactics. The metaphor: Mongolians are wolf and Han Chinese are sheep. Wolves follow an extremely ordered social life and survive as teams, unlike the sheep; the whole flock of sheep watches with sparkling curiosity when one of them is slaughtered, probably expressing their relief at not being the one killed. Even the tremendous spirits and ability of the Chinese to build the colossal Wall of China could not prevent their defeat at the hands of Mongolians; their sheepishness stood in their way. Jiang Rong concludes it as a “binary opposition” between the nomadic culture and the agrarian culture.

Mongols are like indefatigable wolves; in that sense Mongolia is a spiritual paradise. This is the fundamental message by Jiang Rong in the 700-odd pages of Wolf Totem. But in reality, does the spiritual paradise hold with a land of bloodbath, oozing from the mouths of the unrelenting wolves; they kill and devour all the life forms in the grasslands, including humans; and the humans just do the wolves.

The part of the novel where the wolves devour the young colts is horrific. Such a culture thriving in only cruelty, violence and bestiality inspires awe. The wolves’ freedom comes at the grand cost of the assimilation of other lives.

The nomadic chieftain tells Chen Shen if the wolves don’t hunt the gazelles, their population will burst uncontrolled and the grassland will turn into a desert. But won’t we all prefer a peaceful desert to a fascist grassland where one dominating race devours all other in a macabre ritual of bloodbath.
In Japanese Zen, there is a concept “MU”; it contains great philosophical truths and can be simply explained thus: A lady being asked, “Your husband who beats you after getting drunk; …has he stopped that now?” She can neither utter “yes” nor “no”; silence remains the right answer. That is what is explained as the “MU” concept of emptiness by Zen that may have connection with the void of quantum physics. This may be an alternative to Jiang Rong’s binary opposition.

As I was reading Wolf Totem, memories of India’s sufis and seers kept coming to my mind. If you call the wolf a totem, what do you call Adi sankara, who made wolves and lions follow him like puppies?

The most wonderful thing on earth is giving oneself for others. He belonged to the 12th century. He requests his guru to tell him the “Brahma Ragasyam”. Only after many days of wandering and hunger fasting does the guru tell him the “secret”. Once this was done, the guru warns him, “If you tell this to others you will be damned to hell.” But the sishya climbs up the temple tower and says it out loud for the entire village to hear. “If having heard this secret all these people can go to heaven, I don’t mind being the one to go to hell,” he says. He is Ramanuja, founder of Vaishnavism.

The other wonder is renouncement. For a moment, think of the state of mind that renounces worldly bonds and wanders in the forests, homeless and lonely. Several kings in the history of India may have renounced their all. Nothing would equal that of Chandra Gupta Maurya, who gave up his all after being India’s most powerful emperor. He gave up his throne when he was 42. Became an ascetic and came to Sravana Belgola. And died in Sallekhana which is a Jain ritual of voluntary death by fasting.

Is there anything more sublime than the ruler of a vast kingdom renouncing all pleasures and leaving like an ascetic? Which of the world’s totems can explain this?

பின்வருவது ஏஷியன் ஏஜ் இணைப்பு : http://archive.asianage.com/columnists/extended-mongolian-metaphor-247

டிஸ்கவரி புக் பேலஸில் ஓநாய் குலச் சின்னம் நூலைப் பற்றி பேச இருக்கும் தமிழச்சியும் இந்த என்னுடைய விமர்சனத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.  நான் மட்டும் அல்லாமல் நியூயார்க் டைம்ஸில் இந்த நூலுக்கு விமர்சனம் எழுதியிருப்பவரும் என் கருத்தை ஒட்டியே எழுதியிருக்கிறார். அவர் பெயர் மறந்து விட்டேன்.

Comments are closed.