பொண்டாட்டி

என்னை நாவலின் இடையே சாரு நிவேதிதா என்ற பெயரிலேயே பாத்திரமாக்கி எழுதியவர் மலையாள எழுத்தாளர் பென் யாமின். ஆடு ஜீவிதத்தில் ஒரு ரெஃபரென்ஸ். ஆனால் அடுத்த நாவலில் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனே ஒரு கேரக்டர். அந்த வகையில் பொண்டாட்டி நாவலில் சாரு நிவேதிதா ஒரு முக்கிய கேரக்டர். அந்த கேரக்டர் 99 சதவிகிதம் என்னைப் போலவே முடிவுகளை எடுக்கிறது. அது என்ன ஒரு சதவிகிதம் மிஸ்ஸிங் என்று நாவலைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். வேறொரு மலையாள எழுத்தாளர் எனக்கு வேறொரு நாமகரணம் சூட்டி மஞ்சள் பத்திரிகை ஸ்டைலில் எழுதியிருந்தார். என்னைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதே அவர் நோக்கம். அது ஏன் இப்போது ஞாபகம் வர வேண்டும்? ஒரு ஆவணத் தகவலுக்காகச் சொன்னேன். மற்றபடி அராத்துவின் சாரு நிவேதிதா பாத்திரப் படைப்பு பிரமாதம். மோகமுள்ளின் பாபு மாதிரி இலக்கிய வானில் ஜொலிப்பேன்.

பொண்டாட்டி 2000 பிரதிகள் விற்கும் என்பது என் அனுமானம்.