ஒரு கடிதம்

அன்பின் சாரு அவர்களுக்கு,

என் பெயர் அருண், மதுரையை சேர்ந்தவன். தற்பொழுது ஒரு சிறிய சைவ உணவகத்தின் முதலாளியாக இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களின் பக்தன் நான். ஆம் பக்தன் என்று சொல்வதே சரியானது. நான் ஈஷா யோகாவின் வகுப்புகள் முடித்தவன். ஜக்கி வாசுதேவின் போதனைகளுக்கும் உங்களின் எழுத்துக்களுக்கும் பெரிய வித்யாசம் எனக்கு தெரியவில்லை. மனிதர்களில் இப்படி ஒரு வெளிப்படையான ஆளா ? என்று வியக்க வைத்தவர் நீங்கள்.உங்களை பற்றி எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும். அவை அனைத்தையும் உங்கள் எழுத்து சுக்கு நூறாக்கி விடுகிறது. ஒரு குருவை சிஷ்யன் தேர்ந்தெடுப்பதில்லை  ஒரு குருதான் சிஷ்யனை தேர்ந்தெடுக்கிறார் என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான், அந்த வகையில் ஒரு வாசகன் தனக்கான அபிமான எழுத்தாளரை தேர்ந்தெடுப்பதில்லை ஒரு சிறந்த எழுத்தாளனின் எழுத்தே வாசகனை அபிமானியாக்கி கொள்கிறது என்பதையும் நம்புகிறேன். தங்களின் எழுத்து என்னை வியாபித்ததை போல.

 

இறைவன் உங்களை ஆசிர்வாதத்தால் நிரப்புவாராக !

நன்றி…!

***

டியர் அருண்,

இது போன்ற கடிதங்கள் இப்போதும் தினமும் வந்து கொண்டிருக்கின்றன.  நான் தமிழில் எழுதுவதை நிறுத்தி விட்ட போதிலும் இதுவரை எழுதியதிலிருந்தே நீங்கள் எத்தனையோ விஷயங்களை அடைய முடியும்.  அதற்கு இந்தக் கடிதம் ஒரு சான்று.  வைரத்தைப் பார்த்து கண்ணாடி என்று நினைத்து அதில் சிறுநீர் கழிக்கும் மூடர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.  நன்றி அருண்.

சாரு

Comments are closed.