அமெரிக்காவில் இருக்க முடியவில்லை என்று இந்தியாவுக்குத் திரும்பி வரும் நண்பர்களை நான் எப்போதுமே வியப்புடன் பார்ப்பது வழக்கம். இந்தியா மனிதர்கள் வாழ முடியாத ஒரு இடமாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன. இதற்கு எல்லோரும் எப்போதும் அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சாட்டுவதைப் பார்க்கிறோம். ஆனால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல; ஒவ்வொரு பிரஜையும் இந்த இழிநிலைக்குக் காரணம். சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது நாம் வாகனத்தை நிறுத்தி வைத்திருக்கும் தருணத்தில் நம் பின்னாலிருந்து தொடர்ந்து ஹார்ன் அடிப்பவனும் அரசியல்வாதியை விட மோசமானவன் தான். மனிதர்களை விலங்குகளைப் போல் நடத்தும் இடங்களில் முதல் இடம் வகிப்பது, போலீஸ் ஸ்டேஷன் அல்ல; மருத்துவமனைகளே என்பது என் கருத்து. இரண்டாவது இடம், கல்விக் கூடங்கள். அப்புறம் தான் போலீஸ் ஸ்டேஷன்.
அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய ஒரு பெண்ணுக்கு ஒரு மருத்துவரின் அலட்சியத்தால் நேர்ந்த மரணத்தையும், அந்தப் பெண்ணின் கணவர் (பெயர் சாஹா) அந்த மருத்துவருக்கு எதிராக எடுத்த சட்ட நடவடிக்கை பற்றியும் ஒரு நேர்காணல் வந்துள்ளது. சமஸ் எடுத்த பேட்டி அது. மனிதர் வாழ லாயக்கற்ற இடம் இந்தியா என்பதற்கு ஒரு உதாரணம் அந்த நேர்காணல். இன்னொன்றையும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அலோபதி மருத்துவமனைகளை கூடிய வரை புறக்கணியுங்கள். சொல்லப் போனால் மருந்துகளையே புறக்கணிக்கலாம். அதற்கான வழிகளை என் எழுத்துக்களில் நீங்கள் காணலாம்…
Comments are closed.