ஆர்மோனியா ஸோமர்ஸ்

பிழை திருத்தம் பிழை திருத்தம் என்று நான் உயிரை விடுவது இதற்காகத்தான்.  ஆர்மோனியா ஸோமர்ஸ் என்னுடைய மூல நூலிலேயே ஆர்மீனியா ஸோமர்ஸ் என்று இருந்ததால் அதுவே அடுத்தடுத்த பதிப்பிலும் அப்படியே வந்து விட்டது.  சமயங்களில் நாம் சரியாக எழுதியிருந்தாலும் பத்திரிகைகளிலும் பதிப்பகங்களிலும் பணிபுரியும் அன்பர்கள் திருத்தம் செய்வார்கள்.  அது என்ன ஆர்மோனியா?  தப்பு.  ஆர்மீனியா தான் சரி.  இந்தப் பிழை பற்றி பல நண்பர்கள் விரிவாகக் கடிதம் எழுதியிருந்தார்கள்.  அனைவருக்கும் நன்றி.   இந்தப் புதிய பதிப்பில் திருத்தி விடுகிறேன்.  ரிஷான் ஷெரீபின் கடிதம் கீழே:

அன்பின் நண்பருக்கு,
வணக்கம்.
இன்று உங்கள் ‘ஆர்மீனியா ஸோமர்ஸ்‘ பற்றிய பதிவு பார்த்தேன். அவரைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் பரவலாக இருக்கின்றன. விக்கிப்பீடியாவிலும்  இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் The Fall சிறுகதை அவரது The Naked Women சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது. இணைத்திருக்கும் pdf file இல் மேலதிக விபரங்கள்  உண்டு.
சிறுகதைத் தொகுப்பை  அமேசானில் வாங்கலாம்.
நீங்கள் அவரது பெயரை தவறுதலாக எழுதியிருப்பதால் இணையத்தில் கிடைத்திருக்காது என நினைக்கிறேன். இணைப்புக்களை கீழே தருகிறேன்.
விக்கிப்பீடியா
Armonía Somers
அமேசானில் வாங்க
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
01.04.2019