வரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…

திரைப்படங்களுக்கு வசனம் எழுதி சம்பாதிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  முதல் பிரச்சினை ஜால்ரா அடிக்க வேண்டும்.  என் நண்பர் ஒருவர் ஒரு படத்துக்கு வசனம் எழுதினார்.  முழுசாக அல்ல.  வசனத்தில் உதவி.  ஆனால் டைட்டிலில் பெயர் வந்தது.  அதுதான் பெரிய விஷயம்.  அவர் ஒரு படத்துக்கு முகநூலில் விமர்சனம் எழுதினார்.  அந்தப் படத்தின் இயக்குனர் இவர் வசன உதவி செய்த படத்தின் இயக்குனரின் நண்பர்.  உடனே இவருடைய இயக்குனர் அந்த விமர்சனத்தை நீக்கச் சொல்லி விட்டார்.  அது மட்டும் அல்ல; இனிமேல் அந்த இயக்குனர் சம்பந்தப்பட்ட பட விமர்சனம் எழுதக் கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டாராம்.  அரசு ஊழியர்கள் அரசாங்க அனுமதி இல்லாமல் எதுவும் எழுதக் கூடாது என்று ஒரு சட்டம் இந்தியாவில் உள்ளது.  ஜெயமோகன் அரசு ஊழியராக இருந்தவர்தான்.  அரசு ஊழியராக இருந்து கொண்டே புத்தகம் புத்தகமாக எழுதிக் குவித்தார்.  அரசாங்கம் பிரச்சினை ஒன்றும் தரவில்லை.  ஆனால் எனக்குப் பிரச்சினை இருந்தது.  தினமலரில் எழுதிய கதைகளுக்கே மெமோ கொடுத்து வருடாந்திர இங்க்ரிமெண்ட்டை ரத்து செய்தார்கள்.  நண்பரின் பட விமர்சனத்துக்குக் கிடைத்த எதிர்வினையைப் பார்த்த போது அதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.  (நண்பர் யார் என்று யூகத்தில் ஈடுபட வேண்டாம்.  கருந்தேள் ராஜேஷ் அல்ல என்று மட்டும் சொல்லி வைக்கிறேன்.)  ஆக, சினிமாவுக்கு வசனம் எழுதினால் சுதந்திரம் போய் விடும்.

இன்னொன்று.  எதற்காக வசனம் எழுதுகிறோமோ அது நடக்காது.  மன உளைச்சல்தான் ஏற்படும்.  அதாவது, வசனத்தை வாங்கிக் கொண்டு பணம் தர மாட்டார்கள்.  ஒரு பிரபலமான எழுத்தாளர் (ஜெ அல்ல) ஒரு படத்துக்கு வசனம் எழுதினார்.  அவர் சென்னை வரும் போதெல்லாம்  ஒவ்வொரு ரெமி மார்ட்டினாகக் கொடுத்தார்களாம்.  பணம்?  பட்டை நாமம்.  நான் ஒரு படத்துக்கு வசனம் எழுதினேன்.  ஆறு மாதம் காலி.  ஆனால் இயக்குனர் எனக்குக் கொடுத்த மரியாதை வார்த்தைகளில் சொல்லி மாளாது.  அப்படி ஒரு மரியாதை.  காரணம், என் எழுத்தை வாசித்தவர்.  ஆறு மாதம் முடிந்து ஒருநாள் எனக்கு முன்பணம் தருவதாகப் பேசப்பட்டது.  நாளை முன்பணம் தருகிறார்கள்.  அன்றைய தினம் காலை அந்தப் படத்தின் ஹீரோ தான் அந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக பத்திரிகை மூலம் அறிவிக்கிறார்.  அடப் பாவி!  ஒரு நாள் – ஒரே ஒரு நாள் – அந்த அறிவிப்பைத் தள்ளி அறிவித்துத் தொலைக்கக் கூடாதா?  முடிந்தது கதை.  அப்போதுதான் நினைத்தேன்,  நாம் எழுத்தை மட்டும்தான் கவனிக்க வேண்டும் என்று கடவுள் நினைக்கிறார் என்று.  அதோடு எனக்கும் சினிமாவுக்குமான ஆறு மாத பந்தம் முடிவுக்கு வந்தது.

ஏதோ தோன்றியது, எழுதினேன்.  சீலே -1, சீலே – 2 இரண்டு கட்டுரைகளுக்கு சரியான வரவேற்பு இல்லை.  எல்லா கட்டுரைகளுக்கும் பத்து இருபது வாசகர் கடிதம் வரும்.  இக்கட்டுரைகளுக்கு ஒரு கடிதம் கூட வரவில்லை.  வாசகர்களுக்கு சீரியஸ் எழுத்து பிடிக்கவில்லையா அல்லது வேறு என்ன காரணம் என்று தெரியவில்லை.  அக்கட்டுரைகளை நான் 1994-இல் என்னிடம் கணினியோ இண்டர்நெட் வசதியோ இல்லாத காலத்தில் எழுதினேன் என்பதுதான் அவற்றின் முக்கியத்துவம்.  நான்கு நெருங்கிய நண்பர்களிடம் கேட்டேன்.  நிர்மல் இன்னும் படிக்கவில்லை என்றார்.  மற்ற இருவரும் படித்து விட்டுப் பாராட்டினார்கள்.   இன்னொருவர் படிக்கிறேன் என்றார்.  எப்போது படிப்பார் என்று அவருக்கே தெரியாது.

ஆனாலும் உற்சாகமாக எழுதிக் கொண்டிருக்க ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.  பின்வரும் கடிதத்தைப் படியுங்கள்.  இதுவரை எனக்குத் தெரியாத வாசகர் – உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து இப்படி ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்.

Dear Charu,

First I want to thank you for being one of the few writers who shaped my thinking. I am your reader for more than 15 years and I am just 32. I am reading you from my school days. My first encounter was India Today discussion you had with Sundara Ramaswamy, Prabhanchan and Vasanthi, it was one of most aggressive negative commentary on Tamil Literature. Now your views have changed but that comments triggered me to look not only literature but life from a different perspective. (Subversive and Dionysian spirit were your terms I used during my college days to give me an intellectual look). Then I read Konal Pakkangal-1 from Penninghton Library Srivilliputtur (I am from Rajapalayam just a plug :)), I still considered it is a bible for introducing me to different music genres, movies and books. I want to write this letter after this many years is because of Camila Cabello and her songs and I am residing in Atlanta. Her songs are on loop especially Havana in my phone. Camila born in Havana but moved to US so she misses that place and this song also features Young Thug who is East Atlanta and it is a tough neighborhood and mostly dominated by Afro Americans. (Martin Luther King’s memorial is in East Atlanta and he was from that area). This is the undertone of this very special song, I cango in  details  later but now I don’t want loose track of this letter. I want to thank you for three most importnat things I’ve learnt from your writings.

Cultural: Giving respect and learning the culture thoroughly, in short, being a connoisseur. I am learning espanol and have learnt how to pronounce the Spanish names and words correctly. Still Tamil writers (famous ones too) call Borges (Forge) which is not only incorrect but a sort of disrespect to the language, to the writer and his writings. Similarly how to pronounce Cuba, Argentina, I remember still you’re made fun of for saying/ writing those.

Music: Don’t confine the music to boundaries, it is endless. For example you wrote about Billy Holiday in Tamil in 2000 (It is in Konal Pakkangal -1) before Shaji. Today I saw your Victor Jarra (pronounciation of J is another important learning from your writings) in your blog and your book ‘Kalagam, Kathal, Isai’ has most important but under appreciated music artists in the world.

Cinema: This is by far the greatest influence, how  I knew about Jodorowsky and Sanjines. No one in Tamil has written about them and you’ve suggested only Venkat Saminathan and yourself had watched those movies in Mandi House in Delhi. Now with internet every information can be gathered in early 2000’s your blog provided the outlook of world cinema from this youngster from deep south Tamil Nadu with limited faculties to explore.

Charu, Not only I am your reader; I have read most of the important tamil writers and world writers you’ve suggested. Llosa and Marquez are my favorite writers too, same is Ashokamitran and Thi.Janakiraman. Poets I’ve not crossed Tamil border but my favorite poets are Sukumaran and Francis Kiruba. Not a single day passes without reciting their words. Next time I will write in Tamil where my vocabulary is better however I tried to delay this letter this far which is probably 15+ years but I couldn’t anymore.

Thanks again for taking time to read this letter!

Sankaran Chakkaravarthi

***

வரம்பு மீறிய பிரதிகள் நூலின் பிழை திருத்தம் போய்க் கொண்டிருக்கிறது.  அதில் ஒரு கட்டுரை வரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்.  சில நைஜீரிய எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரை இது.  முக்கியமாக ஹெலோன் ஹபீலா (Helon Habila).  அவருடைய Waiting For an Angel என்ற நாவல் நாம் வாசிக்க வேண்டிய ஒன்று.  கென் ஸரோ வீவா (Ken Saro Wiwa)  என்ற எழுத்தாளரை நைஜீரியாவின் அதிபராக இருந்த ஜெனரல் ஸானி அபாச்சா என்பவன் தூக்கில் போட்டான்.  1993-இலிருந்து 1998-இல் அவன் சாகும் வரை நைஜீரியாவின் அதிபராக இருந்தான்.  அவன் ஆட்சியில் பல எழுத்தாளர்கள் கொல்லப்பட்டார்கள்.  ஒரு எழுத்தாளரின் பாக்கெட்டில் வோலே ஸோயிங்காவின் புகைப்படம் இருந்தது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.  அப்போது வோலே ஸோயிங்கா வெளிநாட்டில் இருந்தபடி அபாச்சாவைத் தாக்கி எழுதிக் கொண்டிருந்தார்.  Toni Can என்ற பத்திரிகையாளர் இப்போது லாகோஸில் இருக்கிறார்.  அவரும் எழுத்தாளர்தான்.  அவரையும் ஹபீலாவையும் சந்திக்க வேண்டும் என்று லாகோஸில் வசிக்கும் என் நண்பரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  அதற்காகவே லாகோஸ் போகலாம்.  மேற்கண்ட நைஜீரிய எழுத்தாளர்களைப் பற்றி 2004-இல் நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறேன்.  நைஜீரியாவின் மிகப் புகழ்பெற்ற ஒரு கவிஞர் Odia Ofeimun.

வரம்பு மீறிய பிரதிகள் நூலைத் தவற விடாதீர்கள்.  என்னுடைய நூல்களில் அது முக்கியமானது.  இன்னும் ஓரிரு வாரத்தில் ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து கிடைக்கும்.

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai